You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

உலகெங்கும் 20 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு

பிரேசிலில் 99 வயதான இரண்டாம் உலகப் போரில் போரிட்ட வீரர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. இத்தாலியில் 578 உயிரிழப்புகள்

    இத்தாலியில் புதன்கிழமையன்று கொரோனா தொற்றால் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதன்மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,645ஆக உயர்ந்துள்ளது.

    உலகளவில் அமெரிக்காவிற்கு பிறகு இத்தாலியில்தான் கொரோனா தொற்றுக்கு அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.

  3. அடக்கம் செய்ய இடமில்லாமல் தவிக்கும் உலக நாடுகள்

    கொத்து கொத்தாக குவியும் சடலங்கள்... அடக்கம் செய்ய இடமில்லாமல் தவிக்கும் உலக நாடுகள்.

  4. மும்பையில் தவறான செய்தியை பரப்பியதாக செய்தியாளர் கைது

    ஏப்ரல் 14 அன்று ஊரடங்கு முடிந்து மீண்டும் ரயில்கள் இயங்கும் என்ற தவறான செய்தியை தெரிவித்து, பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் கூட காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ராகுல் குல்கர்னி என்ற அந்த செய்தியாளர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என மும்பை காவல்துறை துணை ஆணையர் அபிஷேக் த்ரிமுகே தெரிவித்துள்ளார்.

  5. புதன்கிழமை நடந்த முக்கிய நிகழ்வுகள்

    • உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
    • அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • நிதியை நிறுத்த இது சரியான நேரம் அல்ல என்று ஜநா தலைவர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்தார். டிரம்பின் முடிவு ஆபத்தானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
    • கடந்த 5 நாட்களில் இல்லாத அளவிற்கு ஸ்பெயினில் ஒரே நாளில் 5,100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,77,633ஆக உயர்ந்துள்ளது.
    • டென்மார்க்கில் நர்சரி மற்றும் தொடக்க நிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
    • ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
    • உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது.
  6. ஆப்பிரிக்காவின் நிலை என்ன?

    • ஏப்ரல் 18ல் இருந்து 21 நாள் ஊரடங்கு அமலில் வரும் என மலாவி நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
    • முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கென்யா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு அபராதமோ அல்லது 6 மாத சிறை தண்டனையோ வழங்கப்படும்.
    • கொரோனா இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் 33,000 நபர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் பரிசோதனை செய்யப்படும் என்று ஜிம்பாப்வே தெரிவித்துள்ளது. இதுவரை அங்கு 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  7. பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்?

    இனி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? உலக வங்கியின் கணிப்பு

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியது

    உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது.

    இந்த எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டிய இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே தற்போது இந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது.

    ஆனால், உண்மையான தரவுகள் இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 761 பேர் மரணம்

    24 மணி நேரத்தில் பிரிட்டன் மருத்துவமனைகளில் புதிதாக 761 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

    அங்கு இதுவரை 12,868 மரணங்கள் பதிவாகியுள்ளன.

  10. உங்கள் கைகளை முறையாக கழுவுவது எப்படி?

    கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் முறையாக எப்படி கைக்கழுவ வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதை விளக்குகிறது இந்த காணொளி.

  11. உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது

    உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

    சுமார் 1,30,000 பேர் இத்தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

    இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. அங்கு இதுவரை 26,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    3 மாதங்களுக்கு முன் மத்திய சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரசால் முதல் ஒன்றரை மாதத்தில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

    ஏப்ரல் 2ஆம் தேதி கொரோனா தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது. தற்போது அது இரட்டிப்பாகி உள்ளது.

  12. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பேசியது என்ன?

    • தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
    • உடல் கவசம், முகக் கவசங்கள் தேவையான அளவு உள்ளது; எந்தத் தட்டுப்பாடும் இல்லை. களத்தில் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது
    • தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.
    • பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று இல்லாத நிலையில், உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
    • செவிலியர்களை அரசு சார்பில் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களே முன் வந்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பணியாற்றுகிறார்கள்.
    • தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது; இந்தியாவிலே பொது சுகாதாரம் வலுவான மாநிலம் தமிழகம் தான்
  13. "தண்ணீர் இல்லை" - 7.4 கோடி மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம்

    கைகளை கழுவ போதுமான தண்ணீர் இல்லாததால் அரபு பிராந்தியத்தில் சுமார் 7.4 கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

    மேலும் அங்கு 8.4 கோடி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதிகூட வீடுகளில் இல்லை என்பதால் அவர்கள் பொதுவான நீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனாலும் இந்த பெருந்தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழநாட்டில் மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இன்று கோவிட்-19 தொற்றால் இருவர் இறந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால் இறந்தவரக்ளின் எண்ணிக்கை 14 ஆகியுள்ளது.

  15. கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய 99 வயது போர் வீரர்

    பிரேசிலில் 99 வயதான இரண்டாம் உலகப் போரில் போரிட்ட வீரர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

    பிரேசிலின் பீரங்கிப்படையில் இருந்து ஆப்பிரக்காவில் போரிட்ட எர்மான்தோ பிவெட்டா, இத்தொற்றில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது பலரும் இசைக்கருவிகள் இசைத்து, கைத்தட்டி ஆரவாரம் எழுப்பினர்.

  16. இலங்கை ரூபாய் மதிப்பு

    அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 195.78ஆக பதிவாகியுள்ளது.

    கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200-ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியா துரிதமாக நடவடிக்கை எடுத்தது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

    சீனாவில் ஜனவரி 7 அன்று கொரோனா தொற்று கண்டறியப்படவுடன், ஜனவரி 8ஆம் தேதியே இந்தியா நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மிக விரைவிலேயே நடவடிக்கை எடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், ஜனவரி 8ஆம் தேதி வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தி, ஜனவரி 17 அன்று சுகாதார ஆலோசனைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

    கோவிட் 19 தொற்றை கையாள்வதில் இந்தியாவிற்கு அடுத்த 2 - 3 வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்கள், எந்த கொரோனா தொற்று பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

    "பிகாரின் நிலை மோசமாக இல்லை. ஆனால், மகாராஷ்டிராவின் நிலை தற்போது மோசமாகவே இருக்கிறது. குறிப்பாக மும்பை. கர்நாடகா மாநிலமும் அப்படித்தான். ஆனால், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள் இதனை எதிர்கொள்ளும் நம்பிக்கையில் இருக்கிறார்கள்" என அவர் தெரிவித்தார்.

  18. உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியை நிறுத்திய டிரம்ப் - சீனா என்ன சொல்கிறது?

    உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

    சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "பெருந்தொற்றின் இக்கட்டான சூழலில் அமெரிக்காவின் முடிவு கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது" என தெரிவித்தார்.

    அதேபோல அதிபர் டிரம்பின் முடிவிற்கு ஜெர்மனியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    "இந்த நேரத்தில் மற்றவர்களை குற்றஞ்சாட்டுவது உதவாது" என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹைக்கோ மாஸ் கூறினார்.

    மேலும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்துவதன் மூலமாகவே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

  19. மும்பை தாராவியில் வாழும் தமிழர்கள் நிலை என்ன?

    "300 குடும்பங்களுக்கு வெறும் 5 கழிப்பறைகள்தான் உள்ளன. காலையில் இதனை பயன்படுத்த அவ்வளவு கூட்டம் இருக்கும். இந்த சூழலில் எப்படி கொரோனாவிலிருந்து நாங்கள் தப்பிப்பது?" - மும்பை தாராவி தமிழர்களின் அவல நிலை

  20. கொரோனா தொற்றை மனிதர்களுக்கு பரப்பிய விலங்கு எது?

    கொரோனா வைரஸ் தொற்று வெளவாள்களிடம் இருந்து, எறும்புண்ணிகளுக்கு பரவி, அந்த விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை விஞ்ஞானி கங்ககேத்கர் தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்களும் இதுகுறித்து கண்காணித்தோம். இரண்டு வகையான வெளவாள்கள் இருக்கின்றன. அவற்றுக்கு கொரோனா தொற்றை மனிதர்களுக்கு பரப்பும் ஆற்றல் இல்லை. இது மிகவும் அரிதானது. 1000 ஆண்டுகளில் ஒருமுறை வெளவாள்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பிருக்கலாம்" என்று கூறினார்.