ரஷ்ய அட்டூழியங்கள் எனக்கூறி ஐ.நா கூட்டத்தில் பட்டியல் வாசித்த ஸெலென்ஸ்கி
ரஷ்யர்களின் நடவடிக்கைகள் 'இஸ்லாமிய அரசு' என்ற பயங்கரவாதக் குழுவைப் போலவே இருந்தன. அதிபர் புதினின் பிரசாரம் தனது சொந்த வெறுப்பை யுக்ரேன் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் கொண்டு சேர்க்கிறது என்கிறார் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆ. லட்சுமி காந்த் பாரதி
சொத்து வரி உயர்வு: போராட்டம் நடத்தும் அதிமுக - அமைச்சர் நேரு மீண்டும் விளக்கம்
பட மூலாதாரம், ADMK IT WING
தமிழ்நாட்டில் சொத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேவேளை 7 சதவீதத்தினருக்கு மட்டுமே 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், `மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள 15 ஆவது நிதிக்குழு, 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும்.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது'' என்று கூறப்பட்டிருந்தது. முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்
வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கையில் நிதித்துறை செயலாளர் ராஜிநாமா
இலங்கையின் நிதித்துறை செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொடுத்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நேற்றைய தினம் தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், நிதித்துறை செயலாளரும் ராஜிநாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
"நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். அதுதான் எங்களுடைய லட்சியம், இலக்கு"- மு.க.ஸ்டாலின்
"இந்திய நாடே சமத்துவ நாடாகவும், சமூக இந்திய நாடாக மாறவேண்டும். இதற்கு தமிழ்நாடும், திராவிட மாடலும் தொடர்ந்து வழிகாட்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் மேடையில் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கொழுவாரி ஊராட்சியில் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமத்துவபுரத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
அப்போது மேடையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். அதுதான் எங்களுடைய லட்சியம், இலக்கு", என்று பேசினார்.
"குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வாழ்வார்கள் என்ற நிலையில்லாமல், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒற்றுமையோடு வாழவேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
அந்த விருப்பத்தின் அடையாளமாக 1997ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை, கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார்.
அனைத்துவிதமான முற்போக்குக்குரிய, புரட்சிகரமாக, நாட்டுக்கு முன்னோடியாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் தான் இத்தகைய சமத்துவபுரம் உருவாகியிருக்கிறது.
இதுதான் சமத்துவத்தை பேசிக் கொண்டிருக்கின்ற திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்," என்றும் கூறினார்.
"பல்வேறு சமத்துவபுரங்களில் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த 90 விழுக்காடு குடும்பத்தினர் அதே வீடுகளில் இன்று வரை ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பது எனக்கு கிடைத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி. இதுவே மக்கள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டதற்கு சாட்சியாக இருக்கிறது.
இத்தகைய உயர்ந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்ட சமத்துவபுரம் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்கப்படவில்லை.
இதனால், சமத்துவபுரங்கள் எங்காவது பழுது இருந்தால், அதை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விடக்கூடாது என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் தெரிவித்தபடி தற்போது சீரமைத்து வருகிறேன்," என்று குறிப்பிட்டார்.
யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 165 குழந்தைகள் இழந்துள்ளதாக தகவல்
பட மூலாதாரம், Reuters
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து யுக்ரேனில் 165 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர்-ஜெனரல் அலுவலகத்தை (PGO) மேற்கோள் காட்டி இன்டர்ஃபாக்ஸ்(Interfax) யுக்ரேன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 266 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்ட புகைப்படத்தொகுப்பு
பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசியல் குழப்பங்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்திய கிறிஸ்தவ பாதிரியார்கள்
பட மூலாதாரம், Getty Images
பட மூலாதாரம், Getty Images
சொத்து வரி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர் பேசியதற்கு அமைச்சர் கே.என். நேரு பதில்.
''சீமைக்கருவேல மரங்களை வெட்டாதீர்கள், அதுதான் எங்கள் வாழ்வாதாரம்''- ராமநாதபுரம் விவசாயிகள்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷவை அதிபர் பதவியில் இருந்து நீக்க முடியுமா?
பட மூலாதாரம், AFP
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர். இப்படியொரு ஆளுங் கூட்டணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் விலகி சுயேச்சையாகச் செயல்படப் போவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள்.
இப்போது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, அவரை எதிர்க்கட்சிகளால் பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பதை இந்தக் கட்டுரையில் சுருக்கமாக படிக்க இங்கே சொடுக்கவும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நிதி அமைச்சராக பதவியேற்று 24 மணி நேரத்தில் பதவி விலகிய இலங்கை அமைச்சர்
இலங்கையில் நிதி அமைச்சராக பதவியேற்று அலி சப்ரி 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்ற சூழலில், பிரதமர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்பு நேற்று , நிதி அமைச்சராக அலி சப்ரி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகிய நான்கு அமைச்சர்கள் நேற்று பதவிகளை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வீதியில் இறங்கிய மக்கள்; ஜனாதிபதியை பதவி விலக கோரி வலுக்கும் போராட்டம்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்தது ஆளும் கூட்டணி
பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால், ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் தொடர்ந்து விலகி வருகின்றன. இதனால், பெரும்பான்மையை ராஜபக்ஷ அரசு இழந்துள்ளது.
இலங்கை மக்கள் பெரிய அளவிலான பிரச்னைக்கு சபையில் யாரும் இல்லை என போராட்டங்களை ஆரம்பித்து, நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் சூழ்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கூடியுள்ளது. நாடாளுமன்றம் கூடிய வேளையில், அமைச்சர்கள் இல்லாமை குறித்து எதிர்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டன.
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு பதில் வழங்க சபையில் எவரும் கிடையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
எனினும், அனைத்து பிரச்னைகளுக்கும் பதிலளிக்கும் பொறுப்பு பிரதமர் வசம் காணப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார். எனினும், பிரதமரே செய்வதறியாதுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க, சபாநாயருக்கு பதிலளித்தார்.
அடுத்தடுத்து விலகும் கூட்டணிக் கட்சிகள்
இலங்கையில் ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 10 கட்சிகள், கடந்த சில காலமாகவே சுயாதீனமாக செயற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறுகின்றார்.
இந்த 10 கட்சிகளை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொடர்ச்சியாகவே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதியும் விலகல்
இதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளது.
தமது கட்சியிலுள்ள 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று முதல் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்நிலையில் ஆட்சியிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் கூட்டணி வகித்த கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று (05) முதல் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக சபையில் அறிவித்தனர். இதன்படி, அரசாங்கம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை இழந்துள்ளது.
வணக்கம் நேயர்களே
நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை ஜோ மகேஸ்வரன் வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
இலங்கை ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் தொடர்ந்து விலகல்:44 எம்.பிக்கள் தனித்து செயல்பட முடிவு
பட மூலாதாரம், Getty Images
இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து 44 எம்.பிக்கள் தனித்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கையில் ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 10 கட்சிகள், கடந்த சில காலமாகவே சுயாதீனமாக செயற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறுகின்றார்.
இந்த 10 கட்சிகளை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொடர்ச்சியாகவே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளது. தமது கட்சியிலுள்ள 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று முதல் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு தமது கட்சி பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், அரசாங்கம் அதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அவர கூறுகின்றார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தை விட்டு வெளியேறி, நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இன்று காலை அறிவித்திருந்தார். இது மொத்தம் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த 44 எம்.பிக்கள் தனித்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆர்ப்பாட்டம்: சொத்து வரி உயர்வைக் கண்டித்து சென்னையில் ஓபிஎஸ், திருச்சியில் இபிஎஸ் பங்கேற்றனர்
தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.
திருச்சி ரயில்வே சந்திப்பு அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி ப.குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
மக்களைப் பாதிக்கும் வகையில் 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி, முழக்கமிட்டனர்.
மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.
தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக வேண்டியது அவசியம் ஏன் ?, க.சுபகுணம்
"திருமணம் செய்துகொண்ட பலரும் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அதேபோல் தன்பாலின தம்பதிகளாக இணைந்து, ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, நல்ல பெற்றோராக வளர்க்க எங்களுக்கும் ஆசையாக உள்ளது. அந்த உரிமையை சட்டப்பூர்வ திருமணம் அளிக்கும்."
கார்த்தி இதுகுறித்துக் கூறும்போது அவருடைய குரலில், பொதுச் சமூகத்தில் மாற்றுப் பாலினத்தில் திருமணம் செய்துகொண்டவர்களுக்குக் கிடைக்கக்கூடிய குடும்பம் என்ற அங்கீகாரத்திற்கான ஏக்கம் ஒலித்தது. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்
இலங்கை நெருக்கடி: பெரும்பான்மையைக் காட்டினால் ஆட்சி அதிகாரத்தை அளிக்க தயார் - கோட்டாபய ராஜபக்ஷ
பட மூலாதாரம், Getty Images
இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் பெரும்பான்மையை காண்பிப்போருக்கு ஆட்சி அதிகாரத்தை அளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.
அதேவேளை, அமைச்சரவை ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
''இதுவரை காலமும் எதிர்கட்சிகள் கூச்சலிட்டார்கள். தற்போது அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்" என பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 138 பேர் நேற்றைய சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதேவேளை, இலங்கையில் தற்போது ஆட்சி செய்ய தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் தரப்புடன் இணைந்து செயற்பட தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்மர சம்பத் தஸநாயக்க தெரிவிக்கின்றார்.
இதேவேளை, நாட்டை நிலைகுலைய செய்வது தனது தேவை கிடையாது என ஜனாதிபதி இந்த சந்திப்பில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஆளும் கூட்டணியில் 18 எம்.பி.க்கள் சுயேச்சையாக செயல்பட முடிவு
பட மூலாதாரம், Getty Images
இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவித்தார்.
ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 10 கட்சிகள், கடந்த சில காலமாகவே சுயாதீனமாக செயற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த 10 கட்சிகளை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொடர்ச்சியாகவே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதேவேளை, ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தை விட்டு வெளியேறி, நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இன்று காலை அறிவித்திருந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இதன்படி, ஆளும் தரப்பைச் சேர்ந்த 18 பேர் இன்று முதல் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெருக்கடியான சூழலில் கூடியது இலங்கை நாடாளுமன்றம்
பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியிருக்கிறது.
அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில் அந்தக் குரல்கள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியைக் கலைக்க அமெரிக்கா முயன்றதா? சில கேள்விகளும் பதில்களும்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைவிதியை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அடுத்து நிகழும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அரசியலில், நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் நேற்று நடந்தது என்ன? பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தது ஏன்? உள்ளிட்ட விரிவான செய்திக்கு இங்கேசொடுக்கவும்