நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி. இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும். இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.
- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
- சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பாராட்டிப் பேசியிருப்பது இந்தியாவில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
- இன்னும் சில நாள்களில் ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
- சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநருக்கான 30 காலி பணியிடங்களுக்கு 28,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றதாக, ரயில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
- பிரேசிலின் பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.





















