You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டூல் கிட் வழக்கு: திஷா ரவியை 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
விவசாயிகள் போராட்டம் தொடர்புடைய சில தொகுக்கப்பட்ட சர்ச்சை ஆவணங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய விவகாரத்தில் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவியை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நடுவர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஆகாஷ் ஜெயின் முன்னிலையில், 5 நாள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து திஷா ரவி வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
"தற்போதைய நிலையில், திஷா ரவிக்கு தொடர்ந்து போலீஸ் காவல் தேவையில்லை. அவருடன் சேர்த்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாந்தனு முகுல், நிகிதா ஜேக்கப் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும்போது திஷாவிடமும் விசாரணை நடத்த வேண்டிய தேவை எழும்," என்று காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட கூடுதல் நீதிபதி ஆகாஷ் ஜெயின், திஷா ரவியை மூன்று நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முகுல் மற்றும் ஜேக்கப், வரும் 22ஆம் தேதி காவல்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, திஷா ரவியை காவலில் வைக்கக் கோரிய காவல்துறை தரப்பு மனுவை நிராகரிக்குமாறு அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வழக்கில் காவல்துறையினர் முறையாக போலீஸ் டயரியை பராமரிக்காத நிலையில், வழக்குடன் தொடர்புடைய சாட்சியங்கள் அல்லது ஆதாரங்கள் என கருதப்படுபவற்றை காவல்துறையினர் அழிக்கலாம் என அச்சம் எழுகிறது என்று திஷா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வழக்கில் திஷா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை சனிக்கிழமை நடைபெறவுள்ளது என்றும் அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், திஷா ரவி உள்ளிட்டோரின் கைது தொடர்பாக காவல்துறை நடத்தி வரும் விசாரணை விவரங்கள் ஊடகங்களில் சகிந்து வருவதாகவும் அது தொடர்பானத தகவல்கள் மற்றும் காவல்துறையின் ட்வீட்டுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய நிலையில், இந்தக் கோரிக்கை மீது உத்தரவிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி பிரதிபா எம். சிங், "காவல்துறை வழக்கு விசாரணையின் எந்தவித கசிந்த தகவலையும் ஊடகங்கள் வெளியிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தங்கள் தரப்பில் இருந்து காவல்துறைக்கு விசாரணை தகவல்கள் கசியவில்லை என காவல்துறை தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்," என்று கூறினார்.
என்ன வழக்கு?
டெல்லி மற்றும் அதன் எல்லை மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தி வரும் போரட்டத்துக்கு ஆதரவாக டூல் கிட் ஆவணம் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஒரு ஆவணம் பகிரப்பட்டு வருகிறது. அதில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கவும் அதை எப்படி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடும் வழிமுறைகள், உலக அளவிலான போராட்டங்களின் உத்திகள் போன்ற விவரம் இருந்ததாகவும் பொதுமக்கள் பங்களிப்புடன் அந்த போராட்டங்கள் எப்படி கடுமையாக இருக்க வேண்டும் என்றும் யோசனைகள் உள்ளன. இந்த டூல் கிட் ஆவணத்தை தமது சமூக ஊடக பக்கங்கள் வாயிலாக பரப்பிய குற்றச்சாட்டின்பேரில் திஷா ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே ஆவணத்தை சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்கும் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த ஆவணத்துடன் தொடர்புடைய பகிர்வுக்கு மூல காரணமாக இந்தியாவுக்கு வெளியே உள்ள சில சக்திகள் இயங்குவதாக சந்தேகம் தெரிவித்த டெல்லி காவல்துறை, காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் விவசாயிகள் போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டியது. இதைததொடர்ந்து டூல் கிட் ஆவணம் தொடர்புடைய வழக்கை டெல்லி சைபர் கிரைம் காவல்துறை விசாரணைக்கு மாற்றி நகர காவல்துறை ஆணையர் கடந்த மாதம்
பிற செய்திகள்:
- சக்ரா - திரை விமர்சனம்
- Drishyam - 2: திரை விமர்சனம்
- உசிலம்பட்டியில் 7 நாட்களே ஆன குழந்தை கொலை - பாட்டி கைது
- "திமுக ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பாயும்"
- அ.தி.மு.கவுக்கு உரிமை கொண்டாடும் சசிகலா: சிக்கலை ஏற்படுத்துமா 13 அம்சங்கள்?
- கல்வான் தாக்குதலில் 5 பேர் மரணம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட சீன ராணுவம்
- செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் - இது என்ன செய்யும்?
- ஐபிஎல் ஏலம்: கோடி கோடியாய் கொட்டிய அணிகள் - 'வலிமை' பெற்றதா சென்னை சூப்பர் கிங்ஸ்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: