"மக்களின் நம்பிக்கையே இந்த வெற்றி" - டெல்லியில் நரேந்திர மோதி உரை

மத்திய, மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த ஆட்சி நிர்வாகம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த வெற்றி என்று கூறியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. மணிப்பூர் தேர்தல்: பாஜக முன்னிலை

    மணிப்பூர் தேர்தல்

    மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆரம்பகட்ட நிலவரப்படி, பாஜக கூட்டணி 12 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் மற்றவை 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  2. உத்தராகண்ட் தேர்தல்: பாஜக கூட்டணி 24 இடங்களில் முன்னிலை

    உத்தராகண்ட் தேர்தல்

    காலை 9 மணி நிலவரப்படி, உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 24 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  3. 5 மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை நிலவரம். முந்துவது யார்? பிபிசி தமிழ் நேரலை

  4. பஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி 33 இடங்களில் முன்னிலை

    பஞ்சாப் தேர்தல் முடிவுகள்

    பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்ட நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    அதேவேளையில், காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

    காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும் சிரோமணி அகாலி தளம் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

    பாஜக கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

    117 தொகுதிகள் அடங்கிய பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

  5. உத்தரப் பிரதேச தேர்தல் ஆரம்பகட்ட நிலவரம்: பாஜக முன்னிலை

    உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளில், பாஜக 16 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  6. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள்: வெற்றி, முன்னிலை நிலவரம் என்ன?

    தேர்தல் முடிவுகள்

    தேர்தல் நடந்த 5 இந்திய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  7. "மக்கள் வெல்கின்றனர், ரவுடித்தனம் தோற்கிறது": உ.பி துணை முதல்வர்

    உத்தரப் பிரதேசத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், “மக்கள் வெல்கின்றனர், ரவுடித்தனம் தோற்கிறது” என, உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. கோயிலில் வழிபட்ட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

    பிரமோத் சாவந்த்

    பட மூலாதாரம், ANI

    கோவாவின் தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ தத்தா கோயிலில் வழிபட்டார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. உத்தரப் பிரதேச தேர்தல்: பாஜக-சமாஜ்வாதி கட்சி இடையே கடும் போட்டி

    உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கிறது. காலை 8.30 மணி வரை உள்ள முடிவுகளின்படி, சமாஜ்வாதி கட்சி 4 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

  10. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

    உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

    இந்த தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல்ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம் என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள்: நாடாளுமன்ற தேர்தலுக்கு அரையிறுதியா

    உத்தர

    பட மூலாதாரம், Getty Images

    ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியாயின. அதில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூரில் பாஜகவுக்கு சாதகமான நிலையும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பும், கோவாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நெருக்கமான போட்டி நிலவுவதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

    கிட்டத்தட்ட கருத்துக் கணிப்புகளை நடத்திய ஊடகங்கள் மற்றும் தனியார் நிறுவன ஆய்வுகளும் இதே கருத்துக் கணிப்புகளையே வெளியிட்டுள்ளன. அவை உண்மையாகுமா பொய்யாகுமா, அவற்றின் நம்பகத்தன்மை என்ன போன்ற விவாதங்கள் வழக்கம் போல இந்த முறையும் சில கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.

  12. 5 இந்திய மாநில தேர்தல் முடிவுகள் இன்று

    உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

    electronic voting machine

    பட மூலாதாரம், Getty Images

    உத்தராகண்டின் 70 தொகுதிகள் , பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள் மற்றும், கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில் ஒரே காட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

    மணிப்பூரின் 60 தொகுதிகள் இரு கட்டங்களாகத் தேர்தலைச் சந்தித்தன.

    உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.

    பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்டமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி ஏழாம் கட்டமாக நிறைவடைந்தது.

    இன்று காலை 11 மணியளவில் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் பெரும்பாலும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  13. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    நாங்கள் விக்னேஷ்.அ மற்றும் லட்சுமி காந்த் பாரதி.

    ஐந்து இந்திய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • யுக்ரேனில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டு யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி காணொளியை வெளியிட்டுள்ளார்.
    • உலகில் முதல்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணமடைந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட், 2 மாதங்கள் மட்டுமே அதனுடன் உயிர் வாழ்ந்துள்ளார்.
    • இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியது இந்திய உச்ச நீதிமன்றம்.
    • ரஷ்யா கைப்பற்றியுள்ள செர்னோபிள் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் எச்சரித்துள்ளது.
    • கடந்த சில தினங்களாக ரஷ்யாவின் வான்வழி தாக்குதலுக்கு உள்ளான சுமியிலிருந்து செவ்வாய்க்கிழமை சுமார் 7,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.