ரஷ்ய அட்டூழியங்கள் எனக்கூறி ஐ.நா கூட்டத்தில் பட்டியல் வாசித்த ஸெலென்ஸ்கி

ரஷ்யர்களின் நடவடிக்கைகள் 'இஸ்லாமிய அரசு' என்ற பயங்கரவாதக் குழுவைப் போலவே இருந்தன. அதிபர் புதினின் பிரசாரம் தனது சொந்த வெறுப்பை யுக்ரேன் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் கொண்டு சேர்க்கிறது என்கிறார் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ.

    • பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், நார்வே, இராக்கில் உள்ள தூதரகங்கள்‌ மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள துணைத் தூதரகத்தை ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
    • இலங்கை, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், இலங்கை மத்திய வங்கியின் புதிய தலைவரை நியமிக்க உள்ளது.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்றத்தில், தற்போது நடைபெற்று வரும் பிரச்னை சம்பந்தமாக விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • இலங்கையின் நிதித்துறை செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொடுத்துள்ளார்.
    • இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து, அரசியல் குழப்பங்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம் நடத்தினர்.
    • கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார்.
    • யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பேசியுள்ளார்.
    • இலங்கை ஜனாதிபதி செயலக வளாகத்தை நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இளைஞர், இளம் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
  2. பாஜக உட்கட்சி மோதலில் பொறுப்பாளருக்கு கத்திக்குத்து

    கோவை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் அணி பொறுப்பாளர் ஜெயக்குமார் தன் கட்சியினரே தன்னை தாக்கியதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் 48 வயதான ஜெயக்குமார். இவர் அதே பகுதியில் ஜிபி என்கிற போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

    ஜெயக்குமார் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், "பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நான் அதில் போட்டியிட இருந்தேன்.

    ஆனால் எங்கள் கட்சியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி என்பவர்கள் நான் தேர்தலில் போட்டியிடக்கூடாது என கடந்த மார்ச் 30ஆம் தேதி என் ஸ்டுடியோவுக்கு வந்து என்னை மிரட்டி விட்டுச் சென்றனர்.

    அதற்கு நான் உடன்படாததால் கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி வேறு சில அடையாளம் தெரியாத நபர்களுடன் என் கடைக்கு வந்து என்னை கடுமையாக தாக்கினர்.

    கார்த்திக் என்னை கத்தியால் குத்தினார். மற்றவர்கள் கம்பியால் என் மண்டையை உடைத்தனர். தாக்கிய பிறகு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். காவல்துறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதல் சிசிடிவியில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  3. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஸெலென்ஸ்கி - ரஷ்ய அட்டூழியங்கள் எனக் கூறி நீண்ட பட்டியலை வாசித்த யுக்ரேனிய அதிபர்

    யுக்ரேனிய

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பேசியுள்ளார்.

    அப்போது அவர்ரஷ்யா தனது படையெடுப்பின் போது அட்டூழியங்களை நிகழ்த்தியதாகக் கூறி சில சம்பவங்களைப் பட்டியலிட்டார்.

    மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் அவரது உரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது அவர், ரஷ்ய வீரர்களின் "சந்தோஷத்திற்காக" மக்கள் தெருவில், அவர்களின் வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டனர், கிணறுகளில் வீசப்பட்டனர், சாலையின் நடுவில் டாங்கிகளால் நசுக்கப்பட்டனர்.

    ரஷ்யர்களின் நடவடிக்கைகள் 'இஸ்லாமிய அரசு' என்ற பயங்கரவாதக் குழுவைப் போலவே இருந்தன. அதிபர் புதினின் பிரசாரம் தனது சொந்த வெறுப்பை யுக்ரேன் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் கொண்டு சேர்க்கிறது.

    மேலும், பாதுகாப்பு கவுன்சில் வழங்க வேண்டிய பாதுகாப்பு எங்கே என்று அவர் கேட்கிறார் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.

    "எங்கே அமைதி? ஐ.நா உத்தரவாதம் அளிக்க வேண்டிய அந்த உத்தரவாதங்கள் எங்கே?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    புச்சாவில் நடந்ததாகக் கூறப்படும் கொலைகள் தவிர, யுக்ரேனின் பிற பகுதிகளில் ரஷ்ய ராணுவம் இன்னும் என்னென்ன போர்க்குற்றங்களைச் செய்திருக்கும் என்பதை உலகம் இன்னும் பார்க்கவில்லை என்றும் ஸெலென்ஸ்கி பேசினார்.

    "புவியியல் வேறுபட்டதாகவோ பலவிதப்பட்டதாகவோ இருக்கலாம், ஆனால் கொடுமை ஒன்றுதான், குற்றங்கள் ஒன்றே," என்று அவர் கூறினார்.

  4. இலங்கையில் நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி 24 மணி நேரத்தில் பதவி விலகியது ஏன்?

    இலங்கையில்

    பட மூலாதாரம், PRESIDNETS MEDIA SRI LANKA

    படக்குறிப்பு, இலங்கை

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் புதிய நிதியமைச்சர் அலி சப்ரி 24 மணி நேரத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரர் பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதையடுத்து, அலி சப்ரியை நாட்டின் புதிய நிதி அமைச்சராக திங்கட்கிழமை நியமித்தார் ஜனாதிபதி.

    ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அலி சப்ரி, தற்காலிகமாக இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக எழுதியுள்ளார்.

    இந்த கடுமையான நிலைமையை சமாளிக்க புதிய நிதியமைச்சர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    திங்களன்று கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட நான்கு புதிய அமைச்சர்களில் அலி சப்ரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  5. விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

    தீப்பெட்டி

    சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் மருதுபாண்டியன் நகரில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான சரண்யா தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இன்று மாலை வழக்கம்போல் பணியாளர்கள் தீப்பெட்டி பண்டல்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, தீக்குச்சி மூட்டைகள் கொண்டு வந்து இறக்கும் போது உராய்வினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீப்பெட்டி பண்டல்களும் சேர்ந்து தீப்பற்றிக் கொண்டன.

    இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை.ஆனால் லட்சக்கணக்கான மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தீயில் எரிந்து கருகியது.

    தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  6. கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பினாலான பொருட்கள் கண்டுபிடிப்பு

    கீழடி

    கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில், இரும்பினாலான ஆணி, படிகமணி, தக்களி, ஆட்டக்காய்கள், தங்கத்திலான வளையல், தந்தத்திலான பகடைக்காய் ,சில்லுவட்டுகள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் மற்றும் பாசிகள் கிடைத்துள்ளன.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் இதுவரை 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் கிமு 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்திய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு இந்த வருடம் பிப்ரவரி மாதம் 8ஆம் கட்ட அகழாய்வு பணியினை தொடங்கியது. கீழடியில் தற்போது வரை மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு ‌பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்தக் குழிகளில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய இரும்பினாலான ஆணி, படிகமணி, தக்களி, ஆட்டக்காய்கள், தங்கத்திலான வளையல்கள், தந்தத்திலான பகடைக்காய்கள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் மற்றும் பாசிகள் கிடைத்துள்ளன.

  7. இலங்கை பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்? - 5 வாய்ப்புகள்

    இலங்கை

    பட மூலாதாரம், GETTY IMAGES

    பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது. நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்களும் எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இலங்கையில் அடுத்து நடக்கப் போவது என்ன? அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு எப்போது முடிவுக்கு வரும், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிற அடிப்படையில் அடுத்த நடக்க வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து நிபுணர்கள் தங்களது கணிப்புகளைக் கூறி வருகின்றனர்.

    பொருளாதார நிபுணரும் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்க்காணல் அடிப்படையில், இலங்கையில் அடுத்து நடக்கப்போகும் 5 சாத்தியங்களை ஆராய்கிறது இந்தக் கட்டுரை. முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  8. இலங்கை சாலைகளில் உள்ள பிச்சைக்காரர்களின் தற்போதைய நிலை என்ன?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. இலங்கையில் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகள்

    இலங்கை

    பட மூலாதாரம், Getty Images

    • பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், நார்வே, இராக்கில் உள்ள தூதரகங்கள்‌ மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள துணைத் தூதரகத்தை ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
    • இலங்கை, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், இலங்கை மத்திய வங்கியின் புதிய தலைவரை நியமிக்க உள்ளது.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்றத்தில், தற்போது நடைபெற்று வரும் பிரச்னை சம்பந்தமாக விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • இலங்கையின் நிதித்துறை செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொடுத்துள்ளார்.
    • இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து, அரசியல் குழப்பங்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம் நடத்தினர்.
    • கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார்.
    • இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து 44 எம்.பிக்கள் தனித்து செயல்படுவதாக அறிவித்தனர்.
    • இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவித்தார்.
    • இலங்கை அரசின் கூட்டணிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், பிபிசி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் கூடியது.
    • இலங்கை ஜனாதிபதி செயலக வளாகத்தை நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இளைஞர், இளம் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
  10. யுக்ரேன் போர்: இன்றைய சமீபத்திய நிலவரம் என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    நீங்கள் இப்போதுதான் எங்களுடன் இந்த நேரலை பக்கத்தில் இணைந்திருந்தால், யுக்ரேன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் இதோ:

    • யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு பேசவுள்ளார். மேலும் ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் குறித்த கூடுதல் ஆதாரங்களை தனது உரையின்போது அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ரஷ்ய படைகள் தங்களின் "போர்க் குற்றங்களின்" தடயங்களை மறைக்க முயற்சிப்பதாகவும், தலைநகர் கீயவுக்கு அருகே புச்சாவில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாகவும் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதை ரஷ்யா மறுக்கிறது.
    • ஐரோப்பிய ஒன்றியம் நாளை ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கும் என்று தெரிகிறது. தலைநகர் கீயவைச் சுற்றியுள்ள நகரங்களில் உள்ள வீதிகளில் கிடக்கும் உடல்களின் காட்சிகள் வெளிவந்துள்ள நிலையில், தமது எதிர்வினையை ஐரோப்பிய ஒன்றியம் ஆற்றக்கூடும் என தெரிகிறது.
    • ரஷ்யாவிற்குத் தொடர்ந்து செலுத்தப்படும் உங்களுடைய பணம் மீது ரத்தக்கறை படரும் என்பதால் அந்நாட்டுடன் ஆன அனைத்து வணிக உறவுகளையும் துண்டிக்குமாறு ஐரோப்பிய அரசாங்கங்களை யுக்ரேனிய தலைநகர் கீயவின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ வலியுறுத்தியுள்ளார்.
    • ஜெர்மனி உள்பட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிவாயுவை நம்பியிருக்கின்றன. அந்நாட்டில் இருந்து மிக அதிகமான அளவில் அவை எண்ணெய் கொள்முதல் செய்கின்றன. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ரஷ்யா போருக்கு பயன்படுத்துவதாக யுக்ரேன் கூறுகிறது.
    • இத்தாலி, டென்மார்க், ஸ்வீடன் ஆகியவை புச்சாவில் நடந்த படுகொலைகள் பற்றிய படங்கள் வெளிவந்த நிலையில் தங்களுடைய நாடுகள் உள்ள ரஷ்ய ராஜீய அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கேட்டுக் கொண்டுள்ளன.
  11. "கார்ப்பரேட்டில் வேலை செய்தவர் அமைச்சராக உள்ளார்" - நிதியமைச்சரை குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

    கடும்

    பட மூலாதாரம், கடும்

    கடும் விலைவாசி உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, "வடிவேலு காமெடியை போல தி.மு.க ஆட்சி நடக்கிறது.

    வடிவேலு காலையில் பயபக்தியுடன் கிளம்புவதும், இரவில் மதுபானம் அருந்திவிட்டு வருவதும் போல, வாக்கு சேகரிக்கும் போது பயபக்தியுடன் வந்த திமுக, தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்துகொண்டு மக்கள் நலனில் அக்கறை காட்டாது உள்ளது", என்றார்.

    "தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி ஒன்று, ஆனால் நடப்பது ஒன்றாக உள்ளது.

    திமுக ஆட்சியில் விலைவாசி எல்லாவற்றிலும் உயர்கிறது. கார்ப்பரேட்டில் வேலை செய்த மதுரையைச் சேர்ந்தவர் அமைச்சராக உள்ளார். அவருக்கு ஏழை, எளிய மக்கள் நிலை தெரியுமா? அதனால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது.

    ஆனால் அம்மா ஆட்சியிலும், எடப்பாடியார் ஆட்சியுலும் அப்படி நடக்கவில்லை. பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவந்தார்கள். யாரும் பசியோட இருக்க வேண்டாம் என பல திட்டங்களை கொண்டுவந்தனர்."

    மேலும் பேசுகையில், "வரி உயர்வை தி.மு.க அரசு அதிகப்படுத்தியுள்ளது. தி.மு.கவினர் குடும்பத்தோடு சுற்றுலா சென்றீர்கள். நீட் தேர்வு விலக்கு, 7 பேர் விடுதலை என்ன ஆட்சு ? இலவச பேருந்து என கூறிவிட்டு சில பேருந்துகளில் மட்டும்தான் செயல்படுத்தப்படுகிறது.

    தி.மு.க எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பட்டினி பசிதான் ஏற்படும். தெர்மாகோல் திட்டப் பொறியியல் செயல்படுத்தியது தவறு, அதை கிண்டல் செய்தார்கள். ஆனால் மின்சாரத்தில் அணில் சென்றது, அமைச்சர் பிப்ரவரி என்று சொன்னதெல்லாம் கிண்டல் ஆகவில்லை. மதுரைக்காரர்கள் சொன்னால் அதற்கு மட்டும் கிண்டலா?

    தி.மு.க ஆட்சியில் பாலியல் தொல்லை, கட்ட பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது. காவல்துறையினருக்கு தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

    மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவோம். மதுரை மாநகராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வைரமாக ஜொலிப்பார்கள்", என்று குறிப்பிட்டார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, மூன்று நாடுகளில் உள்ள தூதரகங்களை மூடுகிறது இலங்கை - வெளியுறவுத்துறை

    பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், நார்வே, இராக்கில் உள்ள தூதரகங்கள்‌ மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள துணைத் தூதரகத்தை ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    இலங்கை

    பட மூலாதாரம், mfa.gov.lk

  13. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இரவு 7.30 மணிக்கு உரையாற்றுகிறார் ஸெலன்ஸ்கி

    யுக்ரேனிய

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்திய நேரப்படி இரவு சுமார் 7.30 மணியளவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பேசவுள்ளார்.

    ரஷ்யா அதன் படையெடுப்பைத் தொடங்கிய பிறகு முதல் முறையாக யுக்ரேனின் புச்சா பகுதிக்கு நேற்று சென்று கள நிலைமையை பார்வையிட்டார் ஸெலென்ஸ்கி.

    அங்கே வீதிகளில் மக்களின் சடலங்கள் கிடப்பதை பார்த்த அவர், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யுக்ரேனியர்களை ரஷ்ய படைகள் இனப்படுகொலை செய்ததாக அவர் குற்றம்சாட்டினார், மேலும் யுக்ரேனிய தலைநகர் கீயவுக்கு அருகே உள்ள பகுதிகளிலிருந்து ரஷ்ய படையினர் பின்வாங்கிய பிறகு அவை முகாமிட்டிருந்த இடங்களில் மோசமான காட்சிகள் இன்னும் வெளிவரக்கூடும் என்று ஸெலென்ஸ்கி எச்சரித்தார்.

    அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளும் ரஷ்யா போர்க் குற்றங்களைச் செய்ததற்காக குற்றம்சாட்டுகின்றன.

    ஆனால், புச்சா மற்றும் வடக்கு யுக்ரேனின் பிற இடங்களில் பொதுமக்களை இலக்கு வைத்ததாக கூறப்படுவதை ரஷ்யா மறுத்துள்ளது. பொதுமக்களை ரஷ்ய படையினர் கொல்லவில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை ஐ.நா.விடம் தருவதாகவும் ரஷ்யா உறுதியளித்துள்ளது.

  14. "யுக்ரேனில் இருந்து கடைசி இந்தியரை மீட்கும் வரை இந்தியா தனது தூதரகத்தை செயல்படுத்தியது"- மத்திய அமைச்சர்

    யுக்ரேனில் பல நாடுகள் தங்கள் தூதரகங்களை மூடிவிட்டன. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஆனால் இந்தியா மட்டுமே, கடைசி இந்திய குடிமகன் திரும்பக் கொண்டு வரப்படும் வரை தனது தூதரகத்தை செயல்படுத்தியது என இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. இலங்கையில் தேசிய அரசு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையுமா?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுநர் குழுவை அறிவித்த மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க 13 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய முதலமைச்சர் குழுவினை அமைத்து, மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுநராக பதவியேற்கும் விழா நந்தலால் வீரசிங்க

    புதிய ஆளுநராக

    பட மூலாதாரம், CENTRAL BANK OF SRI LANKA

    இலங்கை, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், இலங்கை மத்திய வங்கியின் புதிய தலைவரை நியமிக்க உள்ளது.

    மத்திய வங்கியின் ஆளுநராக வரும் வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக, பி.நந்தலால் வீரசிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.

    அதிகரித்து வரும் விலையேற்றம் மற்றும் மின்வெட்டுகளை எதிர்த்து பெருகிவரும் மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில், மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவார்ட் கப்ரால் திங்களன்று ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நந்தலால் வீரசிங்கவின் நியமனம் பற்றி இலங்கை மத்திய வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், இந்த முடிவுக்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என மத்திய வங்கியின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள நந்தலால் வீரசிங்கவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிபிசியிடம், தனக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தாம் சம்மதித்ததாகவும் தெரிவித்தார்.

    “நான் (ஏப்ரல்) 7ஆம் தேதி இலங்கை சென்று, மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ளேன்", என்று கூறினார்.

    ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி சம்பந்தமாக தனது திட்டங்களையோ அல்லது வட்டி விகிதங்கள் எப்போது தீர்மானிக்கப்படும் என்பதையோ குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கையில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்றத்தில், தற்போது நடைபெற்று வரும் பிரச்னை சம்பந்தமாக விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

  19. இலங்கை பொருளாதார நெருக்கடி: “அமைச்சு பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளமாட்டோம்” - கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்

    ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்

    அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளிடமும் விடுத்த கோரிக்கையை தாங்கள் நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

    பிபிசி தமிழிடம் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதனை தெரிவித்தார். முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்

  20. கடும் மழைக்கு மத்தியிலும், இலங்கை நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்