பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை முயற்சி

    நோயாளி தற்கொலை முயற்சி

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

    செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள புலிப்பாக்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை திடீரென அந்த நபர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியின் மீது ஏறி குதித்து தற்கொலைக்கு முயன்றார். திடீரென எதிர்பாராத இந்த சம்பவத்தால் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோர் இணைந்து லாவகமாக மீட்டு தற்கொலையில் இருந்து காப்பாற்றினார்.

    காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் பெயர் சந்திரசேகர் என்பதும் அவர் சற்று மனநிலை சரியில்லாமல் இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

  2. இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் - அலி சாப்ரி

    இலங்கை பொருளாதார நெருக்கடி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என, நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் நீடித்து வரும் மோசமான நெருக்கடிக்கு மத்தியில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு அலி சாப்ரியிடம் வழங்கப்பட்டது. ஆனால், அலி சாப்ரி அதற்கடுத்த நாளே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், அவர் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசுகையில், "இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும்" என தெரிவித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    அவர் பேசியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டதாவது:

    "நாம் உலக வங்கியுடன் ஆலோசிக்க வேண்டும். ஆசிய வளர்ச்சி வங்கியுடன் நிதித்திட்டங்கள் குறித்த இணைப்பை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால், இந்த பணிகளை யார் மேற்கொள்வது?" என அவர் பேசியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    மேலும், "ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் சர்வதேச தங்கப்பத்திர கடன் உள்ள நிலையில், அதனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என பார்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடம் தான் நாம் செல்ல வேண்டும். வேறு எந்த தீர்வும் இல்லை என நான் கருதுகிறேன்," என அவர் தெரிவித்தார்.

  3. திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    "ஒரு திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், அதை தான் செய்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்வதையும், இல்லையெனில் பிறர் மீது பழி போடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    திமுக அரசு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை, பிபிசி தமிழின் இந்த முகநூல் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

    ஓ.பன்னீர்செல்வம்
  4. ஆஸ்கர் விருதை வென்ற படத்திற்கு பின்னணியில் இருந்த இந்தியர். யார் இவர்?

  5. இலங்கைக்கு எரிபொருள் வழங்கி இந்தியா உதவி

    இலங்கை பொருளாதார நெருக்கடி - இந்தியா

    பட மூலாதாரம், @IndiainSL/Twitter

    இலங்கைக்கு இந்திய உதவியின்கீழ் மொத்தமாக 2,70,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகளவான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது என, இந்திய உயர் ஆணையரகம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள், ஒரு கட்டத்தில் வீதியில் இறங்கி ஆங்காங்கே நடத்திய ஆர்ப்பாட்டங்கள், இப்போது ஜனாதிபதியை பதவி விலக சொல்லும் போராட்டமாக நாடு முழுவதும் மாறியிருக்கிறது.

    இந்நிலையில், இந்திய உயர் ஆணையரகம் தன் ட்விட்டர் பக்கத்தில், "எரிபொருளுக்கான இந்திய கடனுதவி செயலில்!!! கடந்த 24 மணித்தியாலங்களில் 36000 MT பெட்ரோல், 40000 MT டீசல் அடங்கிய ஒருதொகுதி எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய உதவியின்கீழ் மொத்தமாக 270,000 மெட்ரிக்டன்னுக்கும் அதிகளவான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. குற்றவியல் நடைமுறை அடையாள சட்டம் 2022: என்னதான் சொல்கிறது?

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை நாடாளுமன்றம் முன்பு மக்கள் போராட்டம்

    இலங்கை நாடாளுமன்றம்

    பட மூலாதாரம், ANI

    இலங்கை நாடாளுமன்றம் முன்பு தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள், ஒரு கட்டத்தில் வீதியில் இறங்கி ஆங்காங்கே நடத்திய ஆர்ப்பாட்டங்கள், இப்போது ஜனாதிபதியை பதவி விலக சொல்லும் போராட்டமாக நாடு முழுவதும் மாறியிருக்கிறது.

    இந்நிலையில், கொழும்புவில் உள்ள இலங்கை நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. ரஷ்ய அதிபர் புதினின் மகள்கள் யார்?

    விளாடிமிர் புதின்

    பட மூலாதாரம், Alamy

    படக்குறிப்பு, 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதின் குடும்பம்

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தன் குடும்பத்தினர் குறித்து பொதுவெளியில் அடையாளப்படுத்தாமல் எப்போதும் பாதுகாத்தே வந்துள்ளார். தன்னுடைய மகள்களின் பெயர்களைக்கூட அவர் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.

    ஆனால், புதினுடைய 35 வயதான கேத்தரீனா டிகோனோவா மற்றும் 36 வயதான மரியா வொரோன்ட்ஸோவா இருவரின் பெயர்களும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட தடைகளில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் புதின் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி லியூட்மிலாவின் மகள்கள் ஆவர்.

    அவருடைய மூத்த மகள் மரியா வொரோன்ட்ஸோவா 1985ஆம் ஆண்டு பிறந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிப்பும், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மருத்துவமும் பயின்றார்.

    தற்போது அவர் கல்வியாளராக உள்ளார், நாளமில்லா சுரப்பிகள் பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். அவர் தொழிலதிபராகவும் உள்ளார். பெரிய மருத்துவ மையம் ஒன்றின் கட்டுமானத்திற்கு திட்டமிட்டுள்ள நிறுவனம் ஒன்றின் இணை உரிமையாளராகவும் அவர் உள்ளதை பிபிசி ரஷ்யா கண்டறிந்துள்ளது.

    அவருடைய தங்கை கேத்தரீனா டிகோனோவா பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவராக உள்ளார். அவர் 'ராக் அண்ட் ரோல்' நடனக்கலைஞர். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் கேத்தரீனாவும் அவருடைய இணையும் 5ஆவது இடத்தைப் பிடித்தனர்.

    அவர் தற்போது கல்வித்துறையிலும் தொழிலதிபராகவும் உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டில் நியூரோ தொழில்நுட்பம் குறித்து ரஷ்ய அரசு ஊடகத்தில் பேசியுள்ளார். மேலும், 2021 ஆம் ஆண்டில் தொழில் நிகழ்ச்சி ஒன்றிலும் உரையாற்றியுள்ளார்.

  9. மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% ஒதுக்கீடு: மகத்தான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது - வில்சன்

    நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து ஆளுநர் தரப்பு பிபிசி தமிழுக்கு விளக்கமளித்துள்ள நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் என்ன சொல்கிறார்? இதுகுறித்து வில்சனுடன் பிபிசி தமிழ் நடத்திய நேரலையை இங்கே காணுங்கள்:

  10. இலங்கை பொருளாதார நெருக்கடி: கோட்டாபய ராஜபக்ஷ செய்த தவறுகள் என்ன?

  11. வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரம்: சமூகநீதி நிலைநாட்டப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

    வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதி நிலைநாட்டப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:

    “10.5% சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையாக வழக்கறிஞர்களை வைத்து வாதாடததாலேயே அச்சட்டம் ரத்து செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் இங்கு பேசியுள்ளார்.

    இந்த சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக வாதாடியது. உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை அரசு வழக்கறிஞரே வாதாடியிருக்கிறார்.

    உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலே ஆணித்தரமாக வாதாடியிருக்கிறார்கள்.

    உச்ச நீதிமன்றமே இதுகுறித்த தீர்ப்பில், “அரசு தவறு இழைத்துள்ளது என நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 26-02-2021-லிருந்து யாருடைய தலைமையிலான அரசு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மற்ற குறைகளை இங்கு நானும் ஒருமுறை சுட்டிக்காட்டி, “ஏட்டிக்குப் போட்டி அரசியல்" நடத்த நான் தயாராக இல்லை.

    இது மாநிலத்தின் சமூக நீதிப் பிரச்னை; சிறப்பு இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை. ஆகவே, இந்த சிறப்பு இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும்” என பேசினார்.

  12. இலங்கையில் சுகாதார அவசர நிலையை அறிவித்தது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

    இலங்கை பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் சுகாதார துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கையில் சுகாதார அவசர நிலையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்தது. இதுகுறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரிடம் நடத்திய நேரலையை இங்கே காணுங்கள்:

  13. செல்போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடியதால் மனபிறழ்வு - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்

    செல்போன் விளையாட்டுகள்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    செல்போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடியதில் மனபிறழ்வால் பாதிக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் மனபிறழ்வால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த அந்த 17 வயது மாணவர் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியதால் இந்த மனப்பிறழ்வுக்கு ஆளானது மருத்துவர்களின் முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    மருத்துவமனையில் செல்போனில் கேம் விளையாடுவது போலவே நிஜத்திலும் அந்த மாணவர் செய்துள்ளார். இந்த செய்கைகளை அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    நள்ளிரவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர் அதிகாலை வேளையில் மருத்துவமனையில் ஊழியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் அம்மாணவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வைரலான காணொளி அடிப்படையில் காவல் துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.

    இச்சம்பவம், மாணவர்கள் செல்போன் கேம்ஸ் தொடர்ச்சியாக விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது.

  14. எரிபொருள் விலை உயர்வு - புதுச்சேரியில் திமுக போராட்டம்

    புதுச்சேரி திமுக போராட்டம்

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து புதுச்சேரியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் எனவும் புதுச்சேரி மாநில அரசை கண்டித்தும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், புதுச்சேரி அண்ணா சிலையில் இருந்து திமுகவினர் மாட்டு வண்டியிலும், ஊர்வலமாகவும் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சட்டப்பேரவையை நோக்கி சென்றனர்.

    தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, திமுகவினர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

  15. ரஷ்ய படையெடுப்பு உங்களின் பாக்கெட்டை பதம் பார்க்க வாய்ப்பிருக்கிறதா? - விளக்கமான காணொளி

    யுக்ரேன் மண்ணில் ரஷ்யா படையெடுத்தால் இந்தியாவின் தென்கோடியில் உள்ளவரின் வீட்டில் அடுப்பு எரிவதில் என்ன சிக்கல்? யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு இந்தியர்கள் விலை கொடுக்க வேண்டியிருக்குமா? உங்களின் பாக்கெட்டை ரஷ்யாவின் படையெடுப்பு பதம் பார்க்க வாய்ப்பிருக்கிறதா? இதனை விளக்குகிறது இந்த காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

    சி.வி.சண்முகம் கைது
    படக்குறிப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தில் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர்.

    காவல்துறை அனுமதிக்காத இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனம் திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம் ஆகிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதனை கண்டித்தும், திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையினர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடத்த அனுமதியளித்திருந்தது. ஆனால், காவல் துறையினர் அனுமதி அளிக்காத இடமான பழைய பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். எனவே, அனுமதியளிக்காத இடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டதால், காவல் துறையினரால் சி.வி.சண்முகம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

    முன்னதாக உண்ணாவிரதப் போராட்டத்தின் மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    பாலியல் வன்கொடுமைகளை கண்டும் காணாமல் காவல்துறை உள்ளது. தமிழகத்தில் உள்ள காவல்துறையினர் திறமையானவர்கள். ஆனால், அவர்களை வழிநடத்துகிற முதலமைச்சர் திறமையற்றவராக உள்ளார்" என தெரிவித்தார்.

  17. இலங்கையில் கடும் மின் தட்டுப்பாடு - முக்கிய தொழில்கள் பாதிப்பு

    இலங்கையில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முக்கிய தொழில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டு வரும் நிலையில், அங்கு மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    பொருளாதார மற்றும் அன்னிய செலாவணி நெருக்கடியால் மின்வெட்டு மற்றும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது இலங்கைக்கு அவசியமாக தேவைப்படும் வெளிநாட்டு வருவாயை நாட்டுக்குக் கொண்டு வரும் தொழில்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    பல தொழிற்சாலைகளில் மின்வெட்டு தினசரி நிகழ்வாக இருக்கிறது.

  18. நீட் தேர்வா? 12ஆம் வகுப்புத் தேர்வா? - மாணவர்களுக்கு தெளிவுபடுத்த அன்புமணி வலியுறுத்தல்

    அன்புமணி ராமதாஸ் நீட் தேர்வு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 2 மாதங்கள் நிறைவடைகின்றன. ஆனால், இன்னும் தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை!

    நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை என்பதை விட இது மிகவும் மோசமான நிலையாகும். 12-ஆம் வகுப்புத் தேர்வா... நீட் தேர்வா... எதில் கவனம் செலுத்துவது என்ற மன உளைச்சல் மாணவர்களை வாட்டும். அது எந்தத் தேர்விலும் கவனம் செலுத்த விடாமல் செய்து விடக் கூடும்!

    இந்தக் குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராமப்புற ஏழை மாணவர்கள் தான். நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை க.சுபகுணம் மற்றும் விஷ்ணுப்ரியா ராஜசேகர் ஆகியோர் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    இலங்கை மற்றும் யுக்ரேனில் இருந்து பல்வேறு செய்தியாளர்கள் வழங்கும் செய்திகளையும், தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  20. சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார்.