காஷ்மீர்: செல்ஃபோன் இணைய சேவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

காஷ்மீர்: மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது செல்ஃபோன் இணைய சேவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

காஷ்மீரில் செல்ஃபோன் இணைய சேவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக கூறுகிறது பி.டி.ஐ செய்தி முகமை.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சட்டப்பிரிவு 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் இணைய சேவை 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

காஷ்மீர்: மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது செல்ஃபோன் இணைய சேவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காஷ்மீரில் காலவரையறையின்றி இணையதளத்தை முடக்கி வைப்பதை அனுமதிக்க முடியாது என்று, தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து ஜனவ்ரி 18 ஆம் தேதி, முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்பேசி சேவைகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அப்போதும் இணையதள சேவைகள் தொடங்கப்படவில்லை.

இப்படியான சூழலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செல்பேசி இணையதள சேவைகள், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: