தமிழக பட்ஜெட் - "பெரியாரின் சிந்தனைகள் கொண்ட நூல்களின் தொகுப்பு 21 இந்திய மொழிகளில் வெளியிடப்படும்"

பட மூலாதாரம், bbc
2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார். அதன் சிறப்பம்சங்கள்:
- தமிழ் மொழி வளார்ச்சிக்கு அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு.
- தமிழ் தொல்லியல் மரபு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கவும், அம்மரபை பாதுகாக்கவும் ரூ. 10 கோடியில் புதிய அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள அருங்காட்சியகங்கள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
- சமூநீதியை நிலைநாட்ட கடைசி வரை போராடிய பெரியாரின் சிந்தனைகள் கொண்ட நூல்களின் தொகுப்பு 21 இந்திய மொழிகளில் அச்சு மற்றும் மின்னணு வழியாக வெளியிடப்படும். இதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு





