You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி

டெல்லி வந்துள்ள மமதா பானர்ஜி பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்சுவாமியையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. நாளை வேறொரு நேரலையில் சந்திப்போம்.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  2. மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநரை கம்பியால் தாக்கிய கார் ஓட்டுநர் கைது, பிரபுராவ் ஆனந்தன்

    மதுரையில் அறசு பேருந்து ஓட்டுநரை கம்பியால் தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மதுரை இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சிமடத்தில் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்

    இவர் ஆரப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு காளவாசல் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் ஒன்று பேருந்தை முந்திச் செல்வதற்கு முயன்றது குறுகலான சாலை வாகன நெருக்கடியால் கார் ஓட்டுநர் பேருந்தை முந்த முடியவில்லை. இதனால் கார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது காரில் லேசாக பேருந்து உருசிய தாக தெரிகிறது.

    பின்னர் பேருந்தை முந்திய கார் ஓட்டுநர் சுரேஷ் பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்தார்.

    சுரேஷ் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் பேருந்து கண்ணாடியை உடைத்து. பேருந்து ஓட்டுநரின் வலது கையில் கத்தியால் தாக்கியுள்ளார் இதில் ஓட்டுநர் முத்து கிருஷ்ணனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால் அடுத்தடுத்து வந்த அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களும் சாலையில் பேருந்துகளை நிறுத்தினர். அரசு பேருந்தை தாக்கிய கார் ஓட்டுநரை உடனே கைது செய்ய வலியுறுத்தினர்.

    இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்துக்கு வந்த உதவி ஆணையர் ரவிச்சந்திரன் எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்ட போலீசார் சிசிடிவி கேமராக்கள் மூலம் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரை கண்டுபிடித்தனர்.

    இவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி சேர்ந்த சுரேஷ் என தெரியவந்ததையடுத்து எஸ் எஸ் காலனி போலீசார் அவரை கைது செய்தனர்

  3. மமதாவுக்கு புகழாரம் சூட்டிய சுப்பிரமணியன்சுவாமி

    டெல்லி வந்துள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி, பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

    இந்த சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன்சுவாமியிடம் திரிணமூல் காங்கிரஸில் சேரும் எண்ணம் உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நான் ஏற்கெனவே அவருடன்தானே இருக்கிறேன். அதற்காக கட்சியில் சேர வேண்டிய அவசியம் எல்லாம் எனக்கு இல்லை," என்று பதிலளித்தார்.

    மமதா பானர்ஜி, சுப்பிரமணியன் சுவாமியுடனான சந்திப்பு, திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் வீட்டில் பிற்பகல் 3.30 மணியளவில் நடந்தது.

    இந்நிலையில், மமதாவை பிற தேசிய தலைவர்களுடன் ஒப்பிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன்சுவாமி கருத்து வெளியிட்டுள்ளார்.

    அதில் நான் ஜேபி, மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ் போன்ற தலைவர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். அந்த தலைவர்கள் சொன்னதை செய்தார்கள், செய்ததை சொன்னார்கள். அவர்களுக்கு நிகரானவர் மமதா என்று குறிப்பிட்டுள்ளார்.

  4. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த மமதா பானர்ஜி

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் மேற்கு முதல்வர் மமதா பானர்ஜி சந்தித்துப் பேசியிருக்கிறார். இன்று மாலையில் நடந்த இச்சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருக்கிறது.

    இந்த சந்திப்பு தொடர்பான விவரம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.

  5. மைனர்களுடனான வாய்வழிப் புணர்ச்சி பாலியல் வன்கொடுமையின் கீழ் வரவில்லை - அலஹாபாத் உயர் நீதிமன்றம்

    பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்துள்ளது அலஹாபாத் உயர்நீதிமன்றம்.

    போக்சோ சட்டத்தின் படி, மைனருடனான வாய்வழிப் புணர்ச்சி என்பது 'மோசமான பாலியல் வன்கொடுமை'யின் கீழ் வரவில்லை என மேற்கோள் காட்டி தண்டனையை குறைத்துள்ளது நீதிமன்றம்.

  6. இன்று மாலை பிரதமர் மோதியை சந்திக்க உள்ளார் மமதா பானர்ஜி

    மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இன்று மாலை ஐந்து மணிக்கு பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க உள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    மேலும் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியையும் மமதா பானர்ஜி சந்திக்க உள்ளாதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் என இரண்டிலுமே திரிணாமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

  7. மார்ச் 2022-க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் - WHO

    ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வரும் மார்ச் 2022க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு 53 நாடுகளை ஐரோப்பிய பிராந்தியமாக வகைப்படுத்தியுள்ளது.

    அப்பிராந்தியத்தில் ஏற்கனவே 15 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வரும் மார்ச் 2022-க்குள் 52 நாடுகளில் 49 நாடுகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகக்கடுமையான அல்லது மோசமான அழுத்தத்தை எதிர்கொள்ளலாம் என கணித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

    ஐரோப்பிய பிராந்தியத்தில் ஏற்படும் உயிரிழப்புகளின் முக்கிய காரணியாக கொரோனா வைரஸ் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் எடுக்கும் கட்டாய தடுப்பூசித் திட்டம், ஊரடங்கு போன்றவைகளை மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

  8. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி.