கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 121 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல நாடுகள் முடங்கியுள்ள சூழலில், நியூஸிலாந்து, இத்தாலி, அமெரிக்கா என பல நாடுகளில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதேவேளை, இந்தியாவில் மே 3-க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா?

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சீனாவின் செயல்கள் மகிழ்வை தரவில்லை - டொனல்ட் டிரம்ப்

    Coronavirus

    பட மூலாதாரம், Getty Images

    சீனாவின் செயல்கள் மகிழ்வை தரவில்லை எனவும், கொரோனா தொற்று எங்கு தொடங்கியதோ அங்கே அதனை தடுத்திருக்க முடியும் என்றும், உலகம் முழுவதும் பரவாமல் தடுத்திருக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    கொரோனா விஷயத்தை சீனா சரியாக கையாளவில்லை என தெரிவித்திருக்கிறார்.

    சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸை சீன வைரஸ் என டிரம்ப் குறிப்பிட்டார். பின்னர், சீனாவுக்கு கொரோனா குறித்து அதிகம் தெரிந்திருக்கிறது. அவர்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்று கூறி இருந்தார்.

    இப்போது இவ்வாறாக தெரிவித்துள்ளார் டிரம்ப்.

  2. கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா

    தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர்.

    கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கியூபா மருத்துவ பணிகளில் சிறப்பாக செயல்படும் நாடாக அறியப்படுகிறது. ஆனால் மருத்துவ துறையில் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டுள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  3. இந்தியாவில் அண்மைய நிலவரம் என்ன?

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து, 435-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 62 பேர் இறந்துள்ள நிலையில், இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 934-ஆக உயர்ந்துள்ளது.

    அதேவேளையில் 6868 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 21,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  4. நியூசிலாந்தில் தளர்த்தப்பட்ட முடக்கநிலை: 4 லட்சம் பேர் பணிக்கு சென்றனர்

    கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பெரும்பாலான நாடுகள் முடக்கநிலையில் இருந்துவரும் சூழலில், இன்று (செவ்வாய்கிழமை) முதல் நியூசிலாந்தில் முடக்கநிலை படிப்படியாக தளர்த்தப்படுகிறது.

    கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் தங்கள் பணிகளுக்கு இன்று சென்றுள்ளனர். அதேவேளையில், நியூசிலாந்தில் சில பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளன.

    மேலும் உணவகங்களில் இருந்து மக்கள் உணவை வாங்கிவரவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் “அந்த போரில் வென்றுவிட்டதாக” நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் திங்கள்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸை “இல்லாது ஒழிக்கும் இலக்கை” நியூசிலாந்து அடைந்துவிட்டதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

    “இதற்கு நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றே இல்லையென்று அர்த்தம் கிடையாது. ஆனால், நோய்த்தொற்று பரவலின் அனைத்து மூலங்களையும் கண்டறிந்துவிட்டோம் என்று அர்த்தம்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுவரை நியூசிலாந்து முழுவதும் 1500க்கும் குறைவானவர்களுக்கே கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களில் 80 சதவீதத்தினர் ஏற்கனவே குணமடைந்துவிட்டனர். அங்கு இந்த தொற்றின் பாதிப்பால் 19 உயிரிழந்துள்ளனர்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  5. கொரோனா வைரஸ்: நேற்று நடந்த சில முக்கிய விஷயங்கள்

    • கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பிறகு நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருமாத இடைவேளைக்கு பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
    • கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
    • தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டியவிடுப்பு காலத்திற்கான ஊதியத்தை, நிதி நெருக்கடியின் காரணமாக ஒர் ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் “அந்தபோரில் வென்றுவிட்டதாக” நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
  6. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

    தமிழகம், இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் இன்றைய நிலவரம் குறித்து அறிய இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.