You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இலங்கையில் ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகளை இலக்கு வைக்கும் போராட்டக்காரர்கள்

இலங்கை பிரதமர் ராஜபக்ஷ பதவி விலக கூடாது என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் கொழும்புவில் திடீர் போராட்டம் நடத்தினர். காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் கூடாரங்கள் எரிக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர்புகை குண்டு பிரயோகிக்கப்பட்டது. இதை அரசுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் தாக்குதல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இறைச்சி உற்பத்தி விண்வெளியில் சாத்தியா?

  2. சீனா முதல் சென்னை வரை விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை: தப்புவது எப்படி?

  3. புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக சுதன்ஷு துலியா மற்றும் ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் இருவருக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    முன்னதாக, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை ஏற்று கௌஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகியோரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசு நியமித்தது.

    இந்நிலையில், இரு நீதிபதிகளும் இன்று பதவியேற்றுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில், இதன்மூலம் 34 ஆக உயர்ந்துள்ளது.

  4. இலங்கை நெருக்கடி: "இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும்; மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும்" - நிதியமைச்சர்

    இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

  5. வீடுகளை இடிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

    சென்னை ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் வீடுகளை இடிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், "திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மீனவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும், சிதிலமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித் தரப்படும், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவற்றுக்கெல்லாம் முற்றிலும் முரணான வகையில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடிப்புப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து அங்கேயே குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும். உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

    காவல் துறையையும் மீறி குடியிருப்புவாசிகளிடம் கடுமையாக நடந்துகொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் " என வலியுறுத்தியுள்ளார்.

  6. சிஎஸ்கே அணி ரன் ரேட்டில் முன்னேற்றம்: டெல்லிக்கு எதிரான வெற்றி கை கொடுக்குமா?

    பிளே ஆஃபுக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்கெனவே சிஎஸ்கே அணி இழந்துவிட்டதாக சொல்லப்பட்டபோதும், டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான இந்த ஆட்டத்தில், தன் அதிரடி ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

  7. பாஜகவில் இணைந்தார் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன்

  8. வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

    சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள வீடுகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    சென்னை, கிரீன்வேஸ் சாலையின் அருகில் பங்கிங்ஹாம் கால்வாயையொட்டி இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு ஆகியவை உள்ளன. இதில் இளங்கோ தெருவில் சுமார் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த வீடுகளை இடிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 29 ஆம் தேதி வீடுகளை இடிப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இளங்கோ நகரில் உள்ள வீடுகள் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை இளங்கோ நகரில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

    அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கண்ணையா என்ற நபர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், உள்ளூர்வாசிகள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை கண்ணையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  9. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.