கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 121 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல நாடுகள் முடங்கியுள்ள சூழலில், நியூஸிலாந்து, இத்தாலி, அமெரிக்கா என பல நாடுகளில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதேவேளை, இந்தியாவில் மே 3-க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா?

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா சிகிச்சை: 'மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து'

    கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர்.

    "பணி நேரம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களுடன்தான் கழிக்கிறார்கள் செவிலியர்கள். வயதான நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, உடை மாற்றுவது, மலம் கழிப்பது என அனைத்துக்கும் உதவுவது செவிலியர்கள்தான் என்பதால் அவர்களுக்கு தொற்று உண்டாகும் ஆபத்து அதிகம்," என்கிறார் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர்.

  2. குறைந்த வங்கியின் லாபம்

    எச்.எஸ்.பி.சி வங்கியின் முதல் காலாண்டு லாபம் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது பாதியாக குறைந்துள்ளது. கொரோநா வைரஸ் தாக்கமே இதற்கு காரணம் என வங்கி கருதுகிறது.

    2019 ஆம் ஆண்டு 6.2 பில்லியன் டாலராக இருந்த வரி விதிப்புக்கு முந்தைய வருவாய் இப்போது 3.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது

    அதே நேரம் எண்ணெய் விலை வீழ்ச்சியின் காரணமாக வாராக்கடன் 3 பில்லியன் டாலராக உயரும் என வங்கி கூறுகிறது

  3. கொரோனா வைரஸ்: இந்திய நிலவரம்

    Corona

    பட மூலாதாரம், GOI

    Corona

    பட மூலாதாரம், GOI

    கொரோனா

    பட மூலாதாரம், GOI

  4. கொரோனா வைரஸ் மருந்திற்கான ஆய்வு: இந்தியா எப்படி பெரிய பங்கு வகிக்கிறது தெரியுமா?

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் மருந்தை உருவாக்க பணியாற்றி வருவதாக நேற்று இரவு, அமெரிக்க உள்துறை அமைச்சரான மைக் பாம்பே கூறினார்.

    இது முற்றிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலான தகவல் இல்லை.

    கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, நோய்களுக்கு மருந்து உருவாக்கும் ஒரு கூட்டு திட்டத்தை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செய்து வருகின்றன.

    டெங்கு, இன்புளூவென்சா, காசநோய் ஆகியவற்றை குணப்படுத்த இவர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். டெங்குவிற்கான மருந்தை சோதித்து பார்க்கும் திட்டமும் வருங்காலத்தில் உள்ளது.

  5. சென்னை: 1,027 வழக்குகள் பதிவு

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 1,027 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 649 இருசக்கர வாகனங்கள், 26 ஆட்டோக்கள், 36 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 711 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 439 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 459 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  6. கொரோனா வைரஸ்: தப்பிய நோயாளி மீண்டும் பிடிபட்டார்

    கொரோனா வைரஸ்: தப்பிய நோயாளி மீண்டும் பிடிபட்டார்

    பட மூலாதாரம், Getty Images

    சென்னை புளியந்தோப்புப் பகுதியைச் சேர்ந்த 47 வயது நோயாளி ஒருவர் திங்கட்கிழமையன்று இரவில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த வார்டிலிருந்து தப்பிச் சென்றார்.

    அவரது மனைவி, குழந்தை ஆகியோரும் கொரோனா நோய் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அவர் தனது வீட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற காவலர்களும் சுகாதாரப் பணியாளர்களும் அவரை வீட்டைவிட்டு வெளியில் வருமாறு அழைத்தனர். ஆனால், அவர் வர மறுத்தார்.

    வீட்டிற்குள் யாராவது வந்தால் அவர்களை தான் கட்டிப்பிடித்திவிடுவேன் எனவும் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு, பாதுகாப்பு கவச ஆடையை அணிந்த காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அவரை பிடித்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

  7. கொரோனா அச்சமும் தடுப்புச்சுவரும்

  8. கொரோனா வைரஸ்: சென்னை நிலவரம்

  9. கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்க காற்று மாசும் காரணமா?, உலக சுகாதார நிறுவனம் கூறுவது என்ன?

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    காற்று மாசு அளவு அதிகமாக இருந்தால் கோவிட்-19 உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.

    சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளில், காற்று மாசு அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

    காற்று மாசு அதிகம் உள்ள நாடுகள், கோவிட்-19க்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் திட்டத்தில், மாசு அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் பொது சுகாதார நிபுணர் டாக்டர் மரியா நெய்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.

    லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை தனது ஆய்வில் அந்தப் பெண்மணி முதன்மைப்படுத்திக் காட்டியுள்ளார்.

  10. கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படி மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி?

    பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய முடக்க நிலை அமல்படுத்தப்பட்டு பல வாரங்களாகிறது. அப்போது முதல், அந்த நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு வினோதமான கனவுகள் வருகின்றன.

    “மருத்துவமனையில் நான் இருக்கிறேன். நள்ளிரவு நேரத்தில் மருத்துவர் ஒருவர் எனது கையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்” என்று கூறுகிறார் எலிசா ஏஞ்சல்ஸ்.

    “அடுத்த சில கணங்களில் நான் வெறும் ஒரு கையோடு மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறேன். அந்த மருத்துவர் என் கையை வைத்து ஓடியாடி விளையாடுவதை நான் பார்த்ததாக நினைவு.”

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  11. ஆட்சி பணியாளர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    கொரோனா தடுப்புக்காக உருவாக்கப்பட்ட 12 குழுக்களை நிர்வகிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

  12. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடைபெறாது

    olympics

    பட மூலாதாரம், Getty Images

    அடுத்தாண்டுக்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்றால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடத்தப்படாது என ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

    இவ்வாண்டு நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

    இப்படியான சூழலில், கொரோனா அடுத்தாண்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ரத்து செய்யப்படலாம் என டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.

    கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் ஒலிம்பிக் நடத்துவது கடினமான ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

  13. விதி மீறல் தொடர்பாக தமிழகத்தில் 3,45,357 பேர் கைது

    ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 3,45,357 பேர் கைதுசெய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விதிமீறல்கள் தொடர்பாக 3,26,645 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் வலம்வந்த 2,93,193 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    3.40 கோடி ரூபாய் அபராதமாக வசூல்செய்யப்பட்டுள்ளது.

  14. கொரோனா பலி எண்ணிக்கை: அரசுகள் மறைக்கின்றனவா?

    கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கையை அலுவலபூர்வமான தரவுகளில் அரசுகள் சேர்ப்பதில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்தோனீஷியாவில் கொரோனாவால் பலியான 2200 பேரை கொரோனா பலி எண்ணிக்கையில் அந்நாடு சேர்க்கவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

  15. கொரோனா வைரஸ் அழிந்தவுடன் ரோபோக்களால் மனிதனுக்கு வரப்போகும் ஆபத்துகள்

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 'இதையெல்லாம் சமாளித்துவிடலாம். ஆனால்' எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

    பணியிடங்களில் மனித வள ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    ரோபோக்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து பல புத்தகம் எழுதி இருக்கும் மார்ட்டின் ஃபோர்ட், உரையாட சக மனிதன் தேவை என்ற நிலையை கொரோனா வைரஸ் பரவல் மாற்றி இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். கொரோனா காரணமாக இப்போதே பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்தத் தொடங்கிவிட்டன. வால்மார்ட் தரைகளைச் சுத்தப்படுத்தவும், தென் கொரியா கைகளை சுத்திகரிக்க சேனிடைசர் வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.

    2021ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த சமயத்தில் பல இடங்களில் ரோபோக்களின் பயன்பாடு அதிகமாகும், இது எதிர்காலத்தில் பெரும் சவாலாகவும், பேரபாயமாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

  16. உலகெங்கும் களமிறங்கிய கியூபா மருத்துவ படை

  17. புதுச்சேரி அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி தற்காலிக சிறைச்சாலையாக மாற்றம்

    Corona

    கொரோனா நோய்த்தொற்று பரவும் சூழலில், குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளைப் புதுச்சேரி மத்தியச் சிறையில் அடைப்பதற்கு முன்பு, கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, 15 நாட்கள் தனிமைப்படுத்தப் புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரி தற்காலிக சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை இயங்கி வருகிறது. இங்கே தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் சிறு குற்ற வழக்குகளில் சிறையில் உள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில், புதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறையிலிருந்த 80க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் பிணையில் விடுதலை செய்தனர். மேலும், சிறையிலுள்ள கைதிகளுக்கு மருத்துவக்குழு பரிந்துரையின் அடிப்படையில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் புதிய குற்றவாளிகளுக்கு நோய்த் தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர்கள் மூலமாக நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, மாநில அரசின் ஒப்புதலுடன் புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தற்காலிக சிறைச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்கள். இதற்காகப் பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து குறிப்பிட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி வளாகம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்காக வருகிறது.

    "புதிதாகக் கைது செய்யப்படும் விசாரணை கைதிகளை கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக 15 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக மட்டுமே இந்த பள்ளி மற்றும் கல்லூரியில் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளனர்.

  18. எமதர்மன் ஊர்வலம், மக்களை வீட்டில் இருக்க வைக்க புதிய முயற்சி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    சமூக முடக்கத்தை மக்கள் மதித்து, கொரோனாவுக்கு அஞ்சி மக்கள் வீட்டில் இருக்க ஆந்திராவின் ஶ்ரீகாகுளம் மாவட்ட நிர்வாகம் விநோத முயற்சியை எடுத்துள்ளது.

    அதாவது, சாரணர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் எமதர்மன் போல வேடமிட்டு மக்களுக்கு கொரோனா குறித்து மக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

  19. திருவனந்தபுரத்தில் கொரோனா இல்லை

    Coronavirus

    பட மூலாதாரம், Getty Images

    திருவனந்தபுரத்தில் கொரோனா தொற்றுடையவர் எவரும் இல்லாததால் ‘கொரோனா ஹாட்ஸ்பாட்' என வரையறுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து திருவனந்தபுரம் நீக்கப்பட்டுள்ளது என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. கொரோனா வைரஸ் முடக்கத்தின் போது நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்களா?, இதுதான் காரணம்

    Foody

    பட மூலாதாரம், Getty Images

    "மன அழுத்தம் மற்றும் சலிப்பின் காரணமாக நாம் அதிகம் சாப்பிடுவோம். செய்வதற்கு வேறொன்றும் இல்லை", என்கிறார் இங்கிலாந்தின் ஷெஃப்ஃபீல்ட் நகரில் இருக்கும் 19 வயதான க்ளோ டைலர் வித்தம்.

    ஊரடங்கின் பேரில் வீட்டுக்குள்ளே இருப்பதால் நம்மில் பலர், அதிகம் நோகாமல் கிடைக்கும் உணவை சாப்பிடுகிறோம்.

    அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும்போது புதிதாக சமைக்கப்பட்ட உணவை வாங்குவதற்கு பதில், டைலர் வித்தம் வீட்டில் இருக்கும் மீத உணவை மீண்டும் சமைக்கிறார். அதற்கான செய்முறையை அவர் டிக்டாக் மூலம் கண்டறிகிறார்.