வணக்கம் நேயர்களே!
மார்ச் 10ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
- ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராகவ் சதா, “பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி மக்கள் விழித்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கான மாற்று ஆம் ஆத்மி கட்சி” எனத் தெரிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில், “மக்களின் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வென்றவர்களுக்கு வாழ்த்துகள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்,” எனத் தெரிவித்தார்.
- "சட்டமன்ற தேர்தல் வெற்றி; மக்கள் மனங்களை வென்ற பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்துக்கள்" -அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
- கோவா மாநிலத்தில் பா.ஜ.க 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 11 இடங்களில் வென்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது.
- மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதன்படி, பாஜக 32 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரப்படி, பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- உத்தர பிரதேச தேர்தலின் தற்போதைய நிலவரப்படி, பாஜக 254 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி, 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 1தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.
















