கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 798 பேருக்கு தொற்று உறுதி

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக தோன்றிய சீனாவின் வுஹான் நகரில் புதிதாக 5 பேருக்கு கோவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் வட கிழக்கு பகுதியான சூலான் நகரில் புதிதாக தொற்றுகள் கண்டறியப்படுவது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தைவான் கொரோனாவை விரட்டியது எப்படி?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  2. கடும் போக்குவரத்து நெரிசல்: இயல்பு நிலைக்கு திரும்பும் வியட்நாம்

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாமில் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலையில் புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன.

    இதுவரை 288 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள வியட்நாமில், கடந்த ஒரு வாரமாக படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், இன்று முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியமற்ற சேவைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் மக்கள் வழக்கம்போல் வீடுகளை விட்டு வெளியே செல்ல தொடங்கியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    வியட்நாம்
  3. “தமிழகத்திலிருந்து இதுவரை 9 ஆயிரம் தொழிலாளர்கள் தாயகம் திரும்பினர்”

    சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் அடுத்த ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    “வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும்‌ தொழிலாளர்களை விருப்பத்தின்‌ அடிப்படையில்‌, அவரவர்‌ மாநிலங்களுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசின்‌ அனுமதியுடன்‌, படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும்‌ எடுத்து வருகிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இதுவரை 9 ஆயிரம்‌ வெளிமாநில தொழிலாளர்கள்‌ எட்டு சிறப்பு ரயில்களில்‌ அவரவர்‌ மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    “மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்களும்‌ சம்மந்தப்பட்ட மாநிலங்களின்‌ ஒப்புதலுடன்‌ ரயில்கள்‌ மூலம்‌ அவரவர்‌ மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள்‌ அனுப்பி வைக்க நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அதுவரை வெளி மாநில தொழிலாளர்கள்‌ முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.”

    தொழிலாளர்கள்

    பட மூலாதாரம், Getty Images

  4. இந்தியர்களை இன்று தாயகம் அழைத்து வரும் சிறப்பு விமானங்கள்

    வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகம் அழைத்து வரும் மத்திய அரசின் திட்டம் கடந்த ஐந்து நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இன்று பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா வரவுள்ள ஏழு சிறப்பு விமானங்களின் பயண பாதை குறித்த விவரம்.

    • கோலாலம்பூர் - சென்னை
    • லண்டன் - டெல்லி - பெங்களூரு
    • சான்பிரான்சிஸ்கோ - மும்பை - ஹைதராபாத்
    • டாக்கா - மும்பை
    • துபாய் - கொச்சி
    • அபுதாபி - ஹைதராபாத்
    • பஹ்ரைன் - கோழிக்கோடு
    ஏர் இந்தியா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்
  5. இந்திய ரயில்வே அமைச்சகம் புதிய அறிவிப்பு

    நாடு முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்டோரை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் இனி புறப்பட்ட ரயில் நிலையத்தை தவிர்த்து செல்லும் வழியில் அதிகபட்சம் மூன்று ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும், இயக்கப்படும் ரயில்களில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைக்கு சமமான அளவுக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. ஐரோப்பிய நாடுகளில் தளர்த்தப்படும் முடக்க நிலை

    கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இன்று முதல் முடக்க நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன.

    • பிரான்சில் இன்று முதல் குறைந்த மாணவர்களுடன் தொடக்கப் பள்ளிகள் இயங்க உள்ளன. துணிக்கடைகள், புத்தகக் கடைகள், முடித்திருத்தகங்கள், பூக்கடைகள் உள்ளிட்டவையும் இன்று முதல் செயல்படவுள்ளன. ஆனால், உணவகங்கள், திரையரங்குகள், மதுபான விடுதிகள் மீதான தடை நீடிக்கிறது.
    • பெல்ஜியம் நாட்டில் பெரும்பாலான வணிகங்கள் இன்று முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் இயங்க ஆரம்பிக்கின்றன. ஆனால், உணவகங்கள், மதுபான விடுதிகள், தேநீர் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
    • நெதர்லாந்தில் இன்று முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நூலகங்கள், பிசியோதெரபிஸ்டுகள், ஓட்டுநர் பள்ளிகள் மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் தங்களது பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • சுவிட்சர்லாந்தில் இன்று முதல் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகள் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன் செயல்பட உள்ளன. சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் உணவகங்கள், புத்தகக் கடைகள், அருங்காட்சியகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • ஸ்பெயினின் சில பிராந்தியங்களில் அதிகபட்சம் பத்து நபர்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான கடைகள் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போன்று, மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், டென்மார்க், போலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் இன்று முதல் முடக்க நிலையில் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் திரும்பும் இயல்புநிலை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் திரும்பும் இயல்புநிலை
  7. தெற்காசிய நாடுகளின் நிலவரம் என்ன?

    • வங்கதேசத்தில் திங்கட்கிழமை மட்டும் 884 பேருக்கு புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
    • 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் 667 இறப்புகள் நேர்ந்துள்ள பாகிஸ்தானில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனைகள் தொடங்குகின்றன.
    • இலங்கையில் இன்று முதல் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இதன் மூலம், கடைகள் மட்டுமின்றி, சில கட்டுப்பாடுகளுடன் பேருந்து சேவைகளுடன் தொடங்குகின்றன.
    • நேபாளத்தில் இன்று மட்டும் 10 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 120ஆக அதிகரித்துள்ளது
    முடக்க நிலையின்போதும், பாகிஸ்தானின் லாகூர் நகரின் சந்தை ஒன்றில் காணப்படும் கூட்டம்.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, முடக்க நிலையின்போதும், பாகிஸ்தானின் லாகூர் நகரின் சந்தை ஒன்றில் காணப்படும் கூட்டம்.
  8. இந்தியாவில் நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்: சென்னைக்கு ரயில் எப்போது? - விரிவான தகவல்கள்

    இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையைத் துவங்க உள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

    சிறப்பு சேவையாக இயக்கப்படும் இந்த ரயில்கள், டெல்லியில் இருந்து ஹெளரா, பாட்னா, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் பதினைந்து நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு வழிதடத்திற்கும் இரண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்
  9. “கொரோனா வைரஸை ஒழிக்கும் நிலையை நெருங்கிவிட்டோம்”

    “நியூசிலாந்தில் தற்போது 90க்கும் குறைவானவர்களே கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால், கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்கும் நிலையை நெருங்கிவிட்டோம்” என்று அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா அடேர்ன் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்தில் வரும் வியாழக்கிழமை முதல் மதுபான விடுதிகள் தவிர்த்து, உணவகங்கள், கடைகள், திரையரங்குகள் என கிட்டத்தட்ட அனைத்து வித வணிகங்களும் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்தாலும் கூட, சர்வதேச போக்குவரத்துகள் மீதான தடை அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    “கொரோனா வைரஸை ஒழிக்கும் நிலையை நெருங்கிவிட்டோம்”

    பட மூலாதாரம், Getty Images

  10. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்டத்தில் மண்டல வாரியான பாதிப்பு நிலவரம்.

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Greater Chennai Corporation

  11. மூன்று மடங்கு வரிகளை உயர்த்திய சௌதி அரேபியா

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சௌதி அரேபியா, மதிப்பு கூட்டு வரிகளை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது.

    மேலும், வாழ்க்கை செலவு கொடுப்பனவை முற்றிலும் ரத்து செய்தும் சௌதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இறங்குமுகத்தில் இருந்து வந்த கச்சா எண்ணெய் விலை, கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது, எண்ணெய் வளத்தை நம்பி இருக்கும் சௌதி அரேபியாவின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டு விட்டது.

    கச்சா எண்ணெய் சந்தையை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து மாறும் வகையில், இரண்டாண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக மதிப்பு கூட்டு வரியை சௌதி அரேபியா கொண்டுவந்தது.

    ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல், சௌதி அரேபியாவில் மதிப்பு கூட்டு வரி ஐந்து சதவீதத்திலிருந்து 15ஆக அதிகரிக்கப்படுவதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    “இந்த நடவடிக்கைகள் கடினமானவை. ஆனால், இது நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமானதும் கூட" என்று சௌதி அரேபியாவின் நிதியமைச்சர் முகமது அல்-ஜாதான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    சௌதி அரேபியா

    பட மூலாதாரம், Getty Images

  12. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 67 ஆயிரமாக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152ஆக அதிகரித்துள்ளது. கடந்த மணிநேரத்தில் மட்டும் புதிதாக 4,213 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,206ஆக அதிகரித்துள்ளது.

    அதே சமயத்தில், நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20,917ஆக உள்ளது.

  13. ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்

    ஜெர்மனியில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில், அங்கு கட்டுக்குள் வந்ததாக நம்பப்பட்ட நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

    கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஒரு நபரின் மூலம் அந்த நோய்த்தொற்று தற்போது ஒருவருக்கு மேல் பரவுவதாக ராபர்ட் கோச் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.

    அதாவது, ஜெர்மனியில் கொரோனா வைரஸின் பாதிப்பு மீண்டும் எழுச்சியடைய ஆரம்பித்துள்ளது என்று அர்த்தம்.

    பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையை முழுவதுமாக நீக்கக்கோரி கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

    ஜெர்மனியில் உள்ள 16 மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நாடு முழுவதும் விரிவான முடக்கநிலை தளர்வுகள் குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் வெளியிட்டார்.

    இதன்படி, ஜெர்மனி முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டன. மேலும், ஜெர்மனியின் பிரபல கால்பந்து தொடர் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சமீபத்திய நிலவரப்படி, ஜெர்மனியில் 1,69,218 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 7,395 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

  14. கொரோனாவுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பது எப்படி?

  15. கவலையை ஏற்படுத்தும் சீன நகரம்

    சீனாவில் திங்கள்கிழமையன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக சீனாவில் இரட்டை இலக்க பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக தோன்றிய வுஹானில் புதிதாக 5 பேருக்கு கோவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீனாவின் வட கிழக்கு பகுதியான சூலான் நகரில் புதிதாக தொற்றுகள் கண்டறியப்படுவது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சூலான் நகரில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  16. நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள், இன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் முன்னர் நேற்றைய முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.

    • அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
    • தென் கொரியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், அந்த நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, தலைநகர் சோலில் உள்ள மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
    • இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 847 வரை அதிகரித்துள்ளது. 9 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில், 260 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
    • கொரோனா வைரஸ் பரவ தொடங்கியசீனா வுஹானில்மீண்டும் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வுஹானில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பள்ளிகளும் கூட இயங்க தொடங்கின. இப்படியான சூழலில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் அங்கு பதிவாகும் முதல் கொரோனா தொற்று இது.
    • ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கைக்கழகம் தரும் தகவலின்படிஇந்தியாவில் கொரோனாவால் 64,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1472 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவிக்கிறது. 19357 பேர் குணமடைந்துள்ளனர். 2109 பேர் பலியாகி உள்ளனர்.
    • தமிழகத்தில் நேற்று 669 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 509 நபர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவருவதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது.
    • கிருஷ்ணகிரியில் கொரோனாவே இல்லை என்று கூறப்பட்ட சூழலில், அங்கு நேற்று 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  17. வணக்கம் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இந்திய, இலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து சிவக்குமார் உலகநாதன் மற்றும் சாய்ராம் ஜெயராமன் தொகுத்து வழங்குகிறோம்

    கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images