You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை பொருளாதார நெருக்கடி - உலக வங்கி 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி
உலக வங்கியிடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆ. லட்சுமி காந்த் பாரதி
இலங்கை நெருக்கடி: தொடரும் போராட்டம் - புகைப்படத் தொகுப்பு, ரஞ்சன் அருண்பிரசாத்
இலங்கை பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் மக்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடத்தி வரும் போராட்டக் காட்சிகள். புகைப்படங்களாக....
ராணுவத்தில் ஆள் பலத்தைக் குறைக்கத் திட்டமிடுகிறதா இந்தியா? இதனால் என்ன ஆகும்?
'பீஸ்ட்' பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் நூறு பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல்
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. எப்போது விடியும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. பேனர்கள், தோரணங்கள், பாலாபிஷேகம், பட்டாசு என பல திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
பீஸ்ட்' திரைப்படம் குறித்த அறிவிப்பிலிருந்தே வெளியீட்டுக்காகக் காத்திருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் கொண்டாடிக் களித்து வருகின்றனர். அதேநேரம் சில இடங்களில் படம் வெளியாகாததால் அங்கிருந்த விஜய் ரசிகர்கள் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கரூரில் 'பீஸ்ட்' வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். படம் வெளியாகும் இடங்களில் ஏராளமான வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
தாம்பரம் வித்தியா திரை அரங்கில் வெளியான பீஸ்ட் படம் பார்த்தவர்களுக்கு விஜய் முன்னால் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விஜய் ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுகு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் 100 பேருக்கு வழங்கினார். இதனால் படம் பார்த்த மகிழ்ச்சியில் வந்தவர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழங்கிய பெட்ரோலுடன் சென்றனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டை புறக்கணித்து, இலங்கையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தைத் தொடரும் மக்கள்.
யுக்ரேன் மேரியோபோல் நகரில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதா?
யுக்ரேன் மேரியோபோல் நகரில் ரஷ்யப் படையினர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவது குறித்து ஆராயப்போவதாக அமெரிக்காவும், பிரிட்டனும் தெரிவித்துள்ளன.கடந்த திங்கள்கிழமையன்று, யுக்ரேன் அசோவ் பகுதியில் உள்ள படைப்பிரிவு மீது நடந்த தாக்குதலில், மூன்று ராணுவ வீரர்கள் 'விஷத்தன்மை கொண்ட பொருளால்' காயமடைந்ததாக கூறியுள்ளனர்.
ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கவில்லை. ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், அது இந்த போரை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. அத்தகைய தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டால், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்நாடுகள் உறுதி அளித்துள்ளன.
நெல்லையில் 'பீஸ்ட்' வெளியீட்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை
நெல்லையில் நடிகர் விஜயின் 'பீஸ்ட்' திரைப்பட வெளியீட்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.நெல்லை மாவட்டத்தில் மாநகரில் மொத்தம் 6 திரையரங்குகளில் 'பீஸ்ட்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், அங்கு திடீரென இத்திரைப்படத்தின் வெளியீட்டு கொண்டாட்டத்துக்குப் போலீசார் தடை விதித்தனர். அதன்படி திரையரங்கிற்கு வெளியே வண்டிகள் நிறுத்தவோ, பேனர்கள் வைக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை சார்பில் அனைத்து திரையரங்குகள் முன்பு அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.கடந்த 2ம் தேதி பீஸ்ட் டிரைலர் வெளியான போது நெல்லை சந்திப்பு மதுரை சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றில் டிரைலர் பார்த்த வேகத்தில் ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை சேதப்படுத்தியும், கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாகவே நெல்லை மாநகரில் இன்று கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சீன தூதுவரை சந்தித்த இலங்கை நிதி அமைச்சர்
இலங்கைக்கான சீன தூதுவரை, புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெடிக்கடி குறித்து, மிக ஆழமாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் , டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.அத்துடன், சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் நிதி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.கடினமான அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு சீனா, உதவியாக இருக்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு: காலி முகத்திடலில் போராடும் இளைஞர், யுவதிகளுக்கு இலங்கை பிரதமர் பகிரங்க அழைப்பு, ரஞ்சன் அருண் பிரசாத்
இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத்திடலில் ஐந்தாவது நாளாகவும் போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில், போராட்டக்காரர்களை கலந்துரையாடல்களுக்கு வருகைத் தருமாறு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களினால் காலி முகத்திடலில் ஒன்று கூடி, போராட்டங்களின் ஈடுபட்டுள்ளவர்களுடன் பிரதமர் என்ற விதத்தில் கலந்துரையாடல்களை நடத்த தயார் என அவர் கூறுகின்றார்.
''நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்களிலிருந்து வெற்றிக் கொள்வதற்கு, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் வெளியிடப்படும் பெறுமதியான கருத்துக்கள் குறித்தும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக'' அவர் குறிப்பிடுகின்றார்.''இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் தயார் என்றால், அந்த தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும்''' மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
பீஸ்ட்: யாழ்ப்பாண ரசிகர்கள் உற்சாகம்
தமிழ்நாட்டில் என்ன உற்சாக வரவேற்பு இருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாத வரவேற்புடன் யாழ்ப்பாணத்திலும் திரையிடப்பட்டிருக்கிறது பீஸ்ட் திரைப்படம்.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் வெளியானது.அதேபோல இலங்கையின் பல பகுதிகளிலும் இந்தத் திரைப்படம் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் ராஜா உள்ளிட்ட ஓரிரு திரையரங்குகளில் அதிகாலை நான்கு மணிக்கும் பிற திரையரங்குகளில் 7 மணிக்கும் திரைப்படம் வெளியானது. ராஜா திரையரங்கில் ஏழு மணிக் காட்சிக்கான ரசிகர்கள் ஐந்தரை மணியிலிருந்தே அங்கே குழுமியிருந்தனர்.
ரசிகர்களில் சிலர் பீஸ்ட் திரைப்படத்தின் போஸ்டர்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட்களையும் அணிந்து வந்திருந்தனர்.
7 மணி காட்சிக்கு வந்த துஷ்யந்தன் என்ற ரசிகர், "ஒவ்வொரு விஜய் படத்தையும் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். இந்த முறை இரண்டாம் காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது. முதல் காட்சி பார்க்காதது வருத்தம்தான். இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.
நான்கு மணிக் காட்சியை முடித்து வெளிவந்த ரசிகர்களைப் பொறுத்தவரை, முதல் காட்சியைப் பார்ப்பது என்ற உற்சாகத்திற்காகவே வந்ததாகக் கூறினர்.
தமிழ்நாட்டைப் போலவே விஜய், அஜீத் போன்ற உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களும் ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் 4 மணிக் காட்சியிலிருந்தோ, ஏழு மணிக் காட்சியிலிருந்தோ துவங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்த அதிகாலைக் காட்சிகளுக்கு ரசிகர்களின் வரவேற்பும்இருக்கிறது.
புதினை சர்வாதிகாரி என்றும் அவர் செய்வதை இனப்படுகொலை என்றும் வருணித்த பைடன்
யுக்ரேனில் இனப்படுகொலை நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல்முறையாக குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், புதினை 'சர்வாதிகாரி' என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜோ பைடனின் இந்த கருத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி, "உண்மையான தலைவரின் உண்மையான வார்த்தைகள்" என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜூலை, ஆகஸ்ட் மாதம் உணவு தட்டுப்பாடு ஏற்படும் - ரணில் எச்சரிக்கை
நேயர்களுக்கு வணக்கம்!
வணக்கம் நான் ஷோபனா எம்.ஆர்.
இன்றைய நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
- நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு
- இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, இலங்கை உலக வங்கியிடம் அவசர கடனுதவியை நாடியுள்ளது.
- பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், கடன்களை கேட்டு நெருக்கடி தர வேண்டாம் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
- இலங்கையில் பணமதிப்பிழப்பு தீர்மானம் மற்றும் வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்துவது குறித்து இலங்கை பாராளுமன்றதில் தேர்வு குழு மூலம் விவாதம் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
- யுக்ரேன்: நான்கு மில்லியனுக்கும் அதிகமான யுக்ரேனிய குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர் - ஐ.நா
- இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
- அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோதி நேற்று காணொளி காட்சி மூலம் ஆலோசித்தனர். இதில் பெரும்பாலும் யுக்ரேன் நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட்டது.