உறக்கத்திற்கு ஒரு தினமா? - தூக்கம் ஏன் அவ்வளவு முக்கியம்?
உலக உறக்க தினம் அல்லது தூக்க தினம் இந்த ஆண்டு இன்று மார்ச் 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான். அதில் என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?
புதினும் அவருடைய நெருங்கிய அரசியல் கூட்டாளிகளும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட “பேரழிவுகரமான” பொருளாதாரத் தடைகளின் அளவு குறித்து “பதற்றமாக” இருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் காஸ்யனோவ் கூறியுள்ளார்.
க. சுபகுணம்
உலக உறக்க தினம் அல்லது தூக்க தினம் இந்த ஆண்டு இன்று மார்ச் 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான். அதில் என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுடன் உரையாடல்.
"மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என மாற்றம்," என தமிழ்நாடு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.


பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், State Emergency Service/Telegram
கீயவின் வடக்குப் பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நான்கு பேர் காயமைடைந்துள்ளதாக அவசர சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொடில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து 98 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
யுக்ரேன் உள்துறை அமைச்சரின் ஆலோசகரான ஆண்டன் ஜெராஷென்கோ பகிர்ந்துள்ள படங்கள், மோசமாகச் சேதமடைந்த கட்டடங்கள், எரிந்த வாகனங்கள் மற்றும் ஒரு பெரிய பள்ளம் ஆகியவற்றுக்கு மத்தியில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடுவதைக் காட்டுகிறது.

பட மூலாதாரம், State Emergency Service/Telegram

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஊழலை எப்படி நிகழ்த்த வேண்டும் என்பது செந்தில் பாலாஜியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று விமர்சித்ததோடு, “பிஜிஆர் நிறுவனத்தின் தகுதி தெரியாமல் டெண்டர் வழங்கியிருப்பதால், திமுக அரசு கார்ப்பரேட் அரசாகச் செயல்படுகிறது. தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு தொடங்கும். அதற்கான அச்சாரமாகத்தான் பிஜிஆர் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது,” என்றும் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “பிஜிஆர் நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. வாழ்ந்த 13,700+ சொச்ச நாட்களில் 20,000 புத்தகங்கள் வாசித்திருக்கும் அதிமேதாவிகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டும்” என்று கூறியுள்ளார்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் 23-வது நாள் படையெடுப்பு நடந்து வருகிறது. நீங்கள் இப்போது தான் எங்களுடன் இணைகிறீர்கள் எனில், இன்று இதுவரை நடந்தவை குறித்த சுருக்கம் உங்களுக்காக...
சேலம் கொண்டலாம்பட்டி கலர்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இரு சக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட கடந்த 4 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று சரண்யாவிற்கும் ரவிக்குமாருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ரவிக்குமார் வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டார்.
அதற்குப் பிறகு, வீட்டில் தனியாக இருந்த சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கணவனுக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். அவரும் உடனே மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.
இதற்கிடையே சரன்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த சரண்யாவின் உறவினர்கள் ரவிக்குமாரை தாக்கி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் அவமானம் அடைந்த ரவிக்குமார் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சரக்கு ரயிலுக்கு முன் படுத்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரிக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது ஒன்று அல்லது இரண்டு கமாண்டோக்கள், காவல்துறை அதிகாரி உட்பட 8 பேரை உள்ளடக்கியது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இன்று காலையில் பல்வேறு ஏவுகணைகளால் லுவிவில் உள்ள கட்டடம் ஒன்று தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று நகர மேயர் அவருடைய டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டடம் விமான பராமரிப்பு ஆலை எனக் கூறப்பட்டுள்ளது. ஆலையின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணியாளர்கள் தற்போது அந்த இடத்தில் இருப்பதாகவும் மேயர் ஆண்ட்ரி சாதோவி கூறினார்.
இலங்கையில் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் கொழும்புவில் ஒன்றுகூடி, ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள்.
"இலங்கையில் பணம் இருந்தும் பொருட்களை வாங்கும் சூழ்நிலை, எரிபொருள் இல்லை, சமையல் எரிவாயு இல்லை, இலங்கையில் வாழ்வதற்கான சூழலே இல்லை" என்பன போன்ற கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தீண்டாமை சுவர்களை எழுப்பி பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு மாற்று சமூகத்தினர் இடையூறு செய்வதாக புகார் எழுந்துள்ளது. `அதிகாரிகளிடம் மனு கொடுத்த பிறகுதான் அது அரசாங்க நிலம்னு தெரியவந்தது. ஆனாலும் சுவர்களை முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்கின்றனர் தோக்கமூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.
இதுகுறித்த பிபிசியின் கள ஆய்வை முழுமையாக இந்தக் காணொளியில் காணுங்கள்.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறதா தலைமையிலான அரசின் பட்ஜெட்?
முழு பட்ஜெட்டையும் பார்க்க...

லுவீவ் விமான நிலைய பகுதிக்கு அருகிலுள்ள கட்டடம் ஒன்று, இன்று காலையில் தாக்கப்பட்டதாக முன்னர் தெரிவித்திருந்தோம். லுவீவ் நகரம், போலந்து எல்லையிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கு மற்றும் தெற்கிலுள்ள முக்கிய போர் மண்டலங்களில் இருந்து இது வெகுதொலைவில் உள்ளது.
ஐந்து நாட்களுக்கு முன்பு லூவிவில் இருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள யாவொரிவில் இருக்கும் ராணுவப் பயிற்சி நிலையத்தின் மீதும் இதேபோன்ற தாக்குதல் நடந்தது. அதைவிட, இந்தப் பகுதி குண்டுவீச்சில் இருந்து ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டது.
லூவிவில் உள்ள நமது பிபிசி செய்தியாளர் ஜோனா ஃபிஷர், ஷெல் குண்டு தாக்குதல் நடந்த இன்று காலை வரை லூவிவ் “பாதுகாப்பான புகலிடமாக” கருதப்பட்டதாகக் கூறினார்.
முக்கிய வழித்தடங்கள் போலந்து வழியாகச் செல்வதால், “நாட்டிற்குள் ஆயுதங்களை விநியோகிப்பதற்கான பாதையைத் துண்டிக்கும்” ரஷ்ய படைகளின் முயற்சியாக இது இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிக் கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவுள்ளேன்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்த செய்திகள், தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

பட மூலாதாரம், UKRAINE SES
கார்ஹிவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட தீயை அணைத்துக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், அந்தப் பகுதியில் தொடர்ந்து நிகழ்ந்த ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அவசர சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை அன்று கார்ஹிவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ரஷ்ய தாக்குதலில் ஏற்பட்ட தீயை அணைக்க பெயர் குறிப்பிடாத தொழிலாளி உதவி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, "தீயணைக்கும் போது, ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை நடத்தினர். அதில், இரண்டு மீட்புப் பணியாளர்கள் குண்டுவெடிப்பில் காயமடைந்தனர்," என்று யுக்ரேன் அவசர சேவை அதன் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
காயமடைந்த இருவரில் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது, யுக்ரேனின் லுவிவ் நகர விமான நிலையத்தில் அல்ல எனவும், அதன் அருகில் உள்ள கட்டடத்தில் தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அந்நகர மேயர் தன் டெலிகிராம் செயலி மூலம் தெரிவித்துள்ளார்.
“நிச்சயமாக தாக்குதல் நடந்தது விமான நிலையத்தில் அல்ல,” என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஏவுகணை தாக்குதல் என உறுதிபடுத்தப்பட்டால், யுக்ரேனில் ரஷ்ய படைகள் படையெடுப்பை மூன்று வாரங்களுக்கு முன் தொடங்கியதிலிருந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லுவிவ் நகருக்கு மிக நெருக்கமாக நடைபெற்ற தாக்குதல் இதுவாகும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பூந்தமல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த103 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற அரசு தலைமை ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை 7-ம் தேதி அவரதுவீட்டில் வாடகை வசித்து வந்த தம்பதியினரின் 5 ஆம்வகுப்பு படித்து வந்த 10 வயது மகளை சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த வழக்கில், அவரை போக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இதையொட்டி, பரசுராமன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும், 45 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்குமாறு அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு தொடர்ந்து வரும் நிலையில், இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் தொலைபேசி மூலம் உரையாட உள்ளனர்.
இந்த உரையாடலில், இதுவரை விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளிலிருந்து ரஷ்யாவை சீனா காப்பாற்ற முயன்றால், அதற்கான விலையை சீனாவும் கொடுக்க நேரிடும் என பைடன் எச்சரிக்கலாம் என, ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்ற மாநாட்டுக்குப் பின்னதாக இருவரும் தற்போது முதல்முறையாக பேசவுள்ளனர். ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்கா உள்ளநிலையில், சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது.
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளை களைய வாய்ப்பு ஏற்படலாம்.
ஷி ஜின்பிங்கின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்த பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்க அதிபர் அறியும் வாய்ப்பு ஏற்படலாம் என வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ஜென் பிசாகி தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் மற்றும் சர்வதேச விநியோக சங்கிலி குறித்தும் இதில் பேசப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
யுக்ரேன் ராணுவத்திற்கு அமெரிக்கா ஆயுத உதவி மட்டுமல்லாமல், ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகளை ஒன்றிணைக்கும் பணியிலும் அமெரிக்கா ஈடுபட்டது. ஆனால், ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது. இதனால், சீனா ரஷ்யாவுக்கு நிதி மற்றும் ராணுவ உதவியை வழங்கும் என, அமெரிக்கா அஞ்சுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், ரஷ்ய தாக்குதலை ஆதரிப்பதற்கான பொறுப்பை சீனா ஏற்க வேண்டும் என, பைடன் இப்பேச்சுவார்த்தை மூலம் தெளிவுபடுத்துவார் என தெரிவித்தார்.

செந்தில்பாலாஜியின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
“ஊழலை எப்படி நிகழ்த்த வேண்டும் என்று செந்தில் பாலாஜியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும், அவர் ஊழலின் தளபதியாக செயல்படுகிறார். செந்தில்பாலாஜி ஊழல்வாதி என ஸ்டாலினே கூறியுள்ளார்.
பிஜிஆர் நிறுவனத்தின் தகுதி தெரியாமல் டெண்டர் வழங்கியிருப்பதால் திமுக அரசு கார்ப்பரேட் அரசாக செயல்படுகிறது. கோபாலபுரம் குடும்பத்தினர் அனைத்து துறைகளிலும் தலையிட தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய மின்வெட்டு தொடங்கும். அதற்கான அச்சாரமாகத்தான் பிஜிஆர் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி பிஜிஆர் நிறுவனத்தின் ஊழியராக பேசுவதை விட தமிழகத்தின் அமைச்சராக பேச வேண்டும். டான்ஜெட்கோ நிராகரித்த நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டர் அனுமதி வழங்கியது ஏன்? 4472 கோடி ரூபாய்க்கு விதண்டாவாதமாக பிஜிஆர் நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியுள்ளனர். பிஜிஆர் நிறுவனத்தின் டெண்டர் முறைகேடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
பிஜிஆர் நிறுவனம் 15 ஆண்டு காலமாக அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியுள்ளது குறித்து நிறுவனம் தொடங்கிய நாள் முதல் விசாரணை நடத்த வேண்டும்.மின்சாரத்துறை அமைச்சர் தனது பதவியை முதலில் காப்பாற்றிக்கொள்ளட்டும். மின்வாரிய அமலாக்கத்துறை முறையாக செயல்படுவதில்லை.
செந்தில் பாலாஜி என் மீது அவதூறு வழக்கை தொடர்ந்தாலும், காவல்துறையை வைத்து கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் சந்திக்க நான் தயார்.சிறையில் இருந்து வந்து மீண்டும் திமுக அரசின் ஊழலை வெளிக்கொண்டு வருவேன்.திமுக மட்டுமல்ல நாங்களும் ஆட்சியில் உள்ளோம்” என்றார்.