வணக்கம் நேயர்களே!
நான் எம். ஆர். ஷோபனா. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.
- தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை பகுதிக்கு சென்று தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார். அப்போது "சிறந்த பாரதத்தை உருவாக்குவதே தீரன் சின்னமலைக்கு செலுத்தும் நன்றியாகும்" என்று பேசினார்.
- டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை அமலாக்கத்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். அமலாக்கத்துறையின் அனுமதி இன்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என்றும் அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
- 5ஜி அலைக்கற்றை குறைவாக ஏலம் விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
- அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்று திரும்பியுள்ளார்.
- அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்திய நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.