விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

  2. காணொளி: ஆளுநரை விஜய் சந்தித்த போது நடந்தது என்ன?

  3. "தர்பூசணியில் எலி நச்சு" - மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணத்திற்கு காரணம் என்ன?

  4. தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் - நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அறிவுறுத்தல்

  5. தவெக ஆட்சியை தக்கவைப்பதில் விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

  6. "குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவே ஆதரவு" - திருமாவளவன்

  7. மேற்கு வங்கத்தில் முதன் முறையாக பாஜக ஆட்சி - முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு

  8. காணொளி: கல்லறைகளுக்கு நடுவே சாப்பாடு மேஜை - பிரபலமாகும் லக்கி உணவகம்

  9. 'மகாபாரத' கால பொருட்கள் கண்டுபிடிப்பா? பெட்-துவாரகை அகழாய்வில் புதிய தகவல்

  10. "விஜய்க்கு பின்னால் இருந்து முட்டுக்கட்டை போடுகிறார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

    பாஜக, தமிழிசை சௌந்தரராஜன்

    பட மூலாதாரம், X/Tamilsai Soundararajan

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் பதவியேற்பு விழா தள்ளிப்போகிறது. இந்தச் சூழலில் ஆளுநர் மற்றும் பாஜக மீது பழி சுமத்துவது சரியில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    விஜய் மூன்றுமுறை ஆளுநரைச் சென்று சந்தித்ததைக் குறிப்பிட்ட தமிழசை சௌந்தரராஜன், "ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டது ஆளுநர் மீது பழிபோடுவது நியாயமில்லை. தமிழக முதலமைச்சர் (மு.க.ஸ்டாலின்) தனிப்பெரும் கட்சியை அழைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பின்னால் இருந்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெளித் தோற்றத்தில் விஜயை ஆதரிப்பதாகக் கூறிவிட்டு பின்னால் முட்டுக்கட்டை போடுகிறார்கள்." என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்துவிட்டு மத்தியில் இருந்து பாஜக அழுத்தம் தருவதாகக் கூறுவதிலும் உண்மையில்லை. அரசியல் சுயலாபத்திற்காக முடிவுகளை எடுத்துவிட்டு பாஜகவை பழி சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. காங்கிரஸ் கட்சி திமுக உடனான உறவை முறித்துக் கொண்டு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருகிறார்கள் என்ற எண்ணிக்கை இல்லாமல் ஹைதராபாத் சென்றிருக்கிறார்கள். எல்லோரும் சுய நலத்திற்காக தங்களின் அரசியல் நகர்வை செய்துவிட்டு ஆளுநர் மீதோ பாஜக மீதோ பழியை சுமத்துவது சரியல்ல."

  11. 'அதிமுகவை ஆதரிக்க ஸ்டாலின் வலியுறுத்தினார்': எம்.ஏ.பேபி பேட்டி பற்றி இடதுசாரி மாநில தலைவர்கள் கூறுவது என்ன?

  12. 'தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்' - எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம், X/EPS TAMILNADU

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற முயற்சித்து வருகிறது.

    இந்தச் சூழலில் கூட்டணி கட்சிகள் ஆதரவு வழங்குவது மற்றும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பான பல்வேறு விவாதங்கள் இருந்து வருகின்றன.

    இந்தச் சூழலில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

  13. மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி

    மேற்கு வங்கம், சுவேந்து அதிகாரி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பிரதமர் மோதியுடன் சுவேந்து அதிகாரி

    மேற்கு வங்க முதலமைச்சராக பாஜகவின் சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    சுவேந்து அதிகாரி உடன் திலிப் கோஷ்ம் அக்னிமித்ரா பால், அசோக் கிர்தானியா, குதிராம் துடு மற்றும் நிஷித் பிரமானாயக் ஆகிய ஐந்து அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

    இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சுவேந்து அதிகாரி, "இது உண்மையில் மேற்கு வங்கத்துக்கு ஒரு வரலாற்றுத் தருணம். தொலைநோக்கு கொண்ட தலைவரான பிரதமர் மோதியை 'மகிழ்ச்சியின் நகரத்துக்கு' வரவேற்பது மகிழ்ச்சி மற்றும் பெருமைமிகு தருணம். சுதந்திரத்தில் இருந்து மேற்கு வங்கத்தில் முதல் பாஜக அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியை நாம் காண்கிறோம். நம்முடைய முன்னோடிகளின் கனவுகள் நனவாவதைக் காண்கிறோம்." எனத் தெரிவித்தார்.

  14. இரானுக்கு டிரம்பின் புதிய எச்சரிக்கை என்ன?

    டிரம்ப், இரான், அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    தற்போதைய சூழ்நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால் 'ப்ராஜக்ட் ஃப்ரீட்ம ப்ளஸ்ஸை' தொடங்குவேன் என இரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்திற்கு இரான் விரைவில் பதிலளிக்கும் என நம்புவதாகவும் கூறினார். ஹோர்மூஸ் நீரிணையில் இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

    "சூழ்நிலையில் முன்னேற்றமில்லை என்றால் நாம் வெவ்வேறு வழிகளைக் கையாள வேண்டும். பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க ப்ராஜக்ட் ஃப்ரீடமை நிறுத்தப்பட்டது. பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்றால் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்," என செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார் டிரம்ப்.

    இந்த முறை அது ப்ராஜக்ட் ஃப்ரீடம் ப்ளஸ் ஆக இருக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஹோர்மூஸ் நீரிணையில் நீக்கிய கப்பல்களை விடுவிக்க "ப்ராஜக்ட் ஃப்ரீடமை" டிரம்ப் தொடங்கியிருந்தார்.

  15. காணொளி: சர்ச்சைக்குரிய வீடியோ பற்றி டிடிவி தினகரன் கேள்வி

  16. காணொளி: 'குதிரை பேரம் சும்மா விட முடியாது' - டிடிவி தினகரன் பேட்டி

  17. "இது போன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை" - திமுக எம்பி வில்சன்

    திமுக, அமமுக, தவெக

    பட மூலாதாரம், X/P Wilson DMK

    படக்குறிப்பு, திமுக எம்பி வில்சன் (கோப்புப் படம்)

    அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜின் பெயரில் ஆளுநரிடம் தவெக கடிதம் கொடுத்ததாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு எழுப்பிய செய்தியை மேற்கோள்காட்டி திமுக மாநிலங்களவை உறுப்பினர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு பல ஆண்டுகளில் இது போன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை." எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்தப் பதிவில், "தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் கொண்டு வரப்போகிறோம் என அவர்கள் கூறியதை இப்போது புரிந்து கொள்கிறேன். பதவியேற்பதற்கு முன்பாகவே இது அனைத்தும் நடக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக எஸ்.காமராஜை தொடர்புகொள்ள முடியவில்லை என டிடிவி தினகரன் கூறிவந்த நிலையில் நள்ளிரவு எஸ்.காமராஜ் உடன் ஆளுநரை மீண்டும் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவல்துறையிலும் ஆளுநரிடத்திலும் புகார் அளிக்க இருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

  18. காணொளி: 'தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை' - அமமுக எம்.எல்.ஏ காமராஜ்

  19. விஜய்க்கு இடதுசாரிகள் ஆதரவு, ஆளுநரை இருமுறை சந்தித்த தினகரன் - ஒரே நாளில் மாறிய காட்சிகள்