விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
தமிழக அரசியலில் ரஜினி, கமலால் முடியாததை விஜய் சாதித்தது எப்படி?
'மிடில் ஓவர் யுத்தம்': டெல்லி கேபிட்டல்சுக்கு எதிராக சிஎஸ்கே அணிக்கு காத்திருக்கும் புதிய சவால்
விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்ற கொளத்தூரில் இம்முறை தோற்றது ஏன்?
அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்திய தவெக வேட்பாளர்

பட மூலாதாரம், OfficeOfKRP/X
படக்குறிப்பு, பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
நேற்று (மே 4) வாக்கு எண்ணிக்கையின்போது இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில், கடைசி சுற்றான 30ம் சுற்றின் முடிவில் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேசமயம், பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக - சில தகவல்கள்

பட மூலாதாரம், TVKPartyHQ/X
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளன. முடிவுகள் குறித்த முக்கிய தகவல்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
- சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
- ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனவே, அக்கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
- விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து குவிந்துவரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோதி உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- “மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி
திரை நாயகன் விஜய் தமிழக அரசியல் நாயகனானது எப்படி?
'தொடக்க ஜோடி அதிரடி' - 228 ரன்கள் எடுத்த லக்னௌவை மும்பை வீழ்த்தியது எப்படி?
தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் யார் ஆட்சி அமைப்பார்கள்?
காணொளி: கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன?
காணொளி: திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின்
ஸ்டாலின், விஜய், சீமான் உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதி நிலவரம்
"மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்" - உதயநிதி

பட மூலாதாரம், facebook/UdhayanidhiStalin
படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின் (கோப்புப்படம்) சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
வெற்றி சான்றிதழை பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற செய்த இந்த தொகுதி மக்களுக்கு நன்றி. நல்ல சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.
தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவை, தீர்ப்பை கொடுத்திருக்கின்றனர். அந்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்ற அனைவருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
தவெக அதிக இடங்களில் முன்னிலை பெறுவது குறித்த கேள்விக்கு, “நாளை அநேகமாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடக்கும். இதுதொடர்பாக திமுக தலைவர் அறிவுறுத்தல்களை வழங்குவார்” என்றார்.
விஜய், செங்கோட்டையன், ஆனந்த் உள்பட தவெக தலைவர்களின் தொகுதி நிலவரம்
மு.க.ஸ்டாலின் தோல்வி: திமுகவின் பின்னடைவுக்கு காரணமான 5 விஷயங்கள்
தமிழ்நாட்டில் தோல்வியை சந்தித்த முதலமைச்சர்கள்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி

மு.க.ஸ்டாலினை தோற்கடித்த தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு கூறியது என்ன?

பட மூலாதாரம், Social Media
படக்குறிப்பு, வி.எஸ். பாபு (கோப்புப்படம்) சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த வி.எஸ். பாபு வெற்றி பெற்றுள்ளார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்துள்ளார்.
வெற்றி சான்றிதழை பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.எஸ். பாபு, “விஜய் எந்த வழியில் செல்கிறாரோ அந்த வழியில் நாங்கள் தொண்டனாக இருந்து செயல்படுவோம்” என்றார்.
அதிக இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, “எல்லா புகழும் தளபதிக்கே (விஜய்). வெற்றி பெற்றது நான் அல்ல, தளபதிதான். முழு வெற்றிக்கும் அவர்தான் காரணம்.
என் தொகுதியில் மக்களிடம் இருந்து லஞ்சம் பெறாமல் திட்டங்களை செயல்படுத்துவோம்.” என்றார்.
