உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் குறைந்த வாக்கு சதவீதம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. சென்னையில் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விக்னேஷ். அ and க. சுபகுணம்

  1. நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி. இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும். இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.

    • தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முடிவடைந்தது.இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22தேதி நடக்கும்.
    • இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள பேடிஎம் டி20 இன்னிங்ஸ் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான 18 வீரர்களின் பட்டியலை அனைத்திந்திய மூத்த தேர்வுக் குழு தெரிவித்துள்ளதாக பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. அந்தப் பட்டியலின்படி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
    • மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பாஜக பூத் முகவர் அகற்ற வேண்டும் எனக் கூறியதால் வாக்குப்பதிவு சற்று நேரம் நிறுத்தப்பட்டது. பிற கட்சி முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இன்று மாலை அவரை மதுரை மாவட்ட காவல்துறை கைது செய்தது.
    • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது படையெடுக்க முடிவு செய்துள்ளார் என்றும், வரும் நாட்களில் அந்த தாக்குதல் நடக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    • காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இந்திய துணை ராணுவத்தினர் இருவர் மற்றும் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டனர் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவிக்கிறது.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. கோவை மாவட்டத்தில் 59.61 சதவீதம் வாக்குகள் பதிவு

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் 59.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதில் பேரூராட்சி பகுதிகளில் 73.83 சதவீதம் பேரும், நகராட்சி பகுதிகளில் 67.09 சதவீதம் பேரும், மாநகராட்சி பகுதிகளில் 53.61 சதவீதம் பேரும் வாக்கு செலுத்தியுள்ளனர்.

    மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளை காட்டிலும் பேரூராட்சி பகுதிகளிலேயே அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

  3. தருமபுரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியது

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கம்பைநல்லூர், கடத்தூர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம் ஆகிய 10 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

    காலை 9 மணி நிலவரப்படி தர்மபுரி நகராட்சியில் 9.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன .அதே போல 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சேர்த்து 11.06 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில், மாலை 3 மணியளவில் வாக்குப்பதிவு சதவீதம் 66.14 ஆக அதிகரித்திருந்தது.

    மாலை 5 மணி நிலவரப்படி. நகராட்சி பகுதிகளில் இது 77.68 சதவீதமாகவும், பேரூராட்சிகளில் 77.91 சதவீதமாகவும் மாவட்ட சராசரியாக 77.75 சதவீதமாகவும் இருந்தது.

    தர்மபுரியில் இறுதி கட்ட நிலவரமாக 80.49 சதவீதமாக பதிவாகியுள்ளது

  4. நாமக்கல் மாவட்டத்தில் 76.86 சதவீதம் வாக்குகள் பதிவு

    நாமக்கல் மாவட்டத்தில் 76.86 சதவீதம்வாக்குகள் பதிவு

    நகராட்சியில்குமாரபாளையம், பேரூராட்சியில்வெண்ணந்தூர் முதலிடம்...

    நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் குமாரபாளையம்என 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்கானதேர்தல் இன்று நடைபெற்றது.

    இதில் நாமக்கல் நகராட்சியில் 70.59 சதவீதம், ராசிபுரம் 75.91 சதவீதம், திருச்செங்கோடு 74.79 சதவீதம், பள்ளிபாளையம் 75.39 சதவீதம், குமாரபாளையம் 76.10 சதவீதம்வாக்குகள்பதிவாகியது.

    இதில் குமாரபாளையம் நகராட்சி முதலிடமும் நாமக்கல் நகராட்சி கடைசி இடமும் பிடித்துள்ளது.

    5 நகராட்சி, 19 பேரூராட்சிகளும்சேர்த்துமொத்தம் 76.86 சதவீதவாக்குகள்பதிவாகியுள்ளது.

  5. 5 மணி நிலவரம்: உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சிகளில் அதிக அளவில் வாக்குப்பதிவு

    ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65.67% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மாநகராட்சி பகுதியில் 56.17% வாக்குகளும், நகராட்சிகளில் 71.15% வாக்குகளும், பேரூராட்சிகளில் 74.42 வாக்குகளும் பதிவாகியுள்ளன. மாநகராட்சியை விடவும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அதிக அளவில் வாக்குப் பதிவாகியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 58.82% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் நகராட்சிகளில் 55.74% வாக்குகளும், பேரூராட்சிகளில் 62.92% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    திருப்பூர் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 58.52% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மாநகராட்சியில் 52.76% வாக்குகளும், நகராட்சிகளில் 64.78% வாக்குகளும், பேரூராட்சிகளில் 74.47% வாக்குகளும் பதிவாகியுள்ளன. மாநகராட்சியை விடவும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிக அளவில் வாக்கு பதிவாகியுள்ளது.

    கோவை மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 56 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இதில் மாநகராட்சியில் 48.79% வாக்குகளும் நகராட்சிகளில் 65.99% வாக்குகளும். பேரூராட்சிகளில் 72.44 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்திலும் மாநகராட்சியை விடவும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அதிக வாக்கு பதிவாகியுள்ளது.

  6. சேலம் மாவட்டத்தில் 70.54 சதவீத வாக்குப்பதிவு

    சேலம் மாநகராட்சியில் 60,வார்டுகள் 6 நகராட்சிகளில் 165 வார்டுகள், 31 பேரூராட்சிகளில் 474 வார்டுகள் என மொத்தம் 695 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 1514 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை காலை 9 மணி நிலவரப்படி மாநகராட்சி -12.49, நகராட்சி- 13.07, பேரூராட்சி -13.81 என சராசரியாக மாவட்டத்தில் 12.97 சதவீத வாக்குகள் பதிவாகின.அதேபோல காலை 11 மணி நிலவரப்படி மாநகராட்சி- 23.84, நகராட்சி -30.44, பேரூராட்சி -32.92 என மாவட்டத்தில் சராசரியாக 27.60 சதவீத வாக்குகள் பதிவாகின.மதியம் 1 மணி நிலவரப்படி மாநகராட்சி -36.80, நகராட்சி -48.72, பேரூராட்சி-51.60 என சராசரியாக 43.12 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மாலை 3 மணி நிலவரப்படிமாநகராட்சி-49.07, நகராட்சி-62.84, பேரூராட்சி-66.14 என சராசரியாக 56.37 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மாலை 5 மணி நிலவரப்படி மாநகராட்சி- 63.84, நகராட்சி - 76.41, பேரூராட்சி-78.36 மாவட்டத்தில் சராசரியாக 70.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மாலை 6 மணி நிலவரப்படி மாநகராட்சி- 64.36% நகராட்சி - 76.61% பேரூராட்சி-78.49 % மாவட்டத்தில் சராசரியாக 70.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

  7. எல்.முருகன் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி

    தேர்தல் அதிகாரிகள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை வாக்களிக்க அனுமதித்துள்ளார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக எல். முருகனின் பெயரில் யாரோ கள்ள ஓட்டு செலுத்தியதாக தெரிவித்திருந்தார் அண்ணாமலை

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. இலங்கை: யுத்த சாட்சியங்கள் அடிப்படையில், இரண்டாவது இடைக்கால அறிக்கை தயார்

    பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்ற போதிலும், யுத்தத்தின் போது உயிரிழந்த உறவினரை தனிப்பட்ட முறையில் நினைவுகூர அனுமதி வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

    2021 ஜனவரி 21ஆம் தேதி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸின் தலைமையில் இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

    இந்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை, 2021ம் ஆண்டு ஜுலை மாதம் 21ம் தேதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

    யுத்தத்தை எதிர்கொண்ட மற்றும் யுத்தம் தொடர்பான அனுபவங்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிக்கும் 75 பேர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில், 107 பக்கங்களுடனான இரண்டாவது இடைகால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை: யுத்த சாட்சியங்கள் அடிப்படையில், இரண்டாவது இடைக்கால அறிக்கை தயார்

    2015ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு கண்டறிந்த விடயங்களை உடன் விசாரித்து, அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது நட்ட ஈடு வழங்கவோ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும் யுத்தத்தின் போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட முறையில் அவரை நினைவுகூர அனுமதி வழங்கவும், ஆணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

    அத்துடன், ஜூன் மாதத்துக்குள் ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியுமென அதன் தலைவரும் உயர்நீதிமன்ற நீதியரசருமான ஏ.எச்.எம்.டீ. நவாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  9. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. சென்னையில் உள்ள வாக்குச்சாவடி அருகிலிருந்து நேரலை.

  10. கோவை: வாக்களிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள் போராட்டம்

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 5 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படும் நிலையில் 5 முதல் 6 மணி வரை கொரானா பாதிப்புக்கு உள்ளானவர்கள் வாக்களிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோவை மாநகராட்சியின் 80வது வார்டுக்கு உட்பட்ட புலியகுளம் புனித தெரசா நடுநிலைப் பள்ளி, மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடிகளில், தேர்தல் அதிகாரிகள் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பள்ளியை முற்றுகையிட்டிருக்கும் பொதுமக்கள்

    மாலை ஐந்து மணியுடன் பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தரப்பு கூறிய நிலையில் தங்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கோவையில் பல இடங்களிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடையே விசாரித்தபோது, சம்பளத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தும் கூட, இன்று தங்களைப் பணிக்கு வரச் சொல்லியிருந்ததால், கம்பெனி வேலையை முடித்து வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

  11. கோவை மாநகராட்சியில் இதுவரை 6,32,110 வாக்குகள் பதிவு

    தமிழகம் முழுவதும் மதியம் மூன்று மணி நிலவரப்படி 47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கோவை மாவட்டத்தில் 3 மணி வரை 40.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    கோவை மாநகராட்சியில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 6,32,110 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம், வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. கோவை பீளமேடு பகுதியில் தவழ்ந்து சென்று வாக்களித்த பாட்டி

    கோயம்புத்தூரிலுள்ள பீளமேடு பகுதியில் 75 வயதான பட்டியம்மாள் என்ற முதியவர், தவழ்ந்து சென்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் மதியம் ஒரு மணி நிலவரப்படி 35% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மிகுந்த ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். கோவை பீளமேடு பயணீர் மில் ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 75 வயதான பட்டியம்மாள் வாக்களித்தார். இவர் பீளமேடு ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருகிறார்.

    பட்டியம்மாள்
    படக்குறிப்பு, பட்டியம்மாள்

    இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் தவழ்ந்து சென்று தனது வாக்கை பதிவு செய்தார் பட்டியம்மாள்.

    இதுகுறித்து பேசிய பட்டியம்மாள், "நான் எனது 19 வது வயதிலிருந்து வாக்களித்து வருகிறேன். இதுவரை எந்தத் தேர்தலிலும் நான் வாக்களிக்க தவறியதே இல்லை. என்னால் பிறவியிலிருந்தே நடக்க முடியாது. என் உடன் பிறந்த சகோதரிகள் துணையோடு ஒவ்வொரு முறையும் எனது வாக்கினைத் தவறாமல் பதிவு செய்வேன். இது எனது ஜனநாயகக் கடமை. இன்றைய இளைய தலைமுறையினர் தவறாமல் வாக்களித்து அவரவர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்," என்றார்.

  13. "எல்.முருகன் வாக்கை கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டார்கள்" - அண்ணாமலை

    ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை வேறு யாரோ கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    "எல்.முருகன் வாக்கை கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டார்கள்" - அண்ணாமலை
  14. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா

    இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள பேடிஎம் டி20 இன்னிங்ஸ் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான 18 வீரர்களின் பட்டியலை அனைத்திந்திய மூத்த தேர்வுக் குழு தெரிவித்துள்ளதாக பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. அந்தப் பட்டியலின்படி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. 40 நாட்களில் 1,126 கிலோமீட்டர் மலையேற்றம் செய்த இந்திய வம்சாவளிப் பெண்

    கேப்டன் ப்ரீத் பிரிட்டன் ராணுவத்தில் பிசியோதெரபிஸ்ட் பணியில் இருக்கிறார். இவர் 40 நாட்கள், 7 மணிநேரம், 3 நிமிடத்தில் 1,126 கிலோமீட்டர் மலையேற்றம் செய்துள்ளார். அவர் பற்றிய காணொளியைக் காண...

    காணொளிக் குறிப்பு, தனி ஆளாக அன்டார்டிகாவில் பயணித்த இந்திய வம்சாவளிப் பெண்
  16. 10 நிமிடம் பேருந்தை நிறுத்திவிட்டு ஜனநாயக கடமையை ஆற்றிய ஓட்டுநர் - பாராட்டிய பொதுமக்கள்

    பொ.மாமல்லபுரம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையைச் செய்வதற்காக, தனியார் பேருந்து ஓட்டுநர் பத்து நிமிடம் பேருந்தை நிறுத்திவிட்டு வாக்களித்துச் சென்றார்.

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த மாமல்லபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மாமல்லபுரம் 5வது வார்டு பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் 35 வயதான ஸ்ரீதர், பாலக்கோட்டில் இருந்து சேலத்திற்கு பொதுமக்களோடு வந்துகொண்டிருந்தார்.

    வாக்களித்து விட்டு வந்து, பேருந்தில் ஏறிய ஓட்டுநர் ஸ்ரீதர்
    படக்குறிப்பு, வாக்களித்து விட்டு வந்து, பேருந்தில் ஏறிய ஓட்டுநர் ஸ்ரீதர்

    அப்போது, செல்லும் வழியில் மாமல்லாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு மையம் வந்தவுடன் பேருந்தில் இருந்த பயணிகளிடம், "என்னுடைய ஜனநாயக கடமையைச் செய்து விட்டு வருகிறேன். பத்து நிமிடம் பொறுத்திருங்கள்," என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

    இதைக் கவனித்த பயணிகள், "நீங்கள் வாக்களித்து வரும் வரை நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம். நீங்கள் வாக்களித்து வாருங்கள்," என்று அனுப்பி வைத்தனர். ஸ்ரீதர் தன்னுடைய ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு பேருந்து பயணிகளுடன் சேலம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். இந்தச் செயலால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தனியார் பேருந்து ஓட்டுனரை வெகுவாகப் பாராட்டினர்.

  17. எடிசன் ஒலிப்பதிவு கருவியைக் கண்டுபிடித்து, அதில் ரைம்ஸ் பாடியது ஏன்?

    எடிசன் ஒலிப்பதிவு கருவியைக் கண்டுபிடித்து, அதில் ரைம்ஸ் பாடியது ஏன்?

    பட மூலாதாரம், GETTY IMAGES

    "1879-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று மாலை, நியூ ஜெர்சியில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, ரயில்களில் மக்கள் கூட்டமாக வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த புதிய கருவியைக் கண்டு பிரமிக்க அவர்கள் அங்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

    அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1877-ஆம் ஆண்டு ஃபோனோக்ராஃப் என்ற பேசும் கருவியை அவர் கண்டுபிடித்து மக்களை பிரமிக்க வைத்திருந்தார். அதைப் போலவே, இந்த முறை வீடு, அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பயன்படுத்தக் கூடிய மின் விளக்கைக் கண்டுபிடித்திருந்தார்."

    ஃபோனோக்ராஃப் என்ற அந்தக் கருவி தயாரானதும் எடிசன் உடனடியாக அதைப் பரிசோதிக்க விரும்பினார். அதில் வாய் வைத்துப் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழலில், "மேரி ஹேட் அ லிட்டில் லேம்ப்" என்ற ரைம்ஸ் பாடலைப் பாடினார். அதைப் பதிவு செய்துகொண்ட அந்தக் கருவி அதைத் திரும்பவும் பாடியது.

  18. உள்ளாட்சித் தேர்தல்: சேலத்தில் திமுக-பாஜக நிர்வாகிகள் இடையே மோதல்

    சேலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்க்கான விண்ணப்ப படிவத்தை திமுகவினர் விநியோகம் செய்தனர்.

    சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    சேலத்தில் திமுக-பாஜக நிர்வாகிகள் இடையே மோதல்

    இந்நிலையில் சேலம் மாநகராட்சி 50 வது வார்டு 12 வார்டு உள்ளிட்ட சில வார்டுகளில் போலியாக அச்சடிக்கப்பட்ட “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான விண்ணப்பதை” வீடு வீடாகச் சென்றுதிமுகவினர் வழங்கி திமுகவிற்கு வாக்களிக்குமாறு கோரியதாக கூறி பாஜாகவினர் திமுகவினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் திமுக-பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

  19. கறுப்புக் கொடி ஏந்தி தேர்தலைப் புறக்கணித்த பரமத்திவேலூர் மக்கள்

    வாக்குச் சாவடி மாற்றப்பட்டதால் பரமத்திவேலூரில் தேர்தலைப் புறக்கணித்து கறுப்புக் கொடி ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டபோது 3வது வார்டு 2வது வார்டாக மாற்றப்பட்டது.

    அதோடு அந்த வார்டுக்கு உட்பட்ட ராஜாநகருக்கான வாக்குச்சாவடி 3 கி.மீ., தள்ளி அமைக்கப்பட்டது.

    கறுப்புக் கொடி ஏந்தி தேர்தலைப் புறக்கணித்த பரமத்திவேலூர் மக்கள்

    இதனால், ராஜாநகர் பகுதி மக்கள் தேர்தல் நேரங்களில் நீண்ட தூரம் சென்று வாக்களித்துத் திரும்ப வேண்டிய நிலை உருவானது.

    இதற்குத் தீர்வு காணும்படி சம்மந்தப்பட்ட ராஜாநகர் மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்ததுடன் நேரிலும் பலமுறை தெரிவித்துள்ளனர்.

    எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இன்று நடைபெற்ற கொண்டிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை குப்புச்சிபாளையம் 2வது வார்டு ராஜாநகர் மக்கள் புறக்கணிப்பு செய்தனர். அதோடு வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏந்தி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  20. தமிழ் மொழியில் ட்வீட் செய்த நரேந்திர மோதி

    இன்று உ.வே.சா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் மொழியில் ட்வீட் செய்த பிரதமர் நரேந்திர மோதி.

    நரேந்திர மோதி