You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை: நான்கு மாடி கட்டடம் சரிந்தது; பலர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பு
பிரசுரிக்கப்பட்டது
மும்பை டோங்கிரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகள் இடையே சிக்கி இருக்கலாமென அஞ்சப்படுகிறது.
டோங்கிரி டாண்டல் தெருவில் உள்ள கேசர்பார் கட்டடம் காலை 11.40 மணி அளவில் இடிந்துள்ளது.
தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தரைதளம் மற்றும் மூன்று மாடிகள் இடிந்து விழுந்துள்ளது. மீட்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவியை நாடி உள்ளோம் என்று தீயணைப்பு படை வீரர் ஒருவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்