கொரோனா வைரஸ்: தமிழகத்தில் புதிதாக 669 பேர் பாதிப்பு - அண்மைய தகவல்கள்
உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 13,09,159 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 78,792 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நன்றி பிபிசி நேயர்களே
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரானா: இன்று என்னவெல்லாம் நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொடர்பாக சர்வதேச அளவில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் இவைதான்.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனா வுஹானில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வுஹானில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பள்ளிகளும் கூட இயங்க தொடங்கின. இப்படியான சூழலில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் அங்கு பதிவாகும் முதல் கொரோனா தொற்று இது.
தமிழகத்தில் இன்று 669 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 509 நபர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவருவதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது.
கிருஷ்ணகிரியில் கொரோனாவே இல்லை என்று கூறப்பட்ட சூழலில், இன்று 10 பேர் கொரோனாவால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடதக்கது.
நடிகர் ரஜினிகாந்த் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக ட்வீட் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவு கூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கைக்கழகம் தரும் தகவலின்படி இந்தியாவில் கொரோவால் 64,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1472 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவிக்கிறது. 19357 பேர் குணமடைந்துள்ளனர். 2109 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை 3 மணிக்கு மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் விவாதிக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. தில் ஊரடங்கு நீட்டிக்கப்படலமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணி துரிதமாக நடந்து வருகிறது. சௌதியிலிருந்து 139 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுள்ளது.
அது போல மாலத்தீவு, மொரிசீயஸ், செசல்ஸ், மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்கு இந்தியா மருந்துகளையும், உணவு பொருட்களையும் அனுப்பி உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இந்த மருந்துகள் செல்கின்றன.
வரும் ஜூன் மாதம் இறுதியில் வழக்கமாகத் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடக்குமா அல்லது கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப்போகுமா என்பது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்
அவர், “கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தள்ளிப்போகாது திட்டமிட்டபடி ஜூலை முதல்வராத்தில் நடக்கும் என நம்புகிறேன். அதேசமயம், அப்போது என்ன சூழல் நிலவுகிறதோ அதற்கு ஏற்றார்போல் முடிவு எடுக்கப்படும். ஒருவேளை தீவிரமான சமூக விலகலைக் கடைபிடித்து கூட்டம் நடத்து வேண்டியது குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும்” என்றார்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு உள்ள ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. 489 பேர் அங்கு குணமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று உடைய ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1884 ஆக உள்ளது. மாநிலத்தில் 1504 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்கிறார் முதன்மை சுகாதாரத் துறை செயலாளர் அமித் மோகன் பிரசாத்.
வெவ்வேறு மாநிலங்களிலிருந்து இன்று லக்னோவிற்கு 57 ரயில்கள் வருவதாக கூறுகிறார் அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனீஷ் அவஸ்தி.
மேலும் அவர், “ஒரு ரயிலுக்கு சராசரியாக 1200 பேர் என வைத்துக் கொண்டாலும். 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வரலாம்,” என்று கூறுகிறார். துவரை இரண்டு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து உத்தர பிரதேசத்திற்கு வந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 847 வரை அதிகரித்துள்ளது. 9 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில், 260 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
மலேசியாவில் இன்று நண்பகல் நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,656 ஆக இருக்கிறது. இன்று ஒரே நாளில் 67 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் 49 பேர் வெளிநாட்டவர்களாவர். இதுவரை 108 பேர் பலியாகியுள்ளனர்.
மலேசியாவில் அமலில் உள்ள நிபந்தனைகளுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மொகிதின் யாசின் இன்று அறிவித்தார்.
சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகே அரசு இம்முடிவை எடுத்ததாக அவர் இன்று தொலைக்காட்சி வழி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்தது
சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் மேலும் 876 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றியோர் மொத்த எண்ணிக்கை 23,336 ஆக அதிகரித்துள்ளது.
இன்று, வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 3 சிங்கப்பூரர்களைத் தவிர மற்ற அனைவருமே பிற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.
சர்வதேச அளவில் கொரோனாவால் 40 லட்சத்து 51 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 79 பேர் பலியாகி உள்ளனர். 13 லட்சத்து 85 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகப்பட்சமாக அமெரிக்காவில் 78, 799 பேரும், பிரிட்டனில் 31, 662 பேரும் பலியாகி உள்ளனர்.
சமூக முடக்கத்தை முன்னதாக முடிவுக்கு கொண்டுவந்தால், பிரிட்டனில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் மரணங்கள் நிகழும் என பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது, அந்த ஆலோசகர் என குறிப்பிடவில்லை.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,012 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 209, 688 ஆக உயர்ந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொரோனாவால் 88 பேர் பலியாகி உள்ளனர். இதனை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,915 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் ரஷ்யாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் தரும் தகவலின்படி, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில்தான் அதிகப் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், அந்த நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, தலைநகர் சோலில் உள்ள மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடு “குழப்பங்கள் நிறைந்த பேரழிவுவை” ஏற்படுத்தியுள்ளதாக அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்: இன்று என்னவெல்லாம் நடந்தது?
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடக்குமா?
வரும் ஜூன் மாதம் இறுதியில் வழக்கமாகத் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி நடக்குமா அல்லது கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப்போகுமா என்பது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்
அவர், “கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தள்ளிப்போகாது திட்டமிட்டப்படி ஜூலை முதல்வராத்தில் நடக்கும் என நம்புகிறேன். அதேசமயம், அப்போது என்ன சூழல் நிலவுகிறதோ அதற்கு ஏற்றார்போல் முடிவு எடுக்கப்படும். ஒருவேளை தீவிரமான சமூக விலகலைக் கடைபிடித்து கூட்டம் நடத்து வேண்டியது குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும்” என்றார்.
Israel developed new corona virus Antibody medicine? | covid-19 |
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
Corona virus vaccine: கொரோனா வைரஸை எதிர்க்கும் புதிய மருந்தை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் அமைச்சர் அறிவித்துள்ளார். அது உண்மையா?
வந்துகொண்டிருக்கும் செய்தி, சீனா: வுஹானில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய வுஹானில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வுஹானில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பள்ளிகளும் கூட இயங்க தொடங்கின.
இப்படியான சூழலில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த மாதத்தில் அங்கு பதிவாகும் முதல் கொரோனா தொற்று இது.
சீனாவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா இருப்பதாக சீன தேசிய சுகாதார ஆணையம் கூறுகிறது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, பிரிட்டன்: ஒரு லட்சம் மரணங்கள் நிகழும் - எச்சரிக்கும் அறிவியல் ஆலோசகர்
சமூக முடக்கத்தை முன்னதாக முடிவுக்கு கொண்டுவந்தால், பிரிட்டனில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் மரணங்கள் நிகழும் என பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது, அந்த ஆலோசகர் என குறிப்பிடவில்லை.
ஊரடகை தளர்த்த பிரிட்டன் அரசாங்கம் என்னவெல்லாம் திட்டம் வைத்திருக்கிறதெனப் பிரிட்டன் நேரப்படி இன்று மாலை மக்களிடம் உரையாற்றுகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் புதிதாக 669 பேர் பாதிப்பு - அண்மைய தகவல்கள்
வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா தமிழக நிலவரம்
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா: உடலை அடக்கம் செய்த போலீஸார், நட்ராஜ் சுந்தர், பிபிசி தமிழுக்காக

கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது கணவர் உடல்நிலை முடியாமல் உயிரிழந்துள்ளார். அவரது உடலை போலீஸாரே அடக்கம் செய்துள்ளனர்.
என்ன நடந்தது?
விழுப்புரம் மாவட்டம் உள்ள நல்லபாளையம் இருளர் கிராமத்தில், அய்யனார் (வயது 35) அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அய்யனாருக்கு விபத்து காரணமாக, தலையில் பலமாகக் காயம் ஏற்படவே விழுப்புரத்தில் இருந்து சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அய்யனார் உடன் மருத்துவமனையில் அவரது மனைவி தனம் மற்றும் தாயார் இருவரும் தங்கிப் பார்த்து வந்துள்ளனர்.
இதையடுத்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு அய்யனாரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்தனர். அதற்கிடையே அய்யனார், அவரது மனைவி மற்றும் தாயாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், கொரோனா முடிவுகள் வருவதற்கு முன்பாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து, கடந்த மே 7-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று விழுப்புரம் வந்துள்ளனர்.
ஆனால், விழுப்புரம் வந்த பிறகு சென்னையில் அவர்களுக்குச் செய்த கொரோனா பரிசோதனை முடிவில் மனைவி தனம் மற்றும் தாயாருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. எனவே, சுகாதாரத் துறையினர் அய்யனாரின் மனைவி மற்றும் தாயாரைக் கடந்த வெள்ளிக்கிழமை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், அவர்கள் இருந்த பகுதிகள் சுற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்தனர். இதனையடுத்து, மனைவி மற்றும் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அய்யனாரை உடனிருந்து அவரது 10 வயது மகன் ஜீவா கவனித்து வந்தார். பின்னர், அய்யனார்க்கு உடல்நிலை பாதிப்பு அதிகரிக்கவே, அவர் உயிரிழந்தார்.
கொரோனா அச்சம்
இதனைத் தொடர்ந்து, அய்யனாரின் மனைவி மற்றும் தாயார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அய்யனார் உயிரிழந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் கொரோனா தொற்று அச்சம் கருதி உதவிக்கு யாரும் வரவில்லை. பின்னர் யாருமில்லாத நிலையில் சிறுவன் தந்தையின் உடலை எப்படி அடக்கம் செய்வதென்று அறியாது இருந்துள்ளார். அதன்பிறகு அப்பகுதி இளைஞர்கள் மூலமாகக் காவல் துறைக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர்.
உடலை அடக்கம் செய்த போலீஸ்
பின்னர், அன்று மறுநாள் உயிரிழந்த அய்யனாரின் உடலை அடக்கம் செய்வதற்கு விழுப்புரம் காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், உயிரிழந்த அய்யனாரை அடக்கம் செய்யும்போது அவரை பார்க்க அனுமதிக்க, மனைவி மற்றும் தாயார் கோரிக்கை வைத்தனர். இதன்பிறகு, அய்யனாரை அடக்கம் செய்யும்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி மற்றும் தாயார் தூரத்திலிருந்து பார்க்கக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, உரியப் பாதுகாப்புடன் அவரை அடக்கம் செய்தனர். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வட்டாட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நிதியுதவி மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவினர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா
சீனாவுக்கு கார்கோ விமானத்தை இயக்கிய ஐந்து ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த இந்த ஐந்து விமானிகளுக்கும் கொரோனா அறிகுறியும் இல்லை என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்தது

பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் மேலும் 876 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றியோர் மொத்த எண்ணிக்கை 23,336 ஆக அதிகரித்துள்ளது.
இன்று, வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 3 சிங்கப்பூரர்களைத் தவிர மற்ற அனைவருமே அந்நியத் தொழிலாளர்கள் ஆவர்.
சிங்கப்பூரில் கொவிட் 19 வைரஸ் தொற்றால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்று இருந்தபோதிலும் வேறு காரணங்களால் 6 பேர் இறந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை முந்திச் சென்று தென்கிழக்கு ஆசியாவில் 'கோவிட் 19' நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக உருவெடுத்துள்ளது சிங்கப்பூர். அங்கு அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 85 விழுக்காட்டினர் அந்நியத் தொழிலாளர்களாக உள்ளனர் என்பது கவனத்துக்குரியது.
மலேசியாவில் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 9 வரை நீட்டிப்பு

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் அமலில் உள்ள நிபந்தனைகளுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மொகிதின் யாசின் இன்று அறிவித்தார்.
சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகே அரசு இம்முடிவை எடுத்ததாக அவர் இன்று தொலைக்காட்சி வழி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்.
"கோவிட் 19 நோய்க்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் விரும்புகிறார்கள். எனவே நிபந்தனைகளுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
"தற்போதுள்ள விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும். அவற்றுள் மாற்றங்கள் இருப்பின் அவ்வப்போது அறிவிக்கப்படும்.
"எனவே எல்லைகளைக் கடந்து மேற்கொள்ளும் பயணங்களுக்கு இப்போது அனுமதியில்லை. ஜூன் 9ஆம் தேதிக்குள் நோன்புப்பெருநாள் உட்பட சில முக்கியமான தினங்கள் குறுக்கிடுகின்றன. எனினும் யாரும் தற்போதுள்ள மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.
"என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்களின் பாதுகாப்பு, உடல்நலன் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டே தடைவிதிக்கப்பட்டுள்ளது," என்றார் பிரதமர் மொகிதின் யாசின்.
பல்வேறு பகுதிகள் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லாத பச்சை மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய பகுதிகளில் வசிப்பதால் தமக்கு நோய்த்தொற்று ஏற்படாது என யாரும் நினைத்துவிடக்கூடாது என்றார்.
"கொரோனா கிருமி அமைதியாக இருக்கும் எதிரி. அதை நம்மால் பார்க்க முடியாது. ஆனால், அது எந்த நேரத்திலும் எந்த ஒரு இடத்தையும் தாக்கக்கூடியது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்," என்றார் பிரதமர் மொகிதீன் யாசின்.
மலேசியாவின் இன்றைய நிலவரம்:
மலேசியாவில் இன்று நண்பகல் நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,656 ஆக இருக்கிறது. இன்று ஒரே நாளில் 67 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் 49 பேர் வெளிநாட்டவர்களாவர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இதுவரை 108 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தர பிரதேசத்திற்கு வரும் 70 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள்
வெவ்வேறு மாநிலங்களிலிருந்து இன்று லக்னோவிற்கு 57 ரயில்கள் வருவதாக கூறுகிறார் அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் அவனீஷ் அவஸ்தி.
மேலும் அவர், “ஒரு ரயிலுக்கு சராசரியாக 1200 பேர் என வைத்துக் கொண்டாலும். 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வரலாம்,” என்று கூறுகிறார்.
இதுவரை இரண்டு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து உத்தர பிரதேசத்திற்கு வந்துள்ளனர் என்று கூறுகிறார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா உத்தர பிரதேச நிலை என்ன?
உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று உடைய ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1884 ஆக உள்ளது. மாநிலத்தில் 1504 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்கிறார் முதன்மை சுகாதாரத் துறை செயலாளர் அமித் மோகன் பிரசாத்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை
கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை 3 மணிக்கு மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் விவாதிக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
இதில் ஊரடங்கு நீட்டிக்கப்படலமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
ரஷ்யா இரண்டு லட்சத்தைக் கடந்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,012 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 209, 688 ஆக உயர்ந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொரோனாவால் 88 பேர் பலியாகி உள்ளனர். இதனை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,915 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் ரஷ்யாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் தரும் தகவலின்படி, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில்தான் அதிகப் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரமலான் நோன்பு: கொரோனாவுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பது எப்படி?
புற்றுநோயுடன் போராடும் இந்தியாவின் 'கொரோனா போர் வீரர்'
