"ஆளுநரை திருப்திப்படுத்தவே அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக"- மா.சுப்ரமணியன் புகார்

ஆளுரை திருப்திபடுத்துவதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறை சாம்பியன் ஆனது - வரலாற்று சாதனை

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அண்டர்-19 (U19) உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த நாடும் படைத்திராத சாதனையை இந்தியா பதிவு செய்திருக்கிறது.

    ஆண்டிகுவாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யஷ் துல் தலைமையிலான இந்திய இளம் பட்டாளம் நாட்டிற்காக 5வது முறை கோப்பையை வென்றுள்ளது.

    U19 உலகக்கோப்பை தொடரில் 2000, 2008, 2012, 2018, 2022 என ஐந்து முறை கோப்பை வென்ற ஒரே அணி எனும் வரலாற்றிச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா

  2. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    லதா மங்கேஷ்கர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லதா மங்கேஷ்கர்

    கொரோனா மற்றும் நிமோனியாவில் இருந்து மீண்டு வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், நேற்று வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியானது.

    இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக ஜனவரி 27 அன்று, "லதா மங்கேஷ்கரின் உடல்நிலை முன்னேறியதை அடுத்து, அவர் வென்டிலேட்டர் உதவி இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்" என்று டாக்டர் சம்தானி தெரிவித்திருந்தார். பாரத ரத்னா' விருது பெற்ற லதா மங்கேஷ்கர் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  3. போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானியர்கள் சர்வதேச எல்லை அருகே சுட்டுக்கொலை - பி.எஸ்.எஃப்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    போதைப்பொருள் கடத்திய மூன்று பாகிஸ்தானிய கடத்தல்காரர்களை ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சம்பா செக்டர் பகுதியை அருகே சுட்டுக் கொன்றுள்ளதாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது என்று பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

    இப்பகுதி சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  4. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ்: வெளிநாட்டு தலைவர்களை தொடர்ந்து சந்திக்கும் ஷி ஜின்பிங்

    பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு வந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் சனிக்கிழமை சந்தித்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

    அமெரிக்காவுடனான உறவு கசப்படைந்து வரும் சூழலில் விளையாட்டு விழாவிற்கு வந்த உலக தலைவர்களை சந்திப்பு மூலம் தமது வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சீன அரசு முயன்று வருகிறது. சீன அதிபர் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். சனிக்கிழமை செர்பியா, எகிப்து, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் ஷி ஜின்பிங் சந்தித்துள்ளார். தலைநகர் பெய்ஜிங்கில் வெள்ளியன்று நடந்த குளிர்கால ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    ஆனால் தங்களது விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது நிர்வாகக் குழுவினரை மட்டுமே அனுக்கிவைத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை வெளியுறவு ரீதியாகப் புறக்கணித்தன.

  5. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது ஆ. லட்சுமி காந்த் பாரதி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.