நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு - பலர் காயம்

நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள சுரங்க ரயில் பாதை நிலையத்தில் பலர் காயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் சன்செட் பூங்காவில் உள்ள 36வது வீதி என்ற ரயில் நிலையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. இலங்கையில் பொருளாதார நெருக்கடி வந்தது ஏன் - முழு விளக்கம்

  2. திவாலாகிறதா இலங்கை? கடன்களை திருப்பிக் கொடுக்காததால் என்னவாகும்?

  3. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ.

    • நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் காயம் அடைந்தனர்.
    • ரஷ்யாவில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நிறுத்தியுள்ளன.
    • இலங்கை அரசு பணமதிப்பிழப்பு தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    • உலக வங்கி இலங்கைக்கு அவசர கடன் உதவியாக ரூ. 76 கோடி வழங்க அனுமதி அளித்துள்ளது.
    • சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இலங்கை கால அவகாசம் கோரியுள்ளது.
    • புதிய வகை கொரோனா திரிபு தொடர்பாக கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
    • யுக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் யுக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) திங்களன்று தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு இன்று காலை உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை (ஏப்ரல் 13, 14 மற்றும் 14) முன்னிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட போவதில்லை என இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  4. நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டில் தற்போது வரை நடந்தது

    • நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக நியூயார்க் நகர காவல் துறை விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் செய்தியாளர் சந்திப்பு நேரம் அறிவிக்கப்படவில்லை.
    • நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர்.
    • இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் சன்செட் பூங்காவில் உள்ள 36வது வீதி என்ற சுரங்கப் பாதை ரயில்நிலையத்தில் நடத்தப்பட்டுள்ளது.
    • சுரங்க ரயில் நிலையத்தில் ஏற்பட்ட புகை மூட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • சம்பவம் நடைபெற்ற இடத்தில் வெடிக்கும் சாதனங்கள் எதுவும் இல்லை என்று காவல்துறை கூறுகிறது.
    நியூயார்க்

    பட மூலாதாரம், Reuters

  5. சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடியிடம் சிக்குவார்களா சந்தேக நபர்கள்?

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு - 13 பேர் காயம்

    நியூயார்க்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவலின்படி, உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் சன்செட் பூங்காவில் உள்ள 36வது வீதி என்ற ரயில் நிலையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

    சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சுரங்க ரயில் நிலைய மேடையில் பயணிகள் பலர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்க்க முடிகிறது. மேலும் சம்பவ இடத்தில் வெடிபொருட்களும் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    தாக்குதல் நடத்திய சந்தேக நபரை தேடும் பணி தற்போது முடக்கி விடப்பட்டுள்ளது. சுரங்க ரயில் நிலையத்திலிருந்து புகை பரவியதாக அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை கண்டதாகவும் நியூயார்க் தீயணைப்புத்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

  7. ரஷ்யாவில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நிறுத்தியுள்ளன

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு, 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வணிகத்தை மொத்தமாக மூடியுள்ளன அல்லது குறைத்துள்ளன.

    ரஷ்ய படையெடுப்பு தொடக்கத்திலிருந்து, யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 1000 க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில், பல நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளன, ஆனால் சில மேற்கத்திய நிறுவனங்கள் இன்னும் ரஷ்யாவில் தங்கள் வணிகத்தை வழக்கமான முறையில் செய்து வருகின்றன என தெரியவந்துள்ளது.

    ரஷ்யாவில், நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை குறைத்த அளவிற்கு ஏற்ப ஆய்வில் தரவரிசை செய்யப்பட்டன. அதன்படி ஹெய்ன்கென்(Heineken) முதல் நெட்ஃபிலிக்ஸ்(Netflix) வரையான நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து முற்றிலும் வெளியேறிய நிறுவனங்களாக உள்ளதால் "ஏ" பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    மேலும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Emirates Airlines) மற்றும் ஜேடி.காம்(JD.com) போன்ற நிறுவனங்கள் "எஃப்" பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் ரஷ்யாவில் வழக்கம்போல இயங்கி வருகின்றன.

  8. கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் முடக்கம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படையினர் கடந்த மாதம் 24 ஆம் தேதி சோதனையில் ஈடுபட்ட போது விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 32,20,000 மதிப்பிலான 322 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 7 நபர்களை கைது செய்தனர்.

    இந்த நிலையில் சம்மந்தப்பட்ட கஞ்சா வியாபாரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை சேகரித்து அனைத்தையும் முடக்க எடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நடந்த இந்த நடவடிக்கைகள் தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை செய்ததில் 10 செல்போன்கள், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 4 அசையா சொத்துக்கள், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, 29 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, நியூயார்க் ப்ரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு - பலர் காயம்

    நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள சுரங்க ரயில் பாதை நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. என்எல்சி சுரங்கத்துக்காக நிலம் கையக முயற்சியை எதிர்க்கும் கரிவெட்டி கிராமம்

  11. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா போன உலகப் பணக்காரர்கள்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியை எப்படி பாதித்திருக்கிறது?

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை அரசு பணமதிப்பிழப்பு தீர்மானம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்

    இலங்கை அரசியலமைப்பின் 148ஆவது பிரிவின் கீழ், பொது நிதிகள் மீதான முழு கட்டுப்பாட்டையும் பாராளுமன்றம் கொண்டுள்ளது.

    இலங்கையில் பணமதிப்பிழப்பு தீர்மானம் மற்றும் வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்துவது குறித்து இலங்கை பாராளுமன்றதில் தேர்வு குழு மூலம் விவாதம் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 2020 தேர்தல் வாக்குறுதியில், இலங்கை நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியகத்தின் உதவியை நாடுமாறு பரிந்துரைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக அது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. BBC
  15. கும்பகோணம் நீதிமன்ற வரலாற்றில் முதன்முதலாக தூக்கு தண்டனை - என்ன வழக்கு?

    ரவுடி கட்டை ராஜா
    படக்குறிப்பு, கட்டை ராஜா

    கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் கடைவீதியில் சென்னிய மங்கலத்தைச் சேர்ந்த செந்தில் நாதனை, கட்டை ராஜா அவரது கூட்டாளிகள் மாரியப்பன், ஆறுமுகம் ,மனோகரன், செல்வம் ,ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

    இந்த வழக்கில் நீதிபதி பெஞ்ஜமின் ஜோசப் இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கட்டை ராஜா மீது தொடரப்பட்ட குற்றங்களுக்கு சாட்சிகள் தெளிவாக இருந்ததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    வழக்கில் தொடர்புடைய ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    மேலும் வழக்கு நடைபெற்ற காலத்தில் மாரியப்பன் ,மனோகரன், ஆகியோர் உயிரிழந்தனர். ஆகையால், அவர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

    கும்பகோணம் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

  16. தமிழ் இணைப்பு மொழி: ஏ.ஆர் ரகுமான் கருத்தை வரவேற்கும் பாஜக

    சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில் பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கான வேட் வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    மேலும் இந்தி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. பாஜகவும் இந்தி திணிப்பை விரும்பவில்லை. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது.தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது பாஜகவை பொறுத்தவரை பெருமைக்குரிய ஒன்று என்று அவர் கூறினார்.

    இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்றால் தமிழ் பள்ளிகளை ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடங்க பிற மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி அவற்றை தமிழக அரசே நடத்த முன்வர வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.

  17. இலங்கை பொருளாதார நெருக்கடி: ''மலையக மக்களுக்கு இந்த பிரச்னை பழகி போச்சு, கொழும்பில் உள்ளவர்களுக்கு இது புதுசு"

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  18. " இந்தி - பானிபூரி பக்கோடா விற்க மட்டுமே உதவும்"- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

    இ.வி.கே.எஸ் இளங்கோவன்

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ராமகிருஷ்ணன் உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலம் விசாரிக்க இன்று வந்தார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அமித்ஷா மற்றும் மோடி பேச்சுக்களால் அச்சம் ஏற்படுகிறது. இவர்களின் கொள்கை முடிவால் சோவியத் ரஷ்யா போல இந்தியா உடைந்து விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது.

    மேலும் இந்தியை கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்தியை தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறது. இந்தியை கற்றுக் கொண்டால் பக்கோடா, பானிபூரி விற்று பிழைத்துக் கொள்ளலாமே தவிர பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைய முடியாது.

    இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் விவசாயம் தான். இயற்கை விவசாயத்தை உடனடியாக கொண்டு வந்ததால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை படிப்படியாக கொண்டுவந்திருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது", என்று கூறியுள்ளார்.

  19. ''மலையக மக்களுக்கு இது பழகிப் போச்சு, கொழும்புவாசிகளுக்கு இது புதுசு"

  20. உலக வங்கி இலங்கைக்கு அவசர கடன் உதவியாக ரூ. 76 கோடி வழங்க அனுமதி

    இலங்கை

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, இலங்கை உலக வங்கியிடம் அவசர கடனுதவியை நாடியுள்ளது.

    இந்நிலையில், இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்கு உடனடி உதவியாக 76 கோடி ரூபாய் வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

    உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகளுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உலக வங்கி இதை கூறியுள்ளது. உலக வங்கியினால், மேலும் 3800 கோடி ரூபாய் உதவித் தொகை கிடைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி கூறுகின்றார்.

    விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல், விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்த உதவித் தொகை கிடைக்கப் பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.