நன்றி நேயர்களே!
இன்றைய இந்த நேரலையில் எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. நாளை வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
ஆளுரை திருப்திபடுத்துவதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆ. லட்சுமி காந்த் பாரதி
இன்றைய இந்த நேரலையில் எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. நாளை வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.17,000 கோடியாக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது மின்சார வாரியத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத இழப்பு எனவும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்வாரிய இழப்பு ரூ.12,800 கோடி என்ற அளவில் கட்டுப்படுத்தப்படும் என்று உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட நான்காயிரம் கோடி கூடுதலாக இழப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ராமதாஸ், ` தமிழ்நாடு மின்சார வாரியம் 1990-களின் மத்தியில் தொடங்கி, இழப்புகளையே சந்தித்து வருகிறது. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும்போது மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதும் அடுத்து வரும் ஆண்டுகளில் இழப்பு அதிகரிப்பதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லி போகும் திட்டம் ஏதும் இல்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிபிசியிடம் கூறியுள்ளார். முன்னதாக தவறாக, ஏழாம் தேதி மாநில ஆளுநர் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இதை அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை, சட்டப்பேரவை சபாநாயகரின் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியுள்ளார் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி மீண்டும் சட்டவரைவு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லதா மங்கேஷ்கர் உயிரிழந்ததை அடுத்து, இசையமைப்பாளர் இளையராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொளியில், "இதயம் உடைந்துவிட்டது, ஆனால் அவரை அறிந்ததற்கும் அவருடன் பணிபுரிந்ததற்கும் ஆசீர்வதிக்கப்பட்டேன்" எனவும், "இந்த அபாரமான குரலையும் ஆன்மாவையும் நேசித்தேன், லதாஜி நம் இதயங்களில் ஈடுசெய்ய முடியாத இடத்தைப் பிடித்துள்ளார்…அந்தளவுக்கு அவர் தன் குரலால் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்" என கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கடந்த 4 ஆண்டுகளுக்கான புதிய வழித்தடத் திட்ட நிதி ஒதுக்கீட்டில், பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக பதில் கடிதம் வெளியிட்ட எம்.பி சு. வெங்கடேசன்,
"தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தெற்கு ரயில்வே பகுதியில், புதிய வழித்தடத்திட்டத்திற்கு வெறும் 59 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடத் திட்டத்திற்கு 14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நான் ஊடகத்தில் வெளிப்படுத்தியிருந்தேன். இதற்கு பதிலளிக்க வேண்டியது ரயில்வே அமைச்சகத்தின் கடமை . ஆனால் தெற்கு ரயில்வே நிர்வாகமோ தமிழ்நாட்டுக்கு ஏராளமாக நிதி ஒதுக்கப்பட்டது போல செய்தி வெளியிட்டுள்ளது." இவ்வாறு பதில் கடிதத்தை பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், VIJAY
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் அறிவித்துள்ளார். `அது அந்த மாவட்ட நிர்வாகியின் தனிப்பட்ட கருத்து' என்கிறார் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த். முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்களிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கே திருப்பி அனுப்பியிருந்தார். இந்த நிகழ்வுக்கு தி.மு.க உள்பட அரசியல் கட்சிகள் பலவும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தன. இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தி.மு.க அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், `நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வரையில் அ.தி.மு.க உறுதியாக எதிர்க்கும். மாணவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது. தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்த நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனால்தான் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பின்படி ஓர் ஆளுநராக செய்ய வேண்டிய பணிகளைத்தான் தமிழ்நாடு ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்' என்றார்.
இந்நிலையில், சென்னை மேற்கு மாம்பலத்தில் தி.மு.கவின் தேர்தல் பணிமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ` நீட் தேர்வு தொடர்பாக அ.தி.மு.கவின் செயல்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. எந்த ஆளுநரும் செய்யாத ஒன்றை அவர் செய்திருக்கிறார். இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்றிருக்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்காமல் அறிக்கை கொடுத்துள்ளனர். இது ஆளுநரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் பார்க்க முடிகிறது'' என்கிறார்.
"இருமொழிக் கொள்கை, இந்தித் திணிப்பாக இருக்கட்டும், தமிழ்நாட்டில் பெயர் மாற்றம் உள்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியபோது எந்தக் கட்சியாக இருந்தாலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தனர். தற்போதைய ஆளுநர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதுதான் அரசின் குறிக்கோள்'' என்கிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன்.
மேலும், சமூக நீதிக் கூட்டமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தது குறித்தும் அமைச்சர் மா.சுப்ரமணியம் விமர்சித்தார். "அந்தக் கூட்டமைப்புக்கு தான் தலைவர் என முதலமைச்சர் கூறவில்லை. இந்தியாவில் சமூக அக்கறை உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முதல்வர் எழுதியுள்ளார். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்தவர்களில் 10 பேருக்கு, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஏ.என்.ஜ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அந்த செய்தியில், குளிர்கால ஒலிம்பிக்கின் ஒருங்கிணைப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில், "மொத்தம் 72,000 கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், கடந்த 24 மணி நேரத்தில், 4 போட்டியாளர்கள் உட்பட 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று கண்டறியப்பட்ட போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றும் ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள "பிரபுகுஞ்ச்" இல்லத்திற்கு, பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்த, நடிகர் அமிதாப் பச்சன் வருகை தந்துள்ளார். இந்தக் காணொளியை ஏ.என்.ஜ செய்தி முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
ணையத்தில் அதிகம் தேடப்படும் உணவுமுறைகளாக, ஆட்கின்ஸ் முதல் கீட்டோ வரையிலான கார்போஹைட்ரேட் குறைவான உணவுமுறைகள் உள்ளன. இந்த உணவுமுறைகள் உடல் எடை குறைப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைப்பு, அவ்வளவு ஏன் டைப் 2 வகை நீரிழிவு நோயைக்கூட குணமாக்கிவிடும் என கூறப்படுகிறது. ஆனால், கார்போஹைட்ரேட்டுகளை முழுவதும் நம் உணவிலிருந்து நீக்கிவிடுவது, நாம் பின்பற்றுவதற்கான ஆரோக்கியமான உணவுமுறைதானா?

கிரிக்கெட் வரலாற்றில் 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி எனும் பெருமையை பெற்றது இந்தியா. அகமதாபாத்தில் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி பிப்ரவரி 8ஆம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்தில் மீண்டும் சட்ட முன்வரைவை நிறைவேற்ற உள்ளதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில், காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் கூட்டம் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
லதா மங்கேஷ்கர் உயிரிழந்ததை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஏ. ஆர். ரகுமான்.
அதில், "அன்பு, மரியாதை மற்றும் பிரார்த்தனை" என்று எழுதி, லதா மங்கேஷ்கரின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
லதா மங்கேஷ்கர் உயிரிழப்புக்கு தன் வருத்தத்தைத், தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவில் "லதா-ஜியின் மறைவு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பேருக்கு வேதனையாக இருப்பது போல, எனக்கும் மன வேதனையாக இருக்கிறது. அவருடைய, இந்தியாவின் அழகு மற்றும் பெருமையை உணர்த்தும் பலவிதமான பாடல்கள், பல தலைமுறையினரால் உணர்வு நிறைந்த பாடல்களாக பார்க்கப்பட்டுள்ளது. பாரத ரத்னா விருது பெற்ற லதா-ஜியின் சாதனைகள் ஈடு இணையற்றது" என்று கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தியா முழுவதும் ஒரு நாள் கொரோனா பதிவு 1,07,474 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 2,13 ,246 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 865 பேர் உயிரிழந்துள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 5,01,979 ஆகியுள்ளது. தற்போது நாடு முழுவதும் மொத்தம் 12,25,011 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி கொரோனா தொற்று விகிதம் 7.42 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,524 ஆக பதிவாகியுள்ளது என்று மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 14 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 23 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,878 ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் வீட்டில் சிகிச்சை பெறுவோர் என தற்போது 1,38,878 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

லதா மங்கேஷ்கர்க்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பாகிஸ்தானில் #லதா மங்கேஷ்கர் என்ற ஹேஸ் டேக்கை ட்விட்டரில் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
லதா மங்கேஷ்கர் உயிர் இழந்ததை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் ஏ.என்.ஜ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லதா தீதியின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய திரைப்பட துறையில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் நெருக்கமாகக் கவனித்துள்ளார். திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். மேலும் எப்போதும் வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவைப் பார்க்க விரும்பினார்", என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.