தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களில் சுலபமாக வென்றால் அன்புமணியே முதல்வர் ஆவார் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட பாமக ஒருங்கிணைந்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித்தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டனர்.
இதில் டாக்டர் ராமதாஸ் பேசியது:
அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக வேண்டும். கடலூரில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால், இந்த பதவிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்று சொன்னால் மாடு மேய்க்கும் சிறுவனான படிக்காதவனுக்கு இந்த மாவட்ட பொறுப்புகளை கொடுத்து விடுவேன்,"
சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் மேலும் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் வெற்றி பெறாமல் செய்தவர்கள் நம்முடைய கட்சிக் காரர்களே. அதிலும் பொறுப்பில் இருக்கிறவர்கள் மற்றும் இருந்தவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஏன் எல்லா இடங்களிலும் வேட்பாளர்களை போட்டியிடவில்லை?
விலை போனோமா? விட்டுக்கொடுத்தோமா? அல்லது உள்ளூர் அளவில் புரிந்துணர்வு செய்தீர்களா அதாவது காட்டிக் கொடுப்பது, கையூட்டு வாங்குவது, பணம் வாங்குவது, பணம் பறிப்பது.
இப்படி எல்லாம் கட்சிக்காரர்கள் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டாம். நீங்கள் வெற்றி பெறலாம் அதற்கு இவ்வளவு பணம் வாங்கிக் கொள்வது.
எல்லா வார்டுகளிலும், ஊரிலும் ஆட்களை நிறுத்துவதற்கு பஞ்சமா? வேட்பாளரை நிறுத்த முடியவில்லை என்றால் எதற்கு மாவட்ட பதவி? எதற்கு ஒன்றிய பதவி? எதற்கு மாநில பதவி? எல்லா இடத்திலும் ஆட்களை நிறுத்துவதற்கு ஆட்களை இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கட்சி பதவி தேவையா?," என்று கேள்வி எழுப்பினார் ராமதாஸ்.
"இனி வருங்காலத்தில் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டும். ஒரு தொகுதியில் 1 லட்சம் இளைஞர்கள், இளம் பெண்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீடு வீடாகத் திண்ணை திண்ணையாக ஒவ்வொரு வாக்காளரையும் அணுகி நாம் தமிழ்நாட்டை ஆள ஆயத்தமாக வேண்டும், அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக வேண்டும் என்று கடலூரில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால், இந்த பதவிகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்று சொன்னால் மாடு மேய்க்கும் சிறுவனான படிக்காதவனுக்கு இந்த மாவட்ட பொறுப்புகளை கொடுத்திடுமென். பூத்துக்கு 1000 ஓட்டுகள் எனத் தொகுதிக்கு 1 லட்சம் வாக்குகளைப் பெற வேண்டும். நீங்கள் வந்த வழி ஆண்ட பரம்பரை. உங்களது முன்னோர்கள் ஆண்டவர்கள்.
1949ல் ஆரபித்த திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 3வது முறை ஆட்சியைப் பிடித்தனர் இன்று வரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த கட்சி 2016ல் தனியாக நிற்கும் போது வெறும் 23 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். அதற்கு நாம் 5.6% வாக்குகளைப் பெற்று 3வது பெரிய கட்சி என்றோம். எனக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது," என்றார் ராமதாஸ்.
உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறேன். வயதானவர்கள் பேசத் தான் முடியும் இனி இந்த கட்சி இளைஞர்களை நம்பி தான் உள்ளதாக பேசினார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், "கடலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லி இருந்தால் அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்து இருப்பேன்.
தமிழகத்தில் 60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி ராமதாஸ் முதல்வராக ஆள முடியும்.
42 ஆண்டுகள் இந்த மக்களுக்காக பாடுபட்டு வருகிறேன் நாம் யாருக்கு போராடி இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தோமோ அவர்கள் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு மேல் முறையீடு செய்து சரியாகவே செய்கிறது. நல்ல வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக நம்பலாம்.
தமிழகத்தில் அன்புமணி போல ஒரு திறமையானவர் யாரும் இல்லை. ஏன் மக்கள் ஆட்சியைக் கொடுக்க தயங்குகிறார்கள். அன்புமணியை கோட்டையில் அமர வைப்பது உங்கள் கையில் உள்ளது. அன்புமணியை கோட்டையில் அமர வைப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று ராமதாஸ் பேசினார்.