நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி. இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும். இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.
- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முடிவடைந்தது.இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22தேதி நடக்கும்.
- இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள பேடிஎம் டி20 இன்னிங்ஸ் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான 18 வீரர்களின் பட்டியலை அனைத்திந்திய மூத்த தேர்வுக் குழு தெரிவித்துள்ளதாக பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. அந்தப் பட்டியலின்படி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
- மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பாஜக பூத் முகவர் அகற்ற வேண்டும் எனக் கூறியதால் வாக்குப்பதிவு சற்று நேரம் நிறுத்தப்பட்டது. பிற கட்சி முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இன்று மாலை அவரை மதுரை மாவட்ட காவல்துறை கைது செய்தது.
- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது படையெடுக்க முடிவு செய்துள்ளார் என்றும், வரும் நாட்களில் அந்த தாக்குதல் நடக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
- காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இந்திய துணை ராணுவத்தினர் இருவர் மற்றும் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டனர் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவிக்கிறது.
மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.