யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்கள்

பட மூலாதாரம், Getty Images
யுபிஎஸ்சி என்று அழைக்கப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் திங்களன்று 2021ஆம் ஆண்டின் குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
1. இதில் ஷ்ருதி ஷர்மா என்ற பெண் முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அன்கிதா அகர்வால் என்ற பெண்ணும், மூன்றாம் இடத்தை காமினி சிங்க்லா என்று பெண்ணும் பிடித்துள்ளனர்.
2. இந்த தேர்வில் மொத்தம் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில் 244 பேரும், ஒபிசி பிரிவில் 203 பேரும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர் 73 பேரும் எஸ்சி பிரிவில் 105 பேரும் எஸ்டி பிரிவில் 60 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
3. தமிழகத்தை சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ இந்த தேர்வில் இந்திய அளவில் 42ஆவது இடத்தை பிடித்துள்ளார். தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
4. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், மத்திய அரசு பணியில் குரூப் ஏ மற்றும் குரூப் பி இடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் தேர்வுகளை நடத்துகிறது.
5. இந்த தேர்வுகள் ப்ரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் நடைபெறும்.
6. 2021ஆம் ஆண்டுக்கான எழுத்து தேர்வுகள் இந்த ஆண்டு ஜனவரி மாதமும், நேர்காணல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்றன.
7. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ மற்றும் குரூப் பி என மொத்தம் 749 காலி பணியிடங்களில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 685 பேர் பணியமர்த்தப்படுவார்கள்.
8. தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "இந்தியா தனது வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் இருக்கும் இந்த தருணத்தில் குறிப்பாக நாம் 'அசாதி கா அம்ரித் மஹாட்சவ்' கொண்டாடத்தில் (75 ஆவது சுதந்திர தின விழா) உள்ள நேரத்தில் தங்களின் நிர்வாக பணிகளை தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்." என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















