"பாலியல் அடிமைகள்" பிரச்சினையைத் தீர்க்க ஜப்பான் முன்னெடுப்பு

பிரசுரிக்கப்பட்டது

இரண்டாம் உலகப் போர் காலத்தில், கொரியப் பெண்களை ஜப்பான் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தது தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையே மிகநீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ஜப்பான் முயற்சிகளை எடுத்து வருகிறது.

"பாலியல் அடிமைகள்" பிரச்சினை இன்னும் தென் கொரியாவில் உணர்வுபூர்வமான ஒரு விஷயமாகவே உள்ளது.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, "பாலியல் அடிமைகள்" பிரச்சினை இன்னும் தென் கொரியாவில் உணர்வுபூர்வமான ஒரு விஷயமாகவே உள்ளது.

இச்சர்ச்சைத் தொடர்பில் அரச நிதியம் ஒன்றை ஜப்பான் ஏற்படுத்துவதற்கு திட்டங்களைத் தீட்டியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

"சுகமளிக்கும் பெண்கள்" எனக் கூறப்பட்ட இந்தக் கொரியப் பெண்கள், ஜப்பானிய இராணுவத்தின் விடுதிகளில் பாலியல் அடிமைகளாக பலவந்தமாகப் பயன்படுத்தப்பட்டனர்.

சோலிலுள்ள ஜப்பானியத் தூதரகம் முன்பாக வைக்கப்பட்டுள்ள சிலை "பாலியல் அடிமைகளை" நினைவுபடுத்துகிறது

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, சோலிலுள்ள ஜப்பானியத் தூதரகம் முன்பாக வைக்கப்பட்டுள்ள சிலை "பாலியல் அடிமைகளை" நினைவுபடுத்துகிறது

மிகநீண்ட காலாமாக நிலவி வரும் இந்த உரசல்கள் குறித்து தீர்வு ஒன்றை எட்டும்படி தமது வெளியுறவு அமைச்சர் ஃபுயுமோ கிஷிடாவுக்கு, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே உத்தரவிட்டுள்ளார்.

கிஷிடா அடுத்தவாரம் தென் கொரியா செல்லும்போது, இப்பிரச்சினையை பேசி முடிக்க ஜப்பானியப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பில், முன்னர் ஜப்பான் கோரியிருந்த மன்னிப்புகள் போதிய அளவில் இல்லை என தென் கொரியா தெரிவித்திருந்தது.

பேச்சுவார்த்தைகளை விரைவாக முன்னெடுக்க இருநாடுகளும் இணங்கிய பிறகு, அவர்களிடையேயான உறவுகள் மேம்படத் தொடங்கின.