நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி.
இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.
இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.
- யுக்ரேன் அதிபர் இரவு தொலைக்காட்சி உரையில் பேசியபோது, “ரஷ்யப் படைவீரர்கள் உயிர் வாழ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், சரணடைபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவீர்கள்,” என்று கூறியுள்ளார்.
- அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரொக்கம் 84 லட்சம் மற்றும் 34 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சி முதலீடுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்பத் துறை தெரிவித்துள்ளது.
- ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளருக்கு 30,000 ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டது.
- ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
- கிழக்கு யுக்ரேன் நகரமான டினிப்ரோவில் உள்ள விமான நிலையம், ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது நடந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் வியாழன் காலை 7 மணி வரை, ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது.
- ரஷ்யாவின் மிக முக்கியமான தொலைக்காட்சி சேனல் ஒன்றின் செய்தி தொகுப்பாளர் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
















