நடிகை விஜயசாந்தி பாஜகவில் இணைகிறார்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு காங்கிரசில் இருந்து விலகினார்

பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இணைகிறார்.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களைப் பெற்றதை அடுத்து விஜயசாந்தி காங்கிரசில் இருந்து விலகினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த அவர், திங்கள்கிழமை பாஜகவில் இணைகிறார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய்குமார், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் விஜயசாந்தியுடன் அமித்ஷாவை சந்திக்கச் சென்றனர்.
1990களில் தனது அரசியல் பயணத்தை பாஜகவில் இருந்து தொடங்கிய விஜயசாந்தி, பிறகு தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் என்று அடுத்தடுத்த கட்சிகளுக்கு மாறிய பிறகு கடைசியில் தற்போது பாஜகவுக்கே திரும்பி வருகிறார்.
பிற செய்திகள்:
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
- அயோத்தி பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும் - 165 ஆண்டு வரலாறு
- மத்தியப் பிரதேச 'லவ் ஜிகாத்' சட்டம்: 10 ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
- பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ரஷ்யாவில் தொடங்கியது
- ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் - அடுத்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








