விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. காணொளி: விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா

  2. காணொளி: அமைச்சரவை பதவியேற்பு விழா - கோட் சூட்டுடன் வந்த விஜய்

  3. காணொளி: முதல்வராக விஜயின் முதல் கையெழுத்து என்ன?

  4. ஆதரவு வழங்கிய கட்சி தலைவர்களுக்கு விஜய் நன்றி

    விஜய்

    பட மூலாதாரம், TN DIPR

    தொடர்ந்து பேசிய விஜய், “மக்கள் நலன்களை மட்டுமே லட்சியமாக கொண்ட நம் அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீண் சக்ரவர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி” என்றார்.

    மேலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தவெக அரசுக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

  5. "கொஞ்சம் அவகாசம் தாருங்கள்" - முதலமைச்சர் விஜய்

    விஜய்

    பட மூலாதாரம், TN DIPR

    முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பேசிவருகிறார்.

    "மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும். பெண்கள் பாதுகாப்பு கடுமையாக கடைபிடிக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இன்றிலிருந்தே எடுப்பேன். நம் பிள்ளைகளை அதிலிருந்து காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. எல்லோருக்கும் சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்வேன்." என்றார்.

    "என்னை கஷ்டப்படுத்தியவர்களாக இருந்தாலும், நண்பர்கள், எதிரிகள் யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்களே.

    கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முதன்மை கவனம் செலுத்தப்படும்.

    மக்களின் பணம் எனக்கு தேவையில்லை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், என் அரசில் இருப்பவர்களாக இருந்தாலும் விடமாட்டேன்.

    ‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என ஆட்டம் ஆடலாம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இப்போதே மனதிலிருந்து எடுத்துவிடுங்கள்." என விஜய் பேசினார்.

    "பெண்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள் என எல்லோரும் இந்த அரசின் நன்றாக இருப்போம். சிறுபான்மை சகோதரர்களுடன் இந்த அரசு எப்போதும் உடன் இருக்கும். இந்து - கிறிஸ்தவ - இஸ்லாமிய முகம்தான் விஜய்.

    எங்களுக்கு வாக்களித்த ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நன்றி

    விஜய் (மாமாவின்) குட்டி நண்பர்களுக்கும் நன்றி. உங்களுக்காக எல்லா நல்ல விஷயங்களையும் நான் செய்வேன்.

    தவெக தோழர்கள் இல்லாமல் எதுவுமே இல்லை. நிர்வாகிகள், தோழர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், விர்ச்சுவல் வாரியர்ஸ் அனைவருக்கும் நன்றிகள். எல்லோரும் சேர்ந்து புதிய அரசை கொடுப்போம். இதுவொரு புதிய தொடக்கம். உண்மையான சமூக நீதி, மதச்சார்பின்மையின் புதிய காலம் தற்போது தொடங்குகிறது." என்றார்.

    காணொளிக் குறிப்பு, விஜய்
  6. விழா மேடையில் விஜய் பேசுவது என்ன?

    விஜய்

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, விஜய்

    முதலமைச்சர் விஜய் தற்போது விழா மேடையில் உரையாற்றிவருகிறார்.

    "வறுமை, பசி என்றால் என்னவென எனக்கு நன்றாக தெரியும். நான் மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. உங்களின் மகன், சகோதரனாகவே நான் என்னை உணர்கிறேன்." என விஜய் தெரிவித்தார்.

    "இந்த பயணத்தில் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள், அவமானங்கள் வந்ததோ அதேபோன்று என்னுடன் நின்ற உங்களுக்கும் கஷ்டங்கள் வந்தன. அவற்றை பொருட்படுத்தாமல் என்னுடன் நின்றீர்கள். இப்போது ‘சி ஜோசப் விஜய் எனும் நான்’ என்பதை உண்மையாக்கியுள்ளீர்கள்."

    “நான் தேவதூதன் அல்ல, நானு சாதாரண மனிதன் தான். பொய்யான வாக்குறுதிகளை அளித்து நான் ஏமாற்றமாட்டேன். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

    “முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு போயுள்ளனர். தூக்க முடியாத சுமையை ஏற்றிவைத்துவிட்டு சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இந்த பொறுப்பை நாம் எடுத்திருக்கிறோம். உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும். என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதை வெள்ளை அறிக்கை வெளியிடனும் என்று நினைக்கிறேன். அதைத்தான் நான் முதலில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.” என விஜய் தெரிவித்தார்.

  7. விஜயின் அமைச்சரவையில் இடம்பெற்ற கீர்த்தனா யார்?

    கீர்த்தனா

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, கீர்த்தனா

    29 வயதான கீர்த்தனா எம்.எஸ்சி பட்டதாரி ஆவார். தனிநபர் ஆலோசகராக பணியாற்றிவருவதாக அவர் தன் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரமாண பத்திரப்படி, அவரது சொத்து மதிப்பு ரூ.22 லட்சத்து 57,710 ஆகும்.

    சிவகாசி தொகுதியில் தவெக வேட்பாளர் கீர்த்தனா 11,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 57,039 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் இரண்டாம் இடத்தையும் 51,078 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    தேர்தலில் வென்றதும் தேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தனா இந்தியில் பேசியது சமூக ஊடகங்களில் பெருமளவில் விவாதத்திற்கு உள்ளானது.

  8. நெகிழ்ச்சியாக காணப்பட்ட விஜயின் பெற்றோர்

    நெகிழ்ச்சியாக காணப்பட்ட விஜயின் பெற்றோர்

    பட மூலாதாரம், TN DIPR

  9. அமைச்சர்கள் பதவியேற்பு

    விஜய் பதவியேற்ற நிலையில், அடுத்ததாக 9 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். அதன்படி, என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    விஜய் அமைச்சரவை
  10. விழாவில் முதலில் பாடப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல்

    விழாவில் 'வந்தே மாதரம்' பாடல்

    பட மூலாதாரம், TN DIPR

    விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், தொடக்க நிகழ்வாக 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது. அடுத்ததாக தேசிய கீதமும், அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.

    விழாவில் முதலில் பாடப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல்
  11. மேடையில் விஜயுடன் ராகுல் காந்தி

    விஜய், ராகுல் காந்தி
    காணொளிக் குறிப்பு, விஜய்
  12. முதலமைச்சராக பதவியேற்கும் விஜய் - முக்கியத்துவம் என்ன? நேரலை

    விஜய்

    பட மூலாதாரம், TN DIPR

    முதலமைச்சராக விஜய் பதவியேற்பதை நேரலையில் காண...

  13. ஆளுநரை வரவேற்ற விஜய்

    ஆளுநரை வரவேற்ற விஜய்

    பட மூலாதாரம், DIPR

    பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு விஜய் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    காணொளிக் குறிப்பு, விஜய்
  14. விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா

    காணொளிக் குறிப்பு, விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா
  15. 9 பேர் அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

    9 பேர் அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

    விஜயுடன் இன்று 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

    தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  16. விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து

    விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து

    பட மூலாதாரம், PremallathaDmdk/X

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் விஜய்க்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் விஜய் அவர்களுக்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என, அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு கேப்டன் (விஜயகாந்த்) அவர்களின் சார்பாகவும், தேமுதிகவின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

  17. நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து சில புகைப்படங்கள்

    முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்

    தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து சில புகைப்படங்கள்:

    முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்
    முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்
    முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்
  18. முதலமைச்சராக பதவியேற்கும் விஜய் - விரிவான தகவல்களை அறிய

    முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்

    தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்கிறார். விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

    மே 13-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோருமாறு விஜயை ஆளுநர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு விமானம் மூலம் வருகை தருகிறார்.

    முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சியமைக்கும் புதிய கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

  19. ஒரு வாக்கில் வெற்றி: தவெக வேட்பாளருக்கு எதிரான மனு இன்று விசாரணை

    பெரியகருப்பன்
    படக்குறிப்பு, பெரியகருப்பன்

    திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்க கோரிய வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

  20. விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க புறப்பட்டார் ராகுல்

    டெல்லி விமான நிலையத்தில் ராகுல் காந்தி

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, டெல்லி விமான நிலையத்தில் ராகுல் காந்தி

    காலை 10 மணியளவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிலையில் மக்களவை தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு விமானம் மூலம் வருகை தருகிறார். இதற்காக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்படுகிறார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சியமைப்பதற்கு முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவளித்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்களை வென்றிருந்தது.