60 இடங்களில் சுலமாக வென்றால் அன்புமணியே முதல்வர்: ராமதாஸ்
எல்லா வார்டுகளிலும், ஊரிலும் ஆட்களை நிறுத்துவதற்கு பஞ்சமா? வேட்பாளரை நிறுத்த முடியவில்லை என்றால் எதற்கு மாவட்ட பதவி? எதற்கு ஒன்றிய பதவி? எதற்கு மாநில பதவி? என்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் டாக்டர் எஸ். ராமதாஸ்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
இலங்கை படகு கவிழ்ந்து 6 பேர் பலியான சம்பவத்தில் கைதான கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு நீதிமன்ற காவல், மப்றூக்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, படகில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பயணித்த போது, அந்தப் படகுப் பாதை கவிழ்ந்ததில் மாணவர்கள் உட்பட 6 பேர் பலியாகினர்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் கிண்ணியா - குறுஞ்சாக்கேணி பகுதியில் அமைந்துள்ள ஆற்றை, படகு கவிழ்ந்த சம்பவத்தில் 4 மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் தொடர்பில், கிண்ணியா நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம். நளீம் இன்று (26) கைது செய்யப்பட்டு கிண்ணியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 9ஆம் தேதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த படகுப் பாதை போக்குவரத்தை நடத்துவதற்கான அனுமதியை கிண்ணியா நகரசபையின் தவிசாளர் கடந்த மாதம் 18ஆம் தேதி எழுத்து மூலம் வழங்கியிருந்தார்.
இது இவ்வாறிருக்க மேற்படி படகு சேவையை நடத்தியவர் உள்ளிட்ட மூவரை, நேற்று (24) போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, அவர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியிலுள்ள ஆற்றைக் கடப்பதற்கு 1977ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பாலம் சேதமடைந்தமையை அடுத்து, புதிய பாலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு - கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வைபவ ரீதியாக இடம்பெற்றது. எனினும் குறித்த பாலத்தை நிர்மாணிக்கும் வேலை மந்த கதியில் நடைபெற்று வந்ததாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் கிண்ணியா நகர சபையின் அனுமதியுடன், கிண்ணியா - குறுஞ்சாக்கேணி ஆற்றைக் கடப்பதற்கான படகுப் பாதை போக்குவரத்து ஒன்று நடத்தப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் (23) மேற்படி படகில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பயணித்த போது, அந்தப் படகுப் பாதை கவிழ்ந்ததில் மாணவர்கள் உட்பட 6 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் கண்டனங்களும், அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
60 இடங்களில் சுலபமாக வென்றால் அன்புமணியே முதல்வர்: டாக்டர் ராமதாஸ், நடராஜன் சுந்தர்
படக்குறிப்பு, கடலூரில் நடைபெற்ற பாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களில் சுலபமாக வென்றால் அன்புமணியே முதல்வர் ஆவார் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட பாமக ஒருங்கிணைந்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித்தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டனர்.
இதில் டாக்டர் ராமதாஸ் பேசியது:
அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக வேண்டும். கடலூரில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால், இந்த பதவிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்று சொன்னால் மாடு மேய்க்கும் சிறுவனான படிக்காதவனுக்கு இந்த மாவட்ட பொறுப்புகளை கொடுத்து விடுவேன்,"
சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் மேலும் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் வெற்றி பெறாமல் செய்தவர்கள் நம்முடைய கட்சிக் காரர்களே. அதிலும் பொறுப்பில் இருக்கிறவர்கள் மற்றும் இருந்தவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஏன் எல்லா இடங்களிலும் வேட்பாளர்களை போட்டியிடவில்லை?
விலை போனோமா? விட்டுக்கொடுத்தோமா? அல்லது உள்ளூர் அளவில் புரிந்துணர்வு செய்தீர்களா அதாவது காட்டிக் கொடுப்பது, கையூட்டு வாங்குவது, பணம் வாங்குவது, பணம் பறிப்பது.
இப்படி எல்லாம் கட்சிக்காரர்கள் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டாம். நீங்கள் வெற்றி பெறலாம் அதற்கு இவ்வளவு பணம் வாங்கிக் கொள்வது.
எல்லா வார்டுகளிலும், ஊரிலும் ஆட்களை நிறுத்துவதற்கு பஞ்சமா? வேட்பாளரை நிறுத்த முடியவில்லை என்றால் எதற்கு மாவட்ட பதவி? எதற்கு ஒன்றிய பதவி? எதற்கு மாநில பதவி? எல்லா இடத்திலும் ஆட்களை நிறுத்துவதற்கு ஆட்களை இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கட்சி பதவி தேவையா?," என்று கேள்வி எழுப்பினார் ராமதாஸ்.
"இனி வருங்காலத்தில் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டும். ஒரு தொகுதியில் 1 லட்சம் இளைஞர்கள், இளம் பெண்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீடு வீடாகத் திண்ணை திண்ணையாக ஒவ்வொரு வாக்காளரையும் அணுகி நாம் தமிழ்நாட்டை ஆள ஆயத்தமாக வேண்டும், அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக வேண்டும் என்று கடலூரில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால், இந்த பதவிகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்று சொன்னால் மாடு மேய்க்கும் சிறுவனான படிக்காதவனுக்கு இந்த மாவட்ட பொறுப்புகளை கொடுத்திடுமென். பூத்துக்கு 1000 ஓட்டுகள் எனத் தொகுதிக்கு 1 லட்சம் வாக்குகளைப் பெற வேண்டும். நீங்கள் வந்த வழி ஆண்ட பரம்பரை. உங்களது முன்னோர்கள் ஆண்டவர்கள்.
1949ல் ஆரபித்த திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 3வது முறை ஆட்சியைப் பிடித்தனர் இன்று வரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த கட்சி 2016ல் தனியாக நிற்கும் போது வெறும் 23 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். அதற்கு நாம் 5.6% வாக்குகளைப் பெற்று 3வது பெரிய கட்சி என்றோம். எனக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது," என்றார் ராமதாஸ்.
உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறேன். வயதானவர்கள் பேசத் தான் முடியும் இனி இந்த கட்சி இளைஞர்களை நம்பி தான் உள்ளதாக பேசினார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், "கடலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லி இருந்தால் அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்து இருப்பேன்.
தமிழகத்தில் 60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி ராமதாஸ் முதல்வராக ஆள முடியும்.
42 ஆண்டுகள் இந்த மக்களுக்காக பாடுபட்டு வருகிறேன் நாம் யாருக்கு போராடி இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தோமோ அவர்கள் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு மேல் முறையீடு செய்து சரியாகவே செய்கிறது. நல்ல வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக நம்பலாம்.
தமிழகத்தில் அன்புமணி போல ஒரு திறமையானவர் யாரும் இல்லை. ஏன் மக்கள் ஆட்சியைக் கொடுக்க தயங்குகிறார்கள். அன்புமணியை கோட்டையில் அமர வைப்பது உங்கள் கையில் உள்ளது. அன்புமணியை கோட்டையில் அமர வைப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று ராமதாஸ் பேசினார்.
சேலம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு, ஏ.எம். சுதாகர், சேலம்
சேலத்தில் சிலிண்டர் வெடிபுப் காரணமாக தரைமட்டமான கட்டடத்தில் சிக்கி ஐந்து பேர் இறந்த விலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் இன்று உயிரிழந்தார்.
இதையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சேலத்தில் வீட்டு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் நான்கு வீடுகள் தரைமட்டமாகின. அங்கு இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு அலுவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான தனியார் குடியிருப்புகள் உள்ளன. அங்கு வெங்கட்ராஜன் என்பவரின் கட்டடத்தில் கணேசன், பத்மநாபன், கோபி ,முருகன் ஆகிய நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றன.
இந்த நிலையில் கோபி வீட்டில் அவரது மனைவி ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.
இதில் கோபி வீடு, அவரது அருகில் இருந்த வீடு, மேல்தளத்தில் இருந்த இரண்டு வீடுகள் என நான்கு வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் ஏழு ஆண்கள் , நான்கு பெண்கள் , ஒரு சிறுமி, ஒரு சிறுவன் ஆகிய 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதில் கோபி என்பவர் 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வானிலை: தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் மோசம் அடைந்து வரும் வானிலை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கன மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கன மழை - பொதுமக்கள் இயல்புவாழ்க்கை பாதிப்பு, பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, திருச்செந்தூர் கோயிலில் புகுந்த மழை நீரை அகற்றும் ஊழியர்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மிக அதிகபட்சமாக 200 மி.மீ அளவுக்கு பெய்த பலத்த க னமழை காரணமாக திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழை ஐந்து மணி நேரம் இடைவிடாது பெய்தது.
தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
இந்த நிலையில் கடலோர பகுதியில் உள்ள 18 மாவட்டங்களிலும் தொடர் கனமழை இருக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து 12 மணி நேரமாக பலத்த இடி மின்னலுடன் கூடிய தொடர் கனமழை பெய்தது. பின்னர் ஒரு மணி முதல் 3 மணி வரை தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 200 மி.மீ மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்களில் மழைநீர் தேங்கியது. வெளி பிரகாரங்களில் முழங்காலளவு தேங்கிய மழைநீரால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் திருச்செந்தூர் நகர் பகுதிகளான, டி. பி. ரோடு அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேருந்து நிலையம், ஜீவா நகர், சந்தனமாரியம்மன் கோவில் தெரு, வீரராகவபுரம், தெரு பள்ளத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை நீருடன் கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்தது.
சுற்றுவட்டார பகுதிகளான காயல்பட்டினம், ஆத்தூர் ஆறுமுகநேரி, குரும்பூர், நல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழைநீர் ஆங்காங்கே சாலைகள் தெருக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர் கன மழை காரணமாக பாதுகாப்பு நலன் கருதி திருச்செந்தூர் மின்வாரியத் துறை சார்பில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள், தொழில் நிறுவனங்களை நடத்துவோர் பாதிக்கப்பட்டனர்.
மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 32ஆம் கட்ட விசாரணை நிறைவு, பிரபுராவ் ஆனந்தன்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 32ஆம் கட்ட விசாரணை முடிவடைந்தது.
கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இந்த விசாரணை-க்காக 41 பேருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் 40 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இதையடுத்து ஆணையத்தின் அடுத்த கட்ட விசாரணையான 33ஆம் கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 13ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் 34ஆம் கட்ட விசாரணையையும் அதே டிசம்பர் மாதம் தொடங்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த விசாரணைக்காக துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள், அப்போதைய மாவட்ட கண்கானிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பவும் ஆணையம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது.
அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
அமெரிக்க தூதராகும் இலங்கை முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க - யார் இவர்?
பட மூலாதாரம், MAHINDA SAMARASINGE
படக்குறிப்பு, மஹிந்த சமரசிங்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மஹிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதால், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதை அறிவித்திருந்தார்.
1956ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த மஹிந்த சமரசிங்க, அவுஸ்திரேலியாவில் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் Bachelor of Economics (Honours) degree பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் அந்த தொகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி ஈடுபட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான பணியை ஆற்ற விடாமல் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாகக் கூறி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
எம்.பி. நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதியை தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தும் அவர் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தமது பணி பாதிக்கப்படுவதாக ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய சிலநிமிடங்களில் மாவட்ட ஆட்சியர் சங்கர்பாபு அவரை சந்தித்து மனுவை பெற்றுக் கொண்டு சமரசத்தில் ஈடுபட முயன்றார். ஆனாலும், தொடர்ந்து அங்கேயே அமர்ந்து ஜோதிமணி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாலியல் தொல்லை: கரூர் மாணவி தற்கொலை செய்த பள்ளி ஆசிரியர் தற்கொலை - போலீஸ் விசாரணை, ஜி. மணிவண்ணன், திருச்சி
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சரவணன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கரூரில் கடந்த 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி பயின்ற தனியார் பள்ளியில் சரவணன் கணித பாட ஆசிரியராக பணியாற்றினார்.
இவர் நேற்று மாலை துறையூர் அருகேயுள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சரவணன் தனியாக சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவலறிந்து வந்த துறையூர் போலீசார் நேரில் சென்று சரவணனின் உடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.
மேலும் இது தொடர்பாக துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து முசிறி டிஎஸ்பி அருள்மணி நேரில் சென்று விசாரித்தனர். இந்நிலையில் நவம்பர் 19ம் தேதி கரூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி பாலியல்j தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், எவர் பேரும் குறிப்பிடாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவி தற்கொலைக்கும், ஆசிரியர் சரவணன் தற்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா, ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பத்துக்கும் மேற்பட்ட சீன நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளது அமெரிக்கா
பட மூலாதாரம், Getty images
தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக் காட்டி பத்துக்கும்
மேற்பட்ட சீன நிறுவனத்தை தடை செய்துள்ளது அமெரிக்கா.
இதில் சில நிறுவனங்கள் சீன ராணுவத்தின் குவாண்டம் கணினி
உருவாக்கத்தில் உதவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே
பதற்ற நிலை மேலும் அதிகரித்த நிலையில் இந்த சமீபத்திய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும்
சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் இணையம் மூலமாக சந்தித்து இருநாட்டிற்கும் இடையேயான
வர்த்தகம் குறித்து ஆலோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
இந்தியாவில் கொரோனா நிலவரம்
இந்தியாவில் புதியதாக 9,119 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பிரிட்டனை நோக்கி வந்த குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து: இதுவரை 24 பேர் உயிரிழப்பு
பட மூலாதாரம், AFP
பிரிட்டனை நோக்கி சென்ற குடியேறிகளின்
படகு கலேய்க்கு அருகில் ஆங்கில கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து
பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் உள்துறை
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு தரவுகள் சேகரிக்கப்பட்ட
காலத்தில் தொடங்கி ஆங்கில கால்வாயில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது இப்போதுதான் என குடியேறிகளுக்கான
சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பெல்ஜியம் நாட்டின்
எல்லைக்கு அருகில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆங்கில கால்வாயை குடியேறிகள் சட்டவிரோதமாக
கடப்பதை தடுக்க பிரிட்டனும் பிரான்ஸும் கூட்டாக நடவடிக்கை எடுக்கும் என இருநாட்டு தலைவர்களும்
தெரிவித்துள்ளனர்.
வான் மற்றும் கடல் மார்க்கமாக மீட்புப்
பணிகள் நடைபெற்று வருகின்றன.
மக்டேலேனா ஆண்டர்சன்: ஸ்வீடனில் பதவியேற்ற முதல் பெண் பிரதமர்; சில மணிநேரத்தில் பதவி விலகல் – என்ன நடந்தது?
ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் தான் பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
மக்டேலேனா ஆண்டர்சன் புதன்கிழமையன்று ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் அவரின் கூட்டணி கட்சி அரசிலிருந்து விலகியதால் அவரும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
"நான் பதவி விலக விரும்பவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தேன்" என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் "எதிர்காலத்தில் கூட்டணி எதுவும் இல்லாம் ஒரே கட்சியின் ஆட்சியில் நான் பிரதமர் பதவியை வகிப்பேன் என்று நம்புகிறேன்" என அவர் தெரிவித்தார்.
"அரசமைப்பின்படி கூட்டணியில் உள்ள ஒரு கட்சி விலகினால் மற்றொரு கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும்" என்று தெரிவித்தார் மக்டேலேனா.