நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், கடந்த மார்ச் மாத மத்தியில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை மே 4ஆம் தேதி முதல் தளர்த்தப்படுகிறது. அதேவேளையில் இந்தியாவில் முடக்கநிலை தொடர்பாக என்ன முடிவெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சீனா பரப்பி வருகிறது என்ற குற்றச்சாட்டை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் “அந்தபோரில் வென்றுவிட்டதாக” நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரஸ்பாதிப்புமுதன்முதலில்கண்டறியப்பட்டசீனாவின்பல்வேறுபகுதிகளில்இன்று (திங்கட்கிழமை) மீண்டும்பள்ளிகள்திறக்கப்பட்டன.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பிறகு நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருமாத இடைவேளைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பணிக்கு திரும்பினார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டியவிடுப்பு காலத்திற்கான ஊதியத்தை, நிதி நெருக்கடியின் காரணமாக ஒர் ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கியதில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு செலவினமும் ஏற்படவில்லையெனவும் மேலும் புதிதாக அந்த கிட்களை வாங்குவதற்கு செய்யப்பட்டிருந்த ஆணைகள் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில்,ரேபிட் டெஸ்ட் கிட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குறித்து விசாரிக்க வேண்டுமெனக் கூறியிருந்தனர்.
இந்த நிலையில்,இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்திருக்கும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதில் எந்தத் தவறும் நடக்கவில்லையெனக் கூறியிருக்கிறார்.
"Antibodyகளை அடிப்படையாகக் கொண்ட ரேபிட் கிட்களை வாங்க, 7நிறுவனங்களை ஐசிஎம்ஆர் பட்டியலிட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த வோன்ஃபோ நிறுவனம், அவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்ய கேடிலா ஃபார்மா,மேட்ரிக்ஸ் லேப் ஆகிய இரு நிறுவனங்களை நியமித்திருந்தது. இந்த நிறுவனங்கள் இந்தியா முழுவதும் பல டீலர்களுக்கு அனுமதியளித்துள்ளன. இவற்றுள் ஆர்க் பார்மசூட்டிகல்ஸ்,ரேர் மெடபாலிக்ஸ்,ஷான் பயோடெக் ஆகியவையும் அடங்கும்.
ஐசிஎம்ஆர் அமைப்பு ஐந்து லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆர்க் பார்மசூட்டிகல்ஸிடம் வாங்க ஆணை பிறப்பித்தது. மத்திய அரசு அனுமதியளித்த விலையில்,ஷான் பயோடெக் நிறுவனத்திடம் தமிழக அரசு வாங்கும் ஆணையை பிறப்பித்தது.
மத்திய அரசு வழங்கும் அனுமதியானது பொருட்களுக்கான அனுமதி. அதில் டீலர்கள் பெயர் இருக்காது. ஆகவே வோன்ட்ஃபோன் நிறுவனத்தின் பெயர் மட்டுமே இருக்கும். ஷான்பயோடெக்கின் பெயர் இருக்காது. அதைப் புரிந்துகொள்ளாமல் ஐசிஎம்ஆர் பட்டியலில் அந்தப் பெயர் இல்லையெனக் கூறுவது அபத்தமானது. மத்திய அரசின் ஐசிஎம்ஆரும் இதுபோன்ற டீலர்களிடமிருந்துதான் ரேபிட் கிட்களை வாங்கியுள்ளன.
அனைத்து நாடுகளும் இவற்றை போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிய சூழலில்,இவற்றை வாங்குவதே கடினமாக இருந்தது. இருந்தபோதும் வெளிப்படைத் தன்மையுடன்ஷான் பயோடெக்கிடமிருந்து அந்த கிட்கள் வாங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் ஆந்திர அரசு730ரூபாய்க்கும் கேரள அரசு699ரூபாய்க்கும் ஐசிஎம்ஆர் அமைப்பே இரண்டாவது கொள்முதலில்795ரூபாய்க்கும் கொள்முதல் ஆணைகளை வழங்கியது. ஆனால்,தமிழ்நாடு600ரூபாய்க்கே இதனை வாங்கும்ஆணையை பிறப்பித்தது.
ஐசிஎம்ஆர் ஆணையின்படி தமிழ்நாடு அரசு வாங்கியிருந்த24000கிட்களும் திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆகவே தமிழக அரசுக்கு இதில் எந்த செலவும்இல்லை. எஞ்சியுள்ள அனைத்து கொள்முதல் ஆணைகளும் ரத்துசெய்யப்படுகின்றன"என மாநில சுகாதாரத் துறை அமைச்சரின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்களும், ஸ்டார்டப் நிறுவனத்தினரும் இணைந்து பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் குறைந்த விலையிலான செயற்கை சுவாசக் கருவிகளை கண்டுபிடித்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்குதல் பரவிவரும் நிலையில், முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முகத்தை முழுவதுமாக பாதுகாக்கும் முகக்கவசத்திற்கான வடிவமைப்பை கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிஞ்சா அகதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்தகைய தகவல்கள் ரோஹிஞ்சாக்கள் மீது மலேசியர்கள் கோபம் கொள்ளும் வகையில் இருப்பதாகவும், இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள ரோஹிஞ்சாக்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும், மலேசிய குடியுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மலாய்க்காரர்களை புத்தியற்றவர்கள் என்று விமர்சித்தும் சமூக ஊடகங்களில் அண்மைய சில தினங்களாக பல்வேறு பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான தனது செய்தியாளர்கள் சந்திப்பில், இதுவரை டிரம்ப் 2 லட்சத்து 60 வார்த்தைகளை பேசியுள்ளார்.
அவர் பேசிய அந்த வார்த்தைகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்தனர்.
”அதில் பெரும்பாலும் டிரம்ப் தன்னைதானே பாராட்டிக் கொள்கிறார்; சுமார் 600 முறை அவர் தன்னைத்தானே பாராட்டியிருக்கிறார் ஆனால் அவை பெரும்பாலும் அதிகப்படியாக கூறப்பட்டவை என்றும், பொய்கள் என்றும் கூறப்படுகிறது.” என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் பிறரையும் பாராட்டுகிறார். ஆனால் 360 முறை அவர் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் அதே சமய 110க்கும் மேலான எண்ணிக்கையில் அவர் பிறர் மீது குற்றங்களையும் சுமத்தியிருக்கிறார்.
அவர் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பேசியதோ அல்லது நாட்டின் ஒற்றுமை குறித்து பேசியதோ 160 முறை. இது அவர் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டதில் கால்வாசிதான் என்கிறது அச்செய்தி.
சுமார் 10 முறை அவர் ஒபாமா குறித்தும், 30 முறை ஒபாமாவின் நிர்வாகம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அதில் பெரும்பாலும் முந்தைய நிர்வாகம் மோசமான ஒரு சூழலில் நாட்டைவிட்டுவிட்டுச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார் என்று மேலும் விளக்குகிறது நியூயார்க் டைம்ஸின் செய்தி.

பட மூலாதாரம், New York Times
பெண்கள் ஆளும் நாடுகளில் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவல் - யார் இந்த பெண் தலைவர்கள்?
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், 81 பேர் அந்நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937ஆக உயர்ந்தாலும் சிகிச்சையில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 809ஆக குறைந்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 33 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தமாக 52 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் புதிதாக 47 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நான்கு பேருக்கும் விழுப்புரத்தில் ஒருவருக்கும் இந்நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் இந்நோய்த் தொற்று ஏற்படவில்லை.
இன்று தொற்று ஏற்பட்டவர்களில் 4 பேர் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள். குறிப்பாக விழுப்புரத்தில் ஒரு வயது குழந்தைக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 7,176 மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 94,781 மாதிரிகள் கொரோனா சொதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
இன்று 81 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இந்நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1101ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சீனா பரப்பி வருகிறது என்ற குற்றச்சாட்டை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
கடந்த வாரம் வெளிவந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை ஒன்றில், சமூக ஊடகங்களில் சீனா ரகசியமாக செயல்பட்டு வருவதற்கான ”முக்கிய ஆதாரங்கள்” இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா குறைத்து சொல்கிறது என பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புகின்றனர்.
இன்று நடைபெற்ற தினசரி செய்தியாளர்கள் சந்திப்பில், ”எந்த ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ கோவிட் 19 குறித்த தவறான தகவல்களை உருவாக்குவதற்கும், பரப்புவதற்கும் எதிராக சீனா உள்ளது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.
சீனா அந்த தகவல்களை பரப்பவில்லை மாறாக அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
”இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து, சீனா அதுகுறித்த தகவல்களை, வெளிப்படையாகவும், பொறுப்புடனும் பகிர்ந்து வருகிறது. சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்த தொற்று பரவலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், எங்களால் முடிந்த வரை பிற நாடுகளுக்கு உதவியும், ஆதரவும் வழங்கி வருகிறோம். அந்த முயற்சி சர்வதேச அளவில்பாராட்டுகளையும் பெற்றுள்ளது.” எனவும் அவர் தெரிவித்தார்.
பிசிஜி தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கொரோனா வைரஸ் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என இதற்கு ஆதாரமாக அமெரிக்க கல்லூரி ஒன்றில் வெளியான ஆய்வையும் சுட்டிக்காட்டி சிரியா, இந்தியா என பல நாடுகளில் இப்போதும் ஒரு தகவல் உலவுகிறது. ஆனால் அந்த ஆய்வு சொல்வதென்ன? இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஸ்வீடனில் உள்ள உணவகங்கள், பார்கள், மற்றும் விடுதிகளில்வர்த்தகம் பெருமளவில் சரிந்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவை அனைத்தும் ஸ்வீடனில் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது.
அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் இம்ராஹிம் பெய்லன், ”உணவுகள், விடுதிகள், பார்களின் வர்த்தகம் சராசரியாக 50 சதவீத அளவு குறைந்துள்ளது. சுற்றுலாத்தலங்களில் 90 சதவீதம் அளவு வர்த்தகங்கள் குறைந்துள்ளன.” என தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
நேரமின்மை காரணமாக ஆலோசனையின்போது பேச இயலாத முதலமைச்சர்கள் ஃபேக்ஸ் மூலம் தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைக்க கூறப்பட்டது.
அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோதிக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்
நாம் குப்பை என தூக்கி எறியும் கண்ணாடி பாட்டில்களை கொண்டு அழகிய வண்ணப் படைப்புகளை செய்து, அதை விற்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய சென்னை பள்ளி மாணவி
கடந்த 24 நேரத்தில் இந்தியாவில் 1396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 892ஆக உயர்ந்துள்ளது என இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 184ஆக உயர்ந்துள்ளது. குணமடைவர்களின் விகிதம் 22.17 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
”கடந்த 14 நாட்களில் இந்தியாவில் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.” என்றும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்த பிரதமர் நரேந்திர மோதி, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேசியதாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய தகவல்களைக் கீழே தொகுத்தளித்துள்ளோம்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவுக்கான 'துரித சோதனைத் தொகுப்பு'களை (Rapid Test Kit) சீனாவிலிருந்து இந்தியா வாங்கும்போது கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாடும் இதே கூடுதல் விலைக்கு இவற்றை வாங்கியுள்ள நிலையில், தில்லி உயர்நீதிமன்றம் இவற்றின் விலையைக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசு கொரோனா சோதனைகளைப் பெரிய அளவில் நடத்துவதற்காக துரித சோதனைத் தொகுப்புகளை பெரும் எண்ணிக்கையில் வாங்குவதற்குத் திட்டமிட்டது. ஐசிஎம்ஆர் மூலம் இவற்றை வாங்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, மார்ச் 27ஆம் தேதியன்று ஐசிஎம்ஆர் ஐந்து லட்சம் துரித சோதனைத் தொகுப்புகளை வாங்குவதற்கான ஆர்டரை செய்தது. இந்தத் தொகுப்புகள் சீன நிறுவனமான வோன்ட்ஃபோவால் தயாரிக்கப்பட்டவை.
இந்த துரித சோதனைக் கிட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வது மேட்ரிக்ஸ் என்ற நிறுவனம். மேட்ரிக்ஸ் நிறுவனம் 245 ரூபாய் என்ற விலையில் இவற்றை இறக்குமதி செய்து, ரியல் மெடபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மசூட்டிகல்ஸ் ஆகியவற்றுக்கு அனுப்பும். இந்த நிறுவனங்கள், ஐசிஎம்ஆர்-க்கு ஒரு கிட்டை 600 ரூபாய் விலைக்குக் கொடுக்கும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஈட்டிய விடுப்பு காலத்திற்கான ஊதியத்தை,நிதி நெருக்கடியின் காரணமாக ஒர் ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஈட்டிய விடுப்பிற்கான ஊதியம் ஓராண்டிற்கு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதற்காக விண்ணப்பித்திருந்தாலும் அந்த விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவை நிறுத்திவைக்கப்படும் என்றும் இது அரசு நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள்,உள்ளூராட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கும் பொருந்துமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறைக் காலத்தை பயன்படுத்தாவிட்டால்,வருடத்திற்கு அதிகபட்சமாக15நாட்கள் என இரு ஆண்டுகளுக்கு30என சேர்த்துவைத்து,அந்த நாட்களுக்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.இதனையே தற்போது அரசு நிறுத்திவைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதுபோலவே பல்வேறு நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் இருந்து, இந்த வைரஸ் எங்கு உருவானது, இது எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பது பற்றிய யூகங்கள் மற்றும் சதித்திட்டம் என்ற ரீதியிலான குற்றச்சாட்டுகள் ஆன்லைனில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் சீனாவின் ``கோழைத்தனமான உயிரி ஆயுதத் திட்டம்'' என்றொரு தகவலும் சமூக ஊடகங்களில் பரவியது. கனடா - சீன உளவுக் குழு ஒன்று கொரோனா வைரஸை வுஹானுக்கு அனுப்பியது என்ற ஆதாரமற்ற தகவலும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் மனிதர்களால் பரிசோதனை நிலையத்தில் உருவாக்கப்பட்டது தான் என்ற குற்றச்சாட்டு முகநூல், ட்விட்டர் தளங்களில் பரவி வருகிறது. ரஷியாவின் அரசு தொலைக்காட்சிச் சேனலிலும் கூட இது இடம் பிடித்துள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்று தொடங்கி சில மாதங்களாகிவிட்ட நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறையவில்லை என்பது மட்டுமின்றி, சீனா மற்றும் அமெரிக்காவில் சில அரசு அதிகாரிகள், மூத்த அரசியல்வாதிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் உறுதி செய்யப்படாத புதிய புகார்களை முன்வைத்துள்ளனர்.
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் “அந்த போரில் வென்றுவிட்டதாக” நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் நியூசிலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கொரோனா வைரஸை “இல்லாது ஒழிக்கும் இலக்கை” நியூசிலாந்து அடைந்துவிட்டதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
“இதற்கு நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றே இல்லையென்று அர்த்தம் கிடையாது. ஆனால், நோய்த்தொற்று பரவலின் அனைத்து மூலங்களையும் கண்டறிந்துவிட்டோம் என்று அர்த்தம்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நியூசிலாந்தில் இன்று புதிதாக ஒரேயொரு நோய்த்தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.
இதுவரை நியூசிலாந்து முழுவதும் 1500க்கும் குறைவானவர்களுக்கே கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களில் 80 சதவீதத்தினர் ஏற்கனவே குணமடைந்துவிட்டனர்; 19 உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images