பிபிசி தமிழ் மூலம் 'படைக்கலாம் உங்கள் கனவு உலகத்தை'

படைக்கலாம் உங்களது கனவு உலகத்தை பிபிசி தமிழ் Make More of Your World
பிரசுரிக்கப்பட்டது

பிபிசி உலக சேவைக்கு உங்களை வரவேற்கிறோம்!

பிபிசி உலக சேவை வெவ்வேறு மொழிகளிலும், வெவ்வேறு தளங்களிலும் தரம் மற்றும் தாக்கத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் நேயர்களுக்கு செய்திகளை வழங்குகிறது. வானொலி, தொலைக்காட்சி, இணையதளம், செல்பேசி செயலிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் 42 மொழிகளில் உலக மக்களுக்கு செய்திகளை வழங்கி வருகிறது பிபிசி.

பிபிசி உலக சேவையின் செய்திகள் மற்றும் காணொளிகளை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாரம்தோறும் படிக்கவும் பார்க்கவும் செய்கிறார்கள்.

உலகெங்கிலுமுள்ள பரந்துபட்ட கலாசாரங்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளில் பிபிசி ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

பிபிசி நியூஸ்-இன் உலக சேவை எதைச் செய்தாலும் அது நேயர்களாகிய உங்களை மனதில் வைத்தே செய்யப்படுகிறது.

தற்போது பிபிசி மேற்கொண்டு வரும் ''படைக்கலாம் உங்கள் கனவு உலகத்தை'' எனும் முன்னெடுப்பும் இதற்கு விதிவிலக்கல்ல.

பிபிசி நேயர்களாகிய நீங்கள் மிகப்பெரிய கனவுகளுடன் இருக்கிறீர்கள்; உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் தாக்கம் உங்கள் கிராமம், நகரம் அல்லது மாநகரத்தில் மட்டும் ஏற்படக்கூடியது அல்ல; அது இந்த உலகம் முழுமைக்குமானது. ஏன், இந்த உலகையும் கடந்தது.

அதுதான் உங்களது சிறப்பியல்பு; உங்கள் மீதும் உங்கள் பின்னணி மீதும் உங்களுக்கு நம்பிக்கை உண்டு. நீங்கள் என்ன செய்கிறீர்கள், எந்த வகையில் செய்கிறீர்கள் என்பதன் மதிப்பையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

உங்களது தனி உலகம் வாய்ப்புகள் நிரம்பிக் கிடக்கும் வெளி உலகத்தின் ஓர் அங்கம். பிபிசி உலக சேவையின் நேயர்களாகிய நீங்கள், குறிப்பாக இளைஞர்கள், சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை எங்கள் தரவுகள் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம்.

படைக்கலாம் உங்களது கனவு உலகத்தை பிபிசி தமிழ் Make More of Your World

உங்கள் கைவசம் என்ன உள்ளது, உங்கள் பின்புலம் என்ன என்பதைப் பற்றி கவலைப்படாமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள்.

உங்களை நீங்களாகவே முன்னேற்றிக் கொண்டு கூட்டத்திலிருந்து தனித்துத் தெரிய வேண்டும் என்பது உங்கள் இலக்காக உள்ளது. மிகப்பெரிய வெற்றியாளர் ஆவதற்கான வேட்கை அது.

நீங்கள் உலகைப் புரிந்து கொள்ளவும் அந்த உலகில் உங்களைப் பொருத்திக் கொள்ளவும் பிபிசி உலக சேவை உங்களுக்கு உதவி செய்கிறது. எளிதாகச் சொல்ல வேண்டுமானால் உங்கள் கனவு உலகத்தை படைப்பதற்கு பிபிசி உங்களுக்கு உதவி செய்கிறது.

செய்தி என்று வரும்பொழுது நாங்கள் அதைப் படிப்பவர்களைப் பற்றி மட்டும் நினைப்பதில்லை. மக்கள் வாழ்வில் நடந்த கதைகளைப் பற்றித்தான் நாங்கள் சிந்திக்கிறோம்.

''படைக்கலாம் உங்களது கனவு உலகத்தை'' என்று நாங்கள் கூறும்பொழுது நேயர்களாகிய உங்களுக்கு எதை வழங்க முடியும் என்பதே எங்கள் கவனமாக இருக்கிறது.

இந்த பரந்து விரிந்துள்ள உலகத்துக்குள் உங்கள் உலகைப் பொருந்தச் செய்வது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள உதவும் செய்திகளை வழங்கவே நாங்கள் விரும்புகிறோம்.

பிபிசி உலக சேவையின் ''படைக்கலாம் உங்களது கனவு உலகத்தை'' எனும் இந்த முன்னெடுப்பு செய்தியைப் படிக்கும் உங்களின் கண்ணோட்டத்திலேயே மக்களின் கதைகளைச் சொல்லி உங்களுக்கு ஊக்கமும் உந்துதலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தங்கள் கனவு உலகத்தைப் படைக்கும் மக்களை நாங்கள் இதன் மூலம் கொண்டாடவுள்ளோம். மக்களிடமும் அவர்களின் வாழ்க்கைக் கதைகளிலும் செய்திகள் எப்படியான நேர்மறை தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதை குறித்தே இந்த பிரசார முன்னெடுப்பு.

பிபிசி தமிழ் நேயர்கள் தங்கள் உலகத்தை எங்கள் செய்திகள் மூலம் எவ்வாறு பெரிதாக்க முடியும் என்பதை நாங்கள் காட்டுவோம்.

இன்னும் அதிக எண்ணிக்கையிலான நேயர்களை சென்றடைவதற்காக வெவ்வேறு இந்திய மொழிகளில் தொலைக்காட்சி, வானொலி, ஓ.டி.டி, சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் மூலம் பிரசார முன்னெடுப்பு ஒன்றை பிபிசி முன்னெடுத்து வருகிறது.

படைக்கலாம் உங்களது கனவு உலகத்தை பிபிசி தமிழ் Make More of Your World

இந்தப் பிரசாரம் மூலம், உங்களுக்கு நம்பிக்கையையும் உலகைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தையும் வழங்கக்கூடிய பல கதைகளை தொகுத்தளித்து ஊக்கமும் உந்துதலும் வழங்குகிறோம். ஏனென்றால் உங்கள் உலகம் மேலும் பெரிதானால் எதுவும் சாத்தியமே.

இந்தப் பிரசாரத்தில் நீங்களும் பல வழிகளில் பங்கெடுக்க முடியும்.

நீங்கள் உங்கள் கனவு உலகத்தை படைத்தவர் அல்லது உங்களுக்கு தெரிந்த யாராவது ஒருவர் அவரது கனவு உலகத்தை படைத்து இருக்கிறார் எனில் எங்களுக்கு நீங்கள் இந்த முகவரியில் எழுதுங்கள் my.story@bbc.co.uk 

எங்கள் பிரசார முன்னெடுப்பில் இடம்பெற்று உங்கள் நம்பிக்கை தரும் கதை மூலம், உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு உந்துதலாக இருப்பதற்கான வாய்ப்பாக இது அமையும்.

பிபிசியின் இன்ஸ்டாகிராம் ஃபில்டரை பயன்படுத்தி எங்கள் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தப் பிரசார முன்னெடுப்பின் ஓர் அங்கமாக உங்கள் படத்தையும் இடம் பெற வைக்கலாம்.

இன்ஸ்டாகிராமில் ஃபில்டர்களுக்கான பகுதியில் BBC Tamil என்று தேடுவதன் மூலமாகவோ, @bbctamil என்பதை டேக் செய்வதன் மூலமாகவோ நீங்கள் இந்த ஃபில்டரை உங்கள் இன்ஸ்டாகிராம் பதிவில் இடம் பெறச் செய்யலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: