புதிய ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நரேந்திர மோதி
மகாராஷ்டிர மாநிலம் தானே - திவா இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. இன்று மாலை 4.30 அளவில் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மும்பை புறநகர் ரயில்வேயின் இரண்டு புதிய ரயில்களையும் பிரதமர் கொடியசைத்துத் தொடக்கிவைப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாக ஏ.என்.ஐ. முகமை கூறுகிறது.
தொடர்புடைய செய்தி: