நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
- தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை யுக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
- இந்த தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்காது என, ரஷ்ய நாட்டின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
- ரஷ்ய எண்ணெய் கிடங்கில் தாக்குதல் நடைபெற்றதாக கூறியுள்ள நிலையில், இதனை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என, யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
- மேரியோபோலில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்திற்கு யுக்ரேன் மற்றும் ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக, செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
- ரஷ்ய படைகள் கைப்பற்றிய ஒரே பெரிய நகரமான கேர்சனில் தாங்கள் வலுவடைந்து வருவதாக யுக்ரேன் படைகள் தெரிவித்துள்ளன.
- ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.
- விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- டெல்லி அரசு நவீன பள்ளிகளை போன்று தமிழகத்திலும் உருவாக்கப்படும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.