“நான் தீவிரவாதி அல்ல, இந்த நாட்டின் உண்மையான மகன் என நிரூபணமாகியுள்ளது”: கேஜ்ரிவால்

பட மூலாதாரம், @ArvindKejriwal
பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், தன் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசியபோது, பஞ்சாப் மக்கள் அதிசயங்களை நிகழ்த்தியிருப்பதாக தெரிவித்தார்.
“பஞ்சாபில் பெரிய தலைவர்களின் நாற்காலிகள் அசைக்கப்பட்டுள்ளன. கேப்டன் (அமரிந்தர் சிங்), சுக்பீர் சிங் பாதல், பர்காஷ் சிங் பாதல், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தோல்வியடைந்துவிட்டனர். சுதந்திரத்திற்கு பின்னர் இந்த அமைப்பு மாறாவிட்டால், எதுவுமே மாறாது என பகத் சிங் ஒருமுறை தெரிவித்தார்” என அவர் தெரிவித்தார்.
மேலும், “கடந்த 75 ஆண்டுகளாக இந்த அமைப்பு மாறவில்லை. மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக இவர்கள் வைத்திருந்தனர். நேர்மையான அரசியலை நாங்கள் தொடங்கினோம். பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் கனவுகள் நனவாகியுள்ளது. நாட்டை முன்னேற விடாமல் தடுக்கும் பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்து உள்ளன. அனைவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் பெரிய சதிகளை தீட்டி கேஜ்ரிவால் தீவிரவாதி என்று கூறினார்கள். இந்த முடிவுகள் மூலம், கேஜ்ரிவால் தீவிரவாதி அல்ல, இந்த நாட்டின் உண்மையான மகன், நாட்டுப்பற்று உடையவன் என இந்த நாடு தெரிவித்துள்ளது” என கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

















