You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? - மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்

“என் அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டேன்”, என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை, தி.நகரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜய் பாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் அவரது வீட்டின் முன்பு விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு

    ஏற்கெனவே கடந்த 2019, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வருமானவரித் துறையினர், அமலாக்க துறையினர் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது அவரது வீட்டின் முன்பு விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதிமுக, பாஜக கூட்டணி முடிவு ஏற்பட்ட பின்னர் முதல் முறையாக விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

  2. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

    தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக இருக்கிறது. டெல்லியில் மத்திய தேர்தல் குழு தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இதேபோல அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாக இருக்கிறது.

  3. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் வழங்கும் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.