You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இந்த வாரம், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: ஆளும் கூட்டணியின் வெற்றி எதை காட்டுகிறது?, "அதிமுக, பாஜக உரசல் தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போடுமா?, பெரியார் சொன்னபோது மறுத்த சமூக நீதி பாதையை காங்கிரஸ் இப்போது கையில் எடுக்க என்ன காரணம்?, பாலியல் கொடுமை குறித்து மனம் திறந்த குஷ்பு - "என் அப்பா எனக்கு செய்த பாலியல் துன்புறுத்தல்", மூன்றாவது முறையாக சீன அதிபராகி வரலாறு படைத்தார் ஜின்பிங், நித்தியானந்தாவின் கைலாசா போல உங்களுக்கும் சொந்த நாடு வேண்டுமா? - இப்படி செய்தால் கிடைக்கும்? என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
அதிமுக, பாஜக உரசல் தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போடுமா?
அதிமுக - பாஜக உறவில் ஏற்பட்டுள்ள உரசல், விரிசலாகி நிரந்தரப் பிரிவாகுமா? அல்லது கடந்து செல்லும் மேகம்போல இந்த கசப்புணர்வு காலவோட்டத்தில் கரைந்து போய், பரஸ்பர தேவைகள் காரணமாக மீண்டும் இரு கட்சிகளும் ஒட்டிக்கொள்ளுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் சூடாக விவாதிக்கப்படுகிறது. முழு விவரம் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
பெரியார் சொன்னபோது மறுத்த சமூக நீதி பாதையை காங்கிரஸ் இப்போது கையில் எடுக்க என்ன காரணம்?
சமீபத்தில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வில் பல முற்போக்கான சமூக நீதித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்வைத்திருக்கிறது.கட்சியின் முந்தைய தடுமாற்றங்களில் இருந்து விலகி, புதிய பாதையைத் தேர்வு செய்கிறது காங்கிரஸ். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? இது பலனளிக்குமா? முழு விவரம் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
பாலியல் கொடுமை குறித்து மனம் திறந்த குஷ்பு - "என் அப்பா எனக்கு செய்த பாலியல் துன்புறுத்தல்"
"சிறு வயதில் எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பெரும் பாரத்தைக் கீழே இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்திருக்கிறது" என்கிறார் குஷ்பு. இந்த லிங்கை க்ளிக் செய்து முழுமையாக அறியவும்.
மூன்றாவது முறையாக சீன அதிபராகி வரலாறு படைத்த ஜின்பிங்
சீன அதிபர் ஷி ஜின்பிங், அந்நாட்டின் பொம்மை நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுள்ளார். மாவோவுக்குப் பிறகு சீன தலைவர்கள் இருமுறை மட்டுமே அதிபர் பதவியை வகித்துள்ளனர். அவருக்குப் பிறகு தற்போது ஷி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக சீன அதிபர் பதவியை வகிக்கிறார். முழு விபரம் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
நித்தியானந்தாவின் கைலாசா போல உங்களுக்கும் சொந்த நாடு வேண்டுமா? - இப்படி செய்தால் கிடைக்கும்
இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தான் ஒரு தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தார். அதற்கு கைலாசா என்றும் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போலவே நீங்களும் சொந்த நாட்டை உருவாக்கலாம். எப்படி என்பதை இங்கு பார்ப்போம். முழு விவரம் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.