216 அடி உயர ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோதி

இந்த ராமானுஜர் சிலையின் உயரம் 108 அடி. இதன் மேடையின் மொத்த உயரம் 54 அடி மற்றும் பத்ம பீடத்தின் உயரம் 27 அடி. அந்த இடத்திற்கு பத்ரபீடம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. நேயர்களுக்கு நன்றி!

    இத்துடன் இன்றைய நேரலை பக்கம் நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை: சீருடை கட்டாயம் என அரசு ஆணை

    கர்நாடகாவில் முன் பல்கலை கல்லூரிகளின் சீருடை குறித்த புதிய ஆணை ஒன்ற அம்மாநில அரசு இன்று வெளியிட்டள்ளது.

    இதில் வகுப்பறையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்ற தடை குறித்து உயர் நீதிமன்றம் விசாரிக்கும் வரை வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு கல்லூரிகளில் உள்ள கல்லூரி வளர்ச்சி கமிட்டி சீருடைகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் கல்லூரிகள் சீருடை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    இதுகுறித்து பிபிசி ஹிந்தி சேவையிடம் பேசிய கர்நாடகாவின் இடைநிலை கல்வி அமைச்சர் நாகேஷ் பிசி, "நாங்கள் இதுகுறித்து ஆலோசித்தோம். உயர்நீதிமன்றத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விவரிக்கப்படும். ஒவ்வொரு கல்லூரிக்கும் அதனின் சீருடையை தேர்வு செய்யும் உரிமை உள்ளது," என்றார்.

  3. மாநிலத்தின் ஆளுநரை திரும்ப பெறுவது சட்ட ரீதியாக சாத்தியமா?

    மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கு இந்திய அரசு கட்டாயமாக்கியிருக்கும் நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை மீண்டும் சபாநாயகரின் மறுபரிசீலனைக்கே அனுப்பியிருந்தார் மாநில ஆளுநர் ஆர்.என் ரவி.

    இது தொடர்பாக அவரது மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மற்றும் இது தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்த ஆளுநர், "அந்த மசோதா மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கருத்தை கொண்டிருக்கிறார். குறிப்பாக மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நலன்களுக்கு அது எதிரானது என ஆளுநர் கருதுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டது.

    இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று காலை நீட் விலக்கு தொடர்பான அனைத்து கூட்டம் நடைபெற்றது.

    "சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது", கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  4. இலங்கை மீனவர்கள் உயிரிழப்பு: செய்வதறியாது தவிக்கும் குடும்பம்

    இலங்கை மீனவர்கள், இந்திய தமிழ்நாட்டு மீனவர்களாலேயே நடுக்கடலில் வைத்து தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டி இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், அந்த குற்றச்சாட்டு வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது என இந்தியாவின் தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  5. 'சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலையை' திறந்து வைத்தார் பிரதமர் மோதி

    'சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலையை' இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள சமூக நீதி கூட்டமைப்பு- ஓபிஎஸ் கடிதம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு அதிமுக உட்பட 37 அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த கடிதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் அதை வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அந்தக் கடிதத்தில், அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை. ஒரு அமைப்பை தொடங்குவதற்கு முன் ஒத்த கருத்து கொண்டவர்களை அழைத்துப் பேசி விவாதிக்க வேண்டும். விவாதிக்காமல் அமைப்பை ஏற்படுத்தி விட்டு பிரதிநிதியை நியமிக்கக் கூறுவது கூட்டாட்சிக்கு முரணாக உள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

  7. "விவசாயிகளை தெருக்களில் இருக்க வைத்த பிரதமர்"- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, ராகுல் காந்தி

    கொரோனா நோய் தொற்றின்போதும் விவசாயிகளை கடந்த ஓராண்டு காலம் தெருக்களில் இருக்க, பிரதமர் நரேந்திர மோதி அரசு நிர்பந்தித்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது சம்பந்தமாக பிடிஜ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், "காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இது போன்ற சூழ்நிலை ஒருபோதும் நடந்திருக்காது" என்று, உத்தரகாண்ட் மாநிலம் கிச்சா விதான் சபாவில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி இவ்வாறு கூறி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கூறுகையில், மோதி நாட்டை ஆள்கின்ற ஒரு மன்னரே தவிர பிரதமர் இல்லை என்றும் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை பற்றி பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்றும் தெரிவித்தார்.

    விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் அல்லது ஏழைகளுக்கு கோரிக்கைக்கான கதவுகள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மூடப்படாது என்றும், அவர்களுடன் இணைந்து ஆட்சியை நடத்தும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி, உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்றும் வாக்குப்பதிவின் முடிவு மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  8. மீண்டும் மோசமடைந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    லதா மங்கேஷ்கர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லதா மங்கேஷ்கர்

    கொரோனா மற்றும் நிமோனியாவில் இருந்து மீண்டு வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதால், தற்போது அவர் மீண்டும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக ஏ.என்.ஜ செய்தி முகமையிடம் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பிரதிமா சம்தானி கூறும்போது, "தற்போது லதா மங்கேஷ்கர், தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார்" என்றும்‍, மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

    முன்னதாக ஜனவரி 27 அன்று, "லதா மங்கேஷ்கரின் உடல்நிலை முன்னேறியதை அடுத்து, அவர் வென்டிலேட்டர் உதவி இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்" என்று டாக்டர் சம்தானி தெரிவித்திருந்தார். லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழு, வதந்தியோ, தவறான தகவல்களோ பரவாமல் இருக்க, அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து ஊடகங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். 'பாரத ரத்னா' விருது பெற்ற லதா மங்கேஷ்கர் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  9. உலகளாவிய லட்சியங்களுடன் இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றாக போட்டியிடும் 'கூ' செயலி

    2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'கூ' செயலி நிறுவப்பட்டது.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'கூ' செயலி நிறுவப்பட்டது.

    இந்திய மைக்ரோ பிளாக்கிங் செயலியான 'கூ' ட்விட்டரை தோற்கடிக்க முடியுமா?

    அதுதான் இலக்கு என்கிறார் அச்செயலியின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா. இந்த ஆண்டு இந்தியாவில் ட்விட்டரின் 2.5 கோடி எனும் வலுவான பயனர் தளத்தை விஞ்சும் என்று'கூ' செயலிஎதிர்பார்க்கிறது என்று அவர் கூறுகிறார்.

    இது 2021ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 2 கோடி பதிவிறக்கங்களைத் தொட்டுள்ளது.

    "நாங்கள் இப்போது ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் செயல்படுகிறோம். இந்த ஆண்டு இந்தியாவின் அதிகாரப்பூர்வமான 22 மொழிகளும் செயல்பட விரும்புகிறோம்," என்று பெங்களூரில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

    இந்திய அரசுக்கும் அமெரிக்காவின் மைக்ரோ பிளாக்கிங் (micro-blogging) தளமான ட்விட்டருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், ட்விட்டருக்கு மாறாக 'கூ' செயலி, கடந்த ஆண்டு கவனத்தை ஈர்த்தது முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  10. அசாதுதீன் ஓவைசி கார் மீது தாக்குதல்: தேர்தல் பிரசாரத்தில் கண்டனம் தெரிவித்த அகிலேஷ் யாதவ்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    உத்தரபிரதேசத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில், ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர்.

    சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தல் பிரசாரத்தின் போது, "ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் நீதியை கோரினர் அவர்கள் தங்களது மகளை மரியாதையுடன் தகனம் செய்ய விரும்பினர். ஆனால் இந்த அரசு என்ன செய்தது? அரசு அதை நடக்கவிடவில்லை. மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற்றிருந்தால், அவர் இன்று உயிருடன் இருந்திருக்கலாம்.", என்று தெரிவித்திருக்கிறார்.

    சமீபத்தில் அசாதுதீன் ஓவைசி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் பேசியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

  11. நீட் தேர்வை ரத்து செய்யும் நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது - ஓ.பி.எஸ்

    ஓ.பன்னீர்செல்வம்
    படக்குறிப்பு, ஓ.பன்னீர்செல்வம்

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ்.கடிதம்

  12. அனைத்து டோஸ்களும் செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இலங்கையில் புதிய கட்டுப்பாடுகள்

    இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளின் அனைத்து டோஸ்களையும் செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு பொது இடங்களுக்குள் செல்ல தடை விதிக்கும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

    எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி முதல் அமலுக்குவரும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

    சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி, பொது இடங்கள் மற்றும் பூரண தடுப்பூசி என அடையாளப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பிலான தகவல்களை எதிர்வரும் காலத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

  13. 143 நாட்கள் மசோதாவை மேசையில் வைத்துவிட்டு திருப்பி அனுப்பியதாக மு. க. ஸ்டாலின் கருத்து.

    நீட் விவகாரம் சம்பந்தமாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசுகையில், "முன்பு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை எட்டு கோடி மக்களின் கோரிக்கையாக, மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பினோம். மேலும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்த பொழுதும் பிரதமரிடம் இது சம்பந்தமாக முறையிட்டேன். இப்பொழுது 143 நாட்கள் மசோதா மேசையில் வைக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

    சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தின் புகைப்படம்.

    பட மூலாதாரம், TNDIPR

    படக்குறிப்பு, சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தின் புகைப்படம்.
  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் விலக்கு மசோதா: மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற விரைவில் சிறப்புக் கூட்டத்தொடர்: தமிழக அரசு

    தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
    படக்குறிப்பு, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    நீட் விலக்கு மசோதாவை மாநில ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பிய விவகாரத்தில் மீண்டும் சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வைக் கூட்டி மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், அதிமுக, பாஜக அல்லாத சட்டப்பேரவை கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியபோது அவர் குறிப்பிட்டிருந்த சில காரணங்களை பேரவையின் சிறப்பு அமர்வு கூடி விவாதிக்கும் என்றும் அதன் அடிப்படையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க ஆளுநர் கேட்டுக் கொள்ளப்படுவார் என்றும் தெரிவித்தார்.அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக அல்லாத பிற கட்சிகள் பங்கேற்று முன்வைத்த கருத்துகளைத் தொடர்ந்து இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மா. சுப்பிரமணியன் கூறினார்.

    சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரை மீண்டும் கூட்டுவது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை சபாநாயகர் விரைவில் வெளியிடுவார் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

  15. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற உள்ளது

    தமிழ்நாடு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் எனவும், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி வரை 37,518 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  16. நீட் தேர்வு: "மருத்துவ படிப்பில் சேர 5 ஆண்டுகள் காத்திருந்தேன்" - ஒரு மாணவரின் கனவுப் பயணம்

    காணொளிக் குறிப்பு, "மருத்துவ படிப்பில் சேர 5 ஆண்டுகள் காத்திருந்தேன்" - ஒரு மாணவரின் கனவுப் பயணம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற மாணவர், கடந்த 2017 ஆம் ஆண்டு, பிளஸ் டூ முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் தேர்வாகவில்லை. ஆனால், மருத்துவம் படிக்கும் அவரது கனவு இப்போது நனவாகியுள்ளது.

  17. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெருமை சேர்த்த தமிழர் ஆட்டநாயகனாக தேர்வு.

    Cricket
    படக்குறிப்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெருமை சேர்த்த நிவேதன் ராதாகிருஷ்ணன்.

    U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மூன்றாம் இடத்தை பிடித்தது ஆஸ்திரேலிய அணி; 3 விக்கெட்கள் வீழ்த்தியதோடு, 66 ரன்கள் விளாசிய தமிழகத்தை சேர்ந்த நிவேதன் ராதாகிருஷ்ணன் ஆட்டநாயகனாக தேர்வு.

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்.

    மு. க. ஸ்டாலின்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மு. க. ஸ்டாலின்

    தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து சட்டப்பேரவை இயற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில், இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் தொடங்கியுள்ளது.

  19. 'GetOutGovernorRavi' என தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக் -

    தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும்  மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி

    பட மூலாதாரம், TNDIPR

    படக்குறிப்பு, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி

    தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நடவடிக்கை, அரசியல் சர்ச்சையாக மாறி, மாநில அரசுக்கும் மாநில ஆளுநருக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் என்ன?

    2021ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை (Undergraduate Medical Degree Courses Bill, 2021), சட்டப்பேரவை சபாநாயகரின் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியுள்ளார் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.

    இந்ச மசோதா நிறைவேற்றப்பட்ட சுமார் 5 மாதங்களுக்குப் பின் தமது நிலைப்பாட்டை ஆளுநர் தெரிவித்துள்ளார் முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  20. டெல்லி, ஐம்மூ மற்றும் காஷ்மீர் பகுதிகளில் உணரப்பட்ட நில அதிர்வு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இன்று காலை 9:45 மணியளவில் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம், தகவல் வெளியிட்டுள்ளது.

    இந்த நிலநடுக்க அதிர்வு டெல்லி - என்சிஆர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் மதிப்பாய்வின்படி, 9:16 PST மணிக்கு 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து வடகிழக்கே 259 கிமீ தொலைவிலும், தஜிகிஸ்தானின் துஷான்பேக்கு தென்கிழக்கே 317 கிமீ தொலைவிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து வட-வடமேற்கில் 346 கிமீ தொலைவிலும், குல்மார்க்கிலிருந்து வடமேற்கே 395 கிமீ தொலைவிலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு வடமேற்கே 422 கிமீ தொலைவிலும் ஏற்பட்டது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தகவல் வெளியிட்டுள்ளது.