மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு - அதிமுக சார்பில் நிதியுதவி அறிவிப்பு
தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "பெரிய துயரத்தை சந்தித்திருக்கும் களிமேடு கிராம மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் தமிழ்நாடு அரசு விரைந்தும், முழுமையாகவும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள 11 பேரின் குடும்பங்களுக்கு அதிமுகவின் சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும் அதேபோல், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேருக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளனர்.



