You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணா சாண்டி: அரசு வேலை பெண்களுக்கு அவசியம் என முழக்கமிட்டவர்
இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்தியப் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது.
அதில் ஏழாவது அத்தியாயம் அண்ணா சாண்டியின் கதை.
இன்றைய கேரள மாநிலத்தின் அங்கமாகிவிட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1905ஆம் ஆண்டு பிறந்த அண்ணா சாண்டி, அந்த மாநிலத்தில் சட்டம் படித்த முதல் மலையாள பெண் ஆவார்.
'ஸ்ரீமதி' என்ற பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் என்ற முறையில், தனது பத்திரிகை மூலம் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திய இவர் பெண்களின் பல்வேறு உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.
இந்த தொடரின் பிற காணொளிகள்:
- முத்துலட்சுமி ரெட்டி: இந்திய வரலாற்றில் வேரூன்றிய ஆளுமை
- சந்திரபிரபா சைக்கியானி: பெண்களுக்கு திரைபோடும் வழக்கத்தை ஒழித்து ஒளி பாய்ச்சியவர்
- சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டாயத் திருமணத்தை எதிர்த்த ரக்மாபாய்
- இந்தர்ஜித் கௌர்: சிறுமிகளின் கல்வி, உரிமைகளுக்காகப் பாடுபட்ட பெண்
- வரலாற்றில் பெண்கள்: யார் இந்த ருகியா சகாவத் ஹுசைன்?
- தக்காணத்தின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் சுக்ரா ஹுமாயூன் மிர்சா
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: