நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ:
- இலங்கையில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முக்கிய தொழில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- இலங்கை நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இலங்கைக்கு இந்திய உதவியின்கீழ் மொத்தமாக 2,70,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகளவான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது என, இந்திய உயர் ஆணையரகம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
- இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என, நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேருக்கு சிறை காவலை நீட்டித்துள்ள இலங்கை நீதிபதி, தலா ரூ.2 கோடி செலுத்தி ஜாமீனில் வெளியே வரலாம் என உத்தரவிட்டுள்ளார்.
- கீயவ் மற்றும் செர்னிஹிவ் பகுதிகளில் இருந்து ரஷ்யா வெளியேறும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- யுக்ரேனிய படைகளின் எதிர்தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வடக்கு யுக்ரேனில் உள்ள கிராம மக்களை மனித கேடயமாக ரஷ்யப்படையினர் பயன்படுத்தியதாக, பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரஷ்ய படையினருக்கு எதிராக யுக்ரேன் படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என, யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
- மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்.
- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது - உச்சநீதிமன்றம்










