ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிட்டவருக்கு சீட் வழங்கிய அதிமுக - வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?
நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து 34 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
அதிமுக பட்டியலில் ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்து இரண்டே வாரங்களில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்.