ஆமதாபாத் விமான விபத்து: மருத்துவமனை வெளியே கதறும் உறவினர்கள்

ஆமதாபாத் விமான விபத்து: மருத்துவமனை வெளியே கதறும் உறவினர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாகக் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

"என் சகோதரியும் அவரது கணவரும் விமானத்தில் இருந்தனர். எங்களை இப்பகுதியில் அனுமதிக்க மறுக்கிறார்கள். அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன.

முதலில், ஒன்றரை மணி நேரத்துக்கு நாங்கள் தெருக்களில் அலைக்கழிக்கப்பட்டோம். இங்கே இருங்கள். இல்லை இங்கே இருக்காதீர்கள் என கூறிக்கொண்டே இருந்தனர். எங்களது உறவினர்களை பார்க்க வந்திருக்கிறோம். அங்கும் இங்கும் அலைவதற்கு அல்ல" என்று மருத்துவமனை முன்பாக இருந்த ஒரு பயணியின் உறவினர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு