You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் கடந்த 21ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தி வந்த நிலையில், அது முழுமையாக வியாழக்கிழமை கரையைக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கடல் கொந்தளிப்பு

    நிவர் புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை தொடரும். நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ. மழையும் மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

  2. பேரபாயத்தைக் குறிக்கும் 9ஆம் எண் கூண்டு

    சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் பேரபாயத்தைக் குறிக்கும் 9ஆம் எண் கூண்டு ஏற்றப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  3. நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும்

    நிவர் புயல் புதன்கிழமை பிற்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில், புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிவர் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 - 130 கி.மீ. வேகத்திலும் சில சமயங்களில் 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

    இதனால் புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நிவர் புயல் குறித்த சிறப்பு நேரலைக்கு உங்களை வரவேற்கிறோம்.

    புயல் நகரும் பாதை, பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசின் அறிவிப்புகள் போன்ற முக்கியச் செய்திகளுக்கு இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

    டெல்லியில் இருந்து இந்தத் தகவல்களை உங்களுக்குத் தொகுத்து வழங்குவோர் பிபிசி செய்தியாளர்கள் விக்னேஷ்.அ மற்றும் மு. நியாஸ் அகமது.