கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 798 பேருக்கு தொற்று உறுதி
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக தோன்றிய சீனாவின் வுஹான் நகரில் புதிதாக 5 பேருக்கு கோவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் வட கிழக்கு பகுதியான சூலான் நகரில் புதிதாக தொற்றுகள் கண்டறியப்படுவது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
விதிமுறைகளை மீறினால் அபராதம்: சிங்கப்பூர் அரசு உடனடி நடவடிக்கை
பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூரில் மேலும் 486 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,882 ஆகியுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் 19 நோயாளிகளில் இருவர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். இதன் மூலம் வைரஸ் தொற்றியோரில் 90 விழுக்காட்டினர் அந்நியத் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரையிலான நிலவரப்படி, அங்கு பாதிக்கப்பட்டோரில் சுமார் 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்நியத் தொழிலாளர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைவரும் அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு சமூக இடைவெளி விட வேண்டும் என்ற விதிமுறையை மீறியவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ஒரு சிங்கை டாலர் = உத்தேசமாக ரூ.54) அபராதம் விதிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் அத்தியாவசியமற்ற சேவை என்று வகைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய 19 ஆடவர்களுக்கு பாதுகாப்பு இடைவெளி விதியை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஊடககம் தெரிவித்துள்ளது.
இதேபோல் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 30 பெண்கள் கைதாகினர்.
குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம்: மலேசிய அரசு, உணவு மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு ஆதாரமில்லை: மலேசிய அரசு
பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் இன்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,726 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 31 பேர் வெளிநாட்டவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் 88 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றும் ஒருவர் பலியாகி உள்ளார் என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ள நிலையில் மலேசியாவில் கோவிட் 19 நோயிலிருந்து 76 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளதாக அவர் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
உணவு மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு ஆதாரமில்லை
உணவு மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்பதற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்று தெரிவித்த அவர், எத்தகைய உணவாக இருந்தாலும் அதை நன்கு கொதிக்க வைத்து, முழுமையாக சமைத்து உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
"இதுவரை கண்காணித்த வகையில் உணவு உட்கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான வலுவான சான்றுகள் ஏதும் இல்லை. கோழிகள் மூலமாக பரவுமா என்பது குறித்து கால்நடை சேவை துறையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
"இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவென்றால் எந்த உணவாக இருந்தாலும் அதிலுள்ள வைரஸ்கள் எதுவாக இருப்பினும் இறந்துபோகும் வகையில் நன்றாக கொதிக்க வைத்து, சமைத்து உண்ணவேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
அதிகபட்ச வெப்பமானது உணவில் இருக்கும் வைரஸ்களைக் கொல்லும் என்று அவர் சுட்டிக்காட்டியதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
பேரங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து வாங்கக்கூடிய உணவுப்பொருட்களைச் சாப்பிடுவதற்கு முன்பு சூரிய வெளிச்சத்தில் வைத்து உலர வைக்க வேண்டும் என்று கூறப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அதற்கு அவசியமில்லை என்றும் எல்லா உணவுகளையும் இவ்வாறு உலர வைக்க இயலாது என்றும் தெரிவித்தார்.
குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம்
இதற்கிடையே, பொது வெளிநடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமலில் இருக்கும் வேளையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வணிக வளாகங்கள், பேரங்காடிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி அறிவுறுத்தி உள்ளார்.
தற்போது சில பெற்றோர் இவ்வாறு செய்வதாகவும் இவர்கள் மீது காவல்துறை கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
"குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பெற்றோரின் பொறுப்பு. பொது இடங்களுக்கு, கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வது பாதுகாப்பானதா? என்று அவர்கள் தங்களுக்கே கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும்.
"தற்போது இவ்வாறு செய்யும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டவிதிகள் இல்லாமல் போகலாம். ஆனால், பெற்றோரின் அலட்சியம் தொடரும் பட்சத்தில் சட்டத்தை நம்மால் மாற்ற இயலும்," என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.
தற்போது நாடு முழுவதும் நிபந்தனைகளுடன் கூடிய பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை 95 விழுக்காடு மக்கள் பின்பற்றுவதாக குறிப்பிட்ட அவர், இது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பது எப்படி?
ரயில் டிக்கெட் முன்பதிவு மாலை 6 மணிக்கு தொடங்குகிறது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கொரோனா: தமிழக விவசாயிகளின் குமுறல்
மாலத்தீவிலிருந்து தமிழகத்திற்கு
பட மூலாதாரம், Getty Images
கொரோனா காரணமாக மாலத்தீவில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை மத்தியஅரசு கப்பல் மூலம் அங்கிருந்து மீட்டு கொச்சி துறைமுகத்துக்கு அழைத்துவந்தது. மாலத்தீவில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைவருக்கும் கொரானாசோதனைக்கு பின் வாகனங்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் தமிழகம் வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 87 பேரை குமரிமாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளை மற்றும் கொல்லங்கோடு பகுதிகளில் உள்ள விடுதி அறைகளில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
விடுதியை சுற்றி போலீசார் மற்றும் முன்னாள் ராணுவவீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
சுகாதாரதுறையினர் அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து அதனை ஆய்வுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் மாலத்தீவு வந்துபின்னர் அங்கிருந்து கப்பல்மூலம் குமரிவந்த 60 நபர்களைக் கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்தித் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களையும் சுகாதாரதுறை மற்றும் போலீசார்கண்காணித்துவருகின்றனர்.
மேலும், காவல்கிணறு சோதனைசாவடி அருகே சென்னை, திருச்சி, மகாராஷ்டிரா போன்றபகுதிகளில் இருந்து வந்த 49 பேரைதனிமைப்படுத்தி தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தேவையான உணவு உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை அந்த பகுதியை சேர்ந்த பேரூராட்சி ஊழியர்கள் கவச உடை அணிந்து கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள அறைகளில் கொடுத்துவருகின்றனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா நோயாளிகள் இல்லாத திருப்பூர் மாவட்டம்
கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்துள்ளதால், திருப்பூர் மாவட்டம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
திருப்பூரில், மொத்தம் 114 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில், 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள இருவரும் குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர்.
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த இருவர், குணமடைந்து விரைவில் வீடு திரும்பவுள்ளதால், மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கிராமம் கிராமமாக நடந்து சென்று மக்களுக்கு உணவு வழங்கும் எம்எல்ஏ
கொரோனா வைரஸ்: 6 முக்கிய தகவல்கள்
பட மூலாதாரம், Getty Images
1. இன்று மதிய நிலவரப்படி, சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 41,16,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை 282,872 ஆக உள்ளது, 14,180,17 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 79,528 பேரும், பிரிட்டனில் 31,930 பேரும் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 44,029 ஆகிடிவ் நோயாளிகள் உள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறுகிறது.
2. நாடு தழுவிய ஊரடங்கு மே 17 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை 3 மணிக்கு காணொளி காட்சி மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனையை தொடங்கினார்.
இதில் கொரோனா வைரஸ் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக சமூக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படலாம்.
3. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையைத் துவங்க உள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சிறப்பு சேவையாக இயக்கப்படும் இந்த ரயில்கள், டெல்லியில் இருந்து ஹெளரா, பாட்னா, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் பதினைந்து நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு வழிதடத்திற்கும் இரண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கியது.
4. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாமில் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலையில் புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன. அந்த வகையில், இன்று முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியமற்ற சேவைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் மக்கள் வழக்கம்போல் வீடுகளை விட்டு வெளியே செல்ல தொடங்கியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அது போல ஆஸ்திரேலியாவிலும் சமூக முடக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வணிக வளாகங்களில் திரண்டுள்ளனர். சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காமல் இருப்பது அங்கு கவலையை எழுப்பி உள்ளது.
5. கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இன்று முதல் முடக்க நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன. பிரான்சில் இன்று முதல் குறைந்த மாணவர்களுடன் தொடக்கப் பள்ளிகள் இயங்க உள்ளன. துணிக்கடைகள், புத்தகக் கடைகள், முடித்திருத்தகங்கள், பூக்கடைகள் உள்ளிட்டவையும் இன்று முதல் செயல்படவுள்ளன. ஆனால், உணவகங்கள், திரையரங்குகள், மதுபான விடுதிகள் மீதான தடை நீடிக்கிறது.
6. இலங்கையில் இன்று முதல் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இதன் மூலம், கடைகள் மட்டுமின்றி, சில கட்டுப்பாடுகளுடன் பேருந்து சேவைகளுடன் தொடங்குகின்றன.
வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4213 பேர் கொரோனாவால் பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 4213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1559 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும் இந்திய சுகாதார துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 67,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44,029 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 20,917 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்கிறார் அவர்.
இந்தியாவில் குணமடைபவர்களின் விகிதம் 31.15% என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கிறார்.
புலம்பெயர் தொழிலாளர்
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு குறித்தும் பிரதமர் நரேந்திர மோதி இன்று ஐந்தாவது முறையாக அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று கூட்டம் தொடங்கிய உடன், பிரதமர் மோதி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்ற தொழிலாளர்களின் எண்ணத்தை புரிந்துகொள்ள முடிகின்றது என்றும், ஆனால், கோவிட் 19 வைரஸ் கிராமங்களுக்கும் பரவுவதை தடுக்க வேண்டியது அவசியம் என மோதி கூறியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஊதியம் பிடித்தமா?, போலி செய்தி என்கிறது அரசு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதியத்தை பிடித்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டு இருந்தது.
ஆனால், இதனை போலி செய்து என்று சொல்லும் இந்திய அரசு. அவ்வாறான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என கூறி உள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள்: அபராத தொகை அதிகரிப்பு
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான அபராத தொகை 100 பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது.
அபராத தொகையை 14 நாட்களில் செலுத்தினால் 50 பவுண்டுகள் வரை குறையும்.
தொடர்ந்து கட்டுப்பாடுகளை மீறினால், அபராத தொகை இரட்டிப்பாகும்.
இப்போது அபராத தொகை 60 பவுண்டுகள் என்ற அளவில் உள்ளது. 9000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஊரடங்கு நீடிக்குமா?
நாடு தழுவிய கொரோனா வைரஸ் லாக் டவுன் மே 17 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதி இன்று திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு காணொளி காட்சி மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனையை தொடங்கினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஆஸ்திரேலியாவில் தளர்த்தப்பட்ட சமூக முடக்கம், திரண்ட மக்கள்
பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவில் சமூக முடக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வணிக வளாகங்களில் திரண்டுள்ளனர்.
இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காமல் இருப்பது அங்கு கவலையை எழுப்பி உள்ளது.
உத்தர பிரதேசம் திரும்பிய 2.26 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்
பட மூலாதாரம், Getty Images
இதுவரை 184 ரயில்களில் பல்வேறு மாநிலங்களில் பணிபிரியும் 2.26 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தர பிரதேசம் திரும்பி உள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் அவனீஷ் தெரிவித்துள்ளார்.
இன்று 55 ரயில்கள் உத்தர பிரதேசம் வருவதாக அவர் கூறுகிறார்.
எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா
பட மூலாதாரம், Getty Images
கடந்த 24 மணி நேரத்தில் 6 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தலா ஒருவர் திரிபுரா மற்றும் டெல்லியை சேர்ந்தவர், 4 பேர் கொல்கத்தாவை சேர்ந்தர்கள். அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாக பி.எஸ்.எஃப் கூறுகிறது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம் இதுதான்
இன்று மதிய 3 மணி நிலவரப்படி, சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 41,16,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை 282,872 ஆக உள்ளது, 14,180,17 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 79,528 பேரும், பிரிட்டனில் 31,930 பேரும் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 44,029 ஆகிடிவ் கேஸ்கள் உள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறுகிறது.
"ஆரோக்கிய சேது செயலி மிகவும் பாதுகாப்பானது"
ஆரோக்கிய சேது செயலி மிகவும் பாதுகாப்பானது என நிதி அயோக்கின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அவர், “ஆரோக்கிய சேது செயலியில் பகிரப்படும் தகவல்கள், கொரோனா தொடர்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பகிரப்படும்,” என கூறி உள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா வைரஸ்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பரிசோதனை கருவி
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. ஒரு பரிசோதநை கருவியின் விலை ரூபாய் 500. இதில் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது