"மக்களின் நம்பிக்கையே இந்த வெற்றி" - டெல்லியில் நரேந்திர மோதி உரை

மத்திய, மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த ஆட்சி நிர்வாகம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த வெற்றி என்று கூறியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. வணக்கம் நேயர்களே!

    மார்ச் 10ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
    • ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராகவ் சதா, “பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி மக்கள் விழித்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கான மாற்று ஆம் ஆத்மி கட்சி” எனத் தெரிவித்தார்.
    • காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில், “மக்களின் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வென்றவர்களுக்கு வாழ்த்துகள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்,” எனத் தெரிவித்தார்.
    • "சட்டமன்ற தேர்தல் வெற்றி; மக்கள் மனங்களை வென்ற பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்துக்கள்" -அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
    • கோவா மாநிலத்தில் பா.ஜ.க 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 11 இடங்களில் வென்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதன்படி, பாஜக 32 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரப்படி, பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • உத்தர பிரதேச தேர்தலின் தற்போதைய நிலவரப்படி, பாஜக 254 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி, 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 1தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

    பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    முகப்பு பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.

  2. உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

    உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளன.

    உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

    பட மூலாதாரம், ECI

  3. உத்தர பிரதேசம்: சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரம்

    உத்தர பிரதேச தேர்தலின் தற்போதைய நிலவரப்படி, பாஜக 253 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

    சமாஜ்வாதி கட்சி, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    உத்தர பிரதேசம் தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரம்

    பட மூலாதாரம், ECI

  4. உத்தராகண்ட் தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம் என்ன?

    உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்தில் வெற்றி மற்றும் 1 இடத்தில் முன்னிலை என்ற நிலையில் உள்ளது. மற்ற இரண்டு தொகுதிகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளன.

    உத்தராகண்ட் தேர்தல் முடிவுகள் நிலவரம்

    பட மூலாதாரம், ECI

  5. காங்கிரஸ், பாஜக கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது எப்படி?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றது எப்படி? அதன் பின்னணி என்ன?

    பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சி

    பட மூலாதாரம், BHAGWANT MANN

    படக்குறிப்பு, பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சி

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதற்றக்கான பெரும்பான்மையை பெற்றிருக்கிறது.

    இதற்கான முக்கிய காரணங்களை, பிபிசி பஞ்சாபி சேவையின் ஆசிரியர் அதுல் சங்கர் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

  7. யோகி ஆதித்யநாத்தின் அரசியலை விவரிக்கும் சில படங்கள்

    யோகி ஆதித்யநாத் மக்களவை உறுப்பினராக இருந்தபோது அவர் மீது 2007ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் நடந்த கலவர சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான அரசின் ஆட்சி நடந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை தனக்கு அநீதி இழைக்கிறது என்று மக்களவையில் கூறினார். இது தொடர்பாக மக்களவையில் பேசும்போது, திடீரென்று யோகி ஆதித்யநாத் அழ ஆரம்பித்தார். அவரை மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் பாஜக எம்.பி.க்கள் சமாதானப்படுத்தினர்.

    யோகி ஆதித்யநாத்

    பட மூலாதாரம், Getty Images

    உத்தர பிரதேசத்தில் மஹந்த் ஆதித்யநாத் யோகி முதலமைச்சராக பதவியேற்றதும், மத பலம் மட்டுமின்றி அரசியல் அதிகாரமும் அவர் கைக்கு வந்தது. அதுவரை முதல்வர் யோகியின் பெயர், ஆதித்யநாத் ஜி மகராஜ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், அவரது பெயர் அரசு ஆவணங்களில் மஹந்த் என்றோ அல்லது மகாராஜ் என்றோ இடம் பெறவில்லை, முதல்வராக பதவியேற்ற பிறகும் காவி அங்கி அணிவதால் அவரது மத அடையாளம் மறையாமல் தொடர்கிறது. அவர் நாற்காலியின் பின்புறத்தில் ஒரு காவி துணியை எப்போதும் வைத்திருப்பார்.

    யோகி ஆதித்யநாத்

    பட மூலாதாரம், Getty Images

    உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்ற பிறகு பசு வதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கினார். மத மாற்றம் தொடர்பாக புதிய சட்டத்தை அமல்படுத்தினார். கோரக்பூர் எம்.பி ஆக யோகி, ஐந்து தனி நபர் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டம், இந்தியா என்ற பெயருக்கு பதிலாக ஹிந்துஸ்தான் என்று பெயர் மாற்றுதல், பசுவதைத் தடை, மதமாற்றம் தொடர்பான சட்டம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கோரக்பூர் பெஞ்ச் நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

    யோகி ஆதித்யநாத்

    பட மூலாதாரம், Getty Images

  8. சட்டமன்ற தேர்தலில் உ.பி துணை முதல்வர் தோல்வி!

    உத்தர பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, சிரத்து சட்டமன்ற தொகுதியில், சமாஜ்வாதி கட்சியின் பல்லவி படேலிடம் 7,337 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, 1,03,390 வாக்குகள் வித்தியாசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி!

    கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் 1,03,390 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சுபாவதி உபேந்திர தத் சுக்லாவை முதல்வர் யோகி ஆதித்யநாத் தோற்கடித்ததாக தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது.

    உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள்

    பட மூலாதாரம், ECI

  10. "பிரச்னை வாக்கு இயந்திரத்தில் இல்லை; மக்கள் மனதில் தான்" - ஆசாதுதீன் ஒவைசி

    அசாதுதீன் ஒவைசி

    பட மூலாதாரம், ANI

    "உத்தர பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் அம்மாநில மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளார்கள்," என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் எம்பி அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.

    அவர், "2019-ஆம் ஆண்டு முதல் நான் சொல்லி வருகிறேன். மின்னணு வாக்கு இயந்திரங்களில் பிரச்னை இல்லை. மக்களுடைய மனதில் தான் பிரச்னை உள்ளது," என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தேர்தலுக்காக தனது கட்சி கடுமையாக உழைத்ததாகவும் ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் ஒவைசி கூறினார். அதோடு, நாளை முதல் வேலையைத் தொடங்குவதாகவும் அடுத்த முறை "சிறப்பாகச் செயல்படுவோம்" என்றும் கூறியுள்ளார்.

    உத்தர பிரதேசத்தில் வாக்கு வங்கியாக மட்டுமே சிறுபான்மையினர் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார் ஒவைசி.

    லக்கிம்பூர் கேரி தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது. இது 80-20 விகிதத்திலான வெற்றி. இந்த நிலை பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.

    இன்னொருபுறம், ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சியின் எம்பி மனோஜ் குமார் ஜா, "தனிப்பட்ட விருப்பங்களைப் பொருட்படுத்தாமல் மக்களின் முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும்," என்று முடிவுகள் குறித்துக் கூறியுள்ளார்.

  11. மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் முடிவு: 32 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக

    மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக 32 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

    பட மூலாதாரம், ECI

  12. தேர்தல் முடிவுகளும்... கட்சிகளின் நிலைமையும்...

    ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்
  13. 26 வயதில் அமைச்சரான யோகி ஆதித்யநாத், முதல்வரான வரலாறு

    26 வயதில் அமைச்சரான யோகி ஆதித்யநாத், உண்மையில் யார்? அவருடைய பின்னணி என்ன?

    உத்தர பிரதேச முதல்வரின் கதையை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. "வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது" - குற்றம் சாட்டும் சமாஜ்வாதி கட்சி

    "வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது" - குற்றம் சாட்டும் சமாஜ்வாதி கட்சி

    பட மூலாதாரம், ANI

    உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 230 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    25 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 90 தொகுதிகளில் வெற்று பெற்றுள்ளதாகவும் 21 தொகுதிகளில் முன்னனிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சி தனது வேட்பாளர்களில் சிலர் வெற்றி பெற்றதாகவும் ஆனால் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

    சமாஜ்வாதி கட்சி அதன் ட்விட்டர் பக்கத்தில் வெற்றி பெற்றதாக சட்டமன்ற தொகுதிகளைப் பட்டியலிட்ட கடிதத்தை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சியின் "வெற்றி வேட்பாளர்களுக்கு" வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

    தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் சித்தார் நகரின் துமரியாகஞ்ச் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. பஞ்சாப், கோவா தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சி 92 இடங்களில் வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. பா.ஜ.க 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலி தளம் 3 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    பஞ்சாப், கோவா தேர்தல் முடிவுகள் அறிவிப்பு!

    பட மூலாதாரம், ECI

    கோவா மாநிலத்தில் பா.ஜ.க 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 11 இடங்களில் வென்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் மொத்தம் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

    பஞ்சாப், கோவா தேர்தல் முடிவுகள் அறிவிப்பு!

    பட மூலாதாரம், ECI

  16. "உ.பியை சாதிய பார்வையோடு பார்ப்பவர்கள் அதை அவமதிக்கிறார்கள்" - பிரதமர் மோதி

    பாஜகவுக்கு நான்கு மாநிலங்களின் தேர்தலில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்கான கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "ஏழை மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறும் வரை நான் ஓயமாட்டேன். உத்தர பிரதேசத்தை சாதியைப் பார்வையில் பார்ப்பவர்கள் அந்த மாநிலத்தை அவமதிக்கிறார்கள். ஆனால், மக்கள் மீண்டும் வளர்ச்சிக்காகவே வாக்களித்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் யுக்ரேனில் சிக்கியிருந்தபோது, சிலர் அவர்கள் மத்தியில் பாதுகாப்பின்மையை விதைத்து, அவர்களுடைய குடும்பங்களை வருந்த வைத்தார்கள்.

    வம்சாவளி அரசியல் முடிவுக்கு வரக்கூடிய நாள் வரும். அதை மக்கள் இந்தத் தேர்தலில் காட்டியுள்ளார்கள். அரசாங்கம் ஊழல் செய்பவர்களுக்கு எதிராகச் செயலாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், சிலர் அவர்களைப் பாதுகாப்பதற்காக முனைகிறார்கள்," என்று கூறினார்.

  17. பாஜகவின் வெற்றிக்கு என்ன காரணம்? எதிர்க் கட்சிகள் தவறவிட்டது எங்கே?

    நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது எப்படி? ஆம் ஆத்மி அலை பிற மாநிலங்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

    பிபிசி தமிழின் சிறப்பு நேரலை.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  18. "2022 தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்" - நரேந்திர மோதி

    நரேந்திர மோதி

    பட மூலாதாரம், Twitter /BJP4India

    பாஜகவுக்கு நான்கு மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்கான கொண்டாட்டம் பாஜக தலைமையகத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

    கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "இந்த நான்கு வெற்றியும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்களின் உழைப்புக்குக் கிடைத்தவை. பாஜகவுக்கு இந்த வெற்றியைச் சாத்தியமாக்கி, ஜனநாயக திருவிழாவில் பங்கெடுத்த அனைத்து வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.

    மேலும், "பாஜக உத்தராகண்டில் முதல்முறையாக ஒரே கட்சி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு மத்தியில் நாம் ஆட்சிக்கு வந்தபோது, 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் கிடைத்த வெற்றி அதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறினர். இப்போது அதே வல்லுநர்கள், 2022 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்ற தேர்தலின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் எனக் கூறுவார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

  19. "மோதியின் தலைமையை மக்கள் ஆதரிப்பதை இந்த வெற்றி காட்டுகிறது" ஜே.பி.நட்டா

    "மோதியின் தலைமையை மக்கள் ஆதரிப்பதை இந்த வெற்றி காட்டுகிறது" ஜே.பி.நட்டா

    பட மூலாதாரம், Twitter /BJP4India

    2022 ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றதற்கான கொண்டாட்டதில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, நான்கு மாநிலங்களில் கிடைத்த வெற்றி பிரதமர் மோதியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்குக் கிடைத்தது என்று கூறினார்.

    "இன்று வந்துள்ள தேர்தல் முடிவுகள், இந்திய அரசியலில் மோதி தலைமையின் கீழான ஆட்சியை தொடர்ந்து ஆதரிப்பதைக் காட்டுகிறது.

    கடந்த 37 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே கட்சி உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருகிறது. அதேபோல், உத்தராகண்டிலும் தொடர்ந்து ஆட்சி மாறிக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் மீண்டும் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளனர். மணிப்பூரில் தனிப் பெரும்பான்மையில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. கோவாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்படுகிறது," என்று கூறினார்.

  20. பாஜக தலைமையகம் வந்த நரேந்திர மோதி - வெற்றி உரை

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு